22 மே 2021

அமமுகவினரின் புது அவதாரம்!

        டிடிவி தினகரனிற்கு ஆதரவாக, அதிமுகவை சகட்டுமேனிக்கு எதிர்த்து மூன்று பயர் விட்டவர்களும், டிடிவியை சாதி ரீதியாக ஆதரித்து சக சாதிக்காரரான ஓ.பி.எஸ்ஸை கடுஞ்சொல்லில் விமர்சித்தவர்களும், சின்னம்மா, தியாகத்தலைவி என மூச்சு முன்னூறு தடவை சொல்லி இணையத்தில் அமமுகவிற்காக செயல்பட்டவர்களெல்லாம் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு திடீரென திமுக பக்கம் செல்வதை கண் கூடாக பார்க்க முடிகிறது.

         இதற்கிடையே, எம்.பி.சி உள் ஒதுக்கீட்டை எதிர்க்கிறோமென வன்னியர்களையும், எடப்பாடி பழனிசாமியை எதிர்க்கிறோமென கொங்கு வெள்ளாள கவுண்டர்களையும், தென் தமிழகத்தில் பகைமை சக்திக்களாக்கிய சம்பவங்களால் சாதிய மோதலுக்கே கொண்டு செல்லுமளவுக்கு ஒரு கட்டத்தில் நிலைமை சென்றடைந்ததையும் மறக்க முடியாது.
 
        இப்படியான சூழல்களையெல்லாம் தாண்டி, தேர்தல் அரசியலில் அமமுகவின் ஓட்டு சதவீதம் 2%க்கு குறைவான அளவில் பதிவானதால், அமமுகவின் தீவிர ஆதரவாளர்கள், இணைய செயற்பாட்டாளர்கள் என காட்டிக் கொண்டவர்களில் பெரும்பான்மையனோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் திமுக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்திருக்கின்றனர். ஒருசிலர் வெளிப்படையாகவே, தினகரனுக்கு பதிலாக ஸ்டாலின் படத்தை ப்ரொஃபைல் படமாக மாற்றிக்கொண்டு, 'இனி திமுகவில் பயணிக்கின்றேன்' என சொன்னதையும் பார்க்க முடிந்தது. வேறு சிலரோ, டிடிவி அண்ணனுக்கே நம்பிக்கை துரோகம் செய்து விட்டீர்களே என விரக்தியில் பேசி, அரசியல் பதிவுகளிலிருந்து ஒதுங்கி நிற்பதையும் காண முடிகிறது. இதுபோன்ற நிகழ்வுகளை தொடர்ச்சியாக கவனிக்கும் பொழுது, 'அரசியலில் இதெல்லாம் சாதாரணம்' என்பதைத்தான் சமீபத்திய நிகழ்வுகள் வெளிக்காட்டிக் கொண்டிருக்கின்றன.

- இரா.ச. இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக