24 மே 2021

பத்மசேஷாத்ரி பள்ளியில் பாலியல் அத்துமீறல்!


        பி.எஸ்.பி.பி.பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர் ராஜகோபாலன் பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகும் பொழுது, வெறுமனே தவறு செய்ததன் அடிப்படையில் அவரை பணியிடை நீக்கம் செய்வதால் மட்டுமே எல்லாம் சரியாகி விடாது. பாலியல் சீண்டல்களுக்கு ஆளான பாதிக்கப்பட்ட மாணவிகளையும், அவர்களது பெற்றோர்களையும், இந்நேரம் அந்த பள்ளி நிர்வாகம் மிரட்டி இருக்கக்கூடும். அரசுக்கோ, ஊடகங்களுக்கோ நம் பள்ளி ஆசிரியர் பற்றி இனி தகவல்களை கொடுத்தால், உங்கள் கல்வி உள்பட எதிர்காலமே பாதிக்கப்படுமென பாடமெடுத்திருப்பார்கள். எனவே, பத்ம சேஷாத்திரி பள்ளி நிர்வாகத்தையே கேள்விக்குள்ளாக்க வேண்டும்.

        ஆன்லைன் வகுப்பிலேயே மாணவிகளை பாலியல் தொந்தரவு கொடுக்கு ஆசிரியர்கள், சிறப்பு வகுப்புகள், தனி வகுப்புகளென என்னென்ன செய்திருப்பார்களென விசாரணை செய்ய வேண்டும். விஷ்ணுவிஷால் நடிப்பில் வெளிவந்த 'ராட்சசன்' படத்தில், மிகத்தெளிவாக இம்மாதிரிதான பாலியல் தொந்தரவு கொடுக்கின்ற ஆசிரியரின் கொடுஞ்செயல்களை விரிவாக காட்சிப்படுத்திருப்பார்கள். பார்க்கவே பதைபதைப்பாக இருக்கும். இந்த பாலியல் சீண்டலுக்கு தனிப்பட்ட ஆசிரியர் மட்டும் பொறுப்பல்ல. இப்படியான வக்கிரபுத்தியுள்ள நபரை பணியில் அமர்த்தி, அவருக்கு கட்டற்ற சுதந்திரம் கொடுத்த, நிர்வாகத்திற்கும் முழு பொறுப்பு உண்டு. எவ்விதமான தண்டனையாக இருந்தாலும் பத்மசேஷாத்திரி பள்ளி நிர்வாகத்திற்கு சமவிகிதத்தில் பகிர்ந்தளிக்க அரசு முன்வர வேண்டும்.

- இரா.ச. இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக