28 மே 2021

நிலையான தர்மம்! அனுபவக்கட்டுரை


        நிலையான தர்மம் என்பது இன்றைய நாளில் சமூக ஊடகங்களில்லாம் (லேப்டாக் வாங்கித்தருமாறு கோரிக்கை வைத்திருந்த சபரி மாலா அவர்களின் பதிவின் எதிரொலியாக) பரபரப்பாக பேசப்படும் வாத்தையாக மாறிவிட்டதனால், அதெ பெயரிலேயே இதையும் எழுத தொடங்குகிறேன்.

        எனக்கு தெரிந்த முகநூல் நண்பர் புதிதாக ஒரு நூல் எழுதிருப்பதாக சொன்னார். புத்தகத்திற்கு சரியான தலைப்பு சொல்லச்சொல்லி தொலைபேசியில் அழைத்து கேட்டதையடுத்து, ஒரு பெயரையும் சொன்னேன். அவருக்கு அது பிடித்ததனால், அந்த நூலுக்கு அந்த பெயரே சூட்டப் பட்டிருந்தது. அந்த நூல் வெளியீடு தொடர்பாகவும், நூல் சம்பந்தமான தகவல்களையும் தனிப்பதிவாக பதிந்து பலரையும் டேக் செய்திருந்தார் என்னைத்தவிர.

        நூலில், முன்னுரை, தொகுப்புரை, நன்றியுரை, என்னுரை என என்னனென்னவோ இருந்த பொழுதும் கூட, என் சிறு பங்களிப்பை பற்றி எங்குமே வாய் திறக்கவில்லையென்றே நினைக்கின்றேன். நானும் மனசு கேட்காமல் அந்த பதிவிற்கே சென்று கேட்டும், அந்த பெயரை இன்னொருவரும் சொன்னாரென மழுப்பலாக பதிலளித்தார். இது நடந்து ஓரண்டுக்கு மேலிருக்கும்.

        சென்றாண்டு போல, இம்முறையும் புது நூலுக்கு தலைப்பு வேண்டி பதிவிட்டிருக்கிறார் அந்த நண்பர். நான் ஏற்கனவே சொல்லிருந்த அந்த தலைப்பை சுட்டிக்காடி, அது போல மற்றுமொரு தலைப்பு வேண்டுமென பலரை டேக் செய்து பதிவிட்டிருக்கிறார். நல்லவேளையாக இம்முறையும் என்னை டேக் செய்யவில்லை.

நான் என்ன, 'என் சமூகக்களப்பணிக்கு புதிய லேப்டாப் ஒன்று தேவை. வாய்ப்புள்ளவர்கள் ஆன்லைன்லில் ஆர்டர் செய்து வாங்கித்தர' சொல்லியா கேட்டேன். ஒரு விருது வழங்கும் மேடையில் இயக்குனர் சசிகுமார் சொன்னது போல, ஒவ்வொரு சின்னஞ்சிறு மனசும், சின்ன பாராட்டுக்களுக்கும், சின்ன அங்கீகாரத்தும் தானே காத்து கிடக்கிறது?! அந்த நிலையான தர்மத்தை So Called எழுத்தாளர்கள் செய்ய மறுப்பதேன்? பலரை கவனித்திருக்கிறேன். என் பதிவை காப்பி பேஸ்ட் செய்பவர்கள் கூட, கீழேயுள்ள என் பெயரை மட்டும் மெனக்கெட்டு நீக்கிவிட்டுத்தான் தங்களது டைம்லைனில் பகிர்கின்றனர். இதெல்லாம் எந்த மாதிரியான மனநிலையென்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. நிலையான தர்மம் இல்லாத இதுபோன்ற சூழல்களில் மெளனித்தே கடந்தே செல்கிறேன்.

- இரா.ச. இமலாதித்தன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக