22 மே 2021

ஊரடங்கு கோரிக்கை வைக்கும் நபர்கள் யாரார்?

தளர்வுகளற்ற முழு ஊரடங்கு வேண்டுமென கோரிக்கை வைப்பர்கள் யாராரென பார்த்தால்,

01. கல்வித்துறையில் அரசாங்க பணியிலுள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாதவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள்.

02. பெற்றோரின் அரசு ஓய்வூதியமே மாதம் லட்சக்கணக்கில் வாங்கும் குடும்ப உறுப்பினர்கள்.

03. வெளிநாட்டில் தேவைக்கு அதிகமாக சம்பாரித்து விட்டு, ஊரில் செட்டிலானவர்கள்.

04. வீடுகள், கடைகள் என வாடகைக்கு விட்டு அதில் வருமானம் பார்ப்பவர்கள்.

05. வெளிநாட்டில் குடியுரிமை பெற்று அங்கேயே வசிக்கும் மகன்/மகளின் வருமானத்தை கொண்டு இங்கே சுகபோகமாய் வாழும் நபர்கள்.

06. தன் மூததையர் சொத்துகளால் குத்தகை மூலம் பலனடைபவர்கள்.

07. வீ.ஆர்.எஸ் வாங்கி கொண்டு, ஷேர் மார்க்கெட்டில் இன்வெஸ்ட் செய்து ஆன்லைனிலேயே சம்பாரிக்கும் ஆட்கள்.

08. வொர்க் ஃப்ரெம் ஹோம் என வீட்டிலிருந்து கொண்டே மாதச்சம்பளத்திற்கு இடையூறு இல்லாத அலுவலர்கள்.

        இப்படியாக இன்னும் பல வழிகளில் மாதாமாதம் பல்லாயிரம் ரூபாய்கள் வருமானத்தால் பலனடைந்து கொண்டிருக்கும் நபர்கள் இங்கே பலருண்டு. அவர்களெல்லாம் பால், மருந்து, காய்கறி, இறைச்சி, மளிகை என எதற்குமே வீட்டை விட்டு வெளியவே வராத, ஆன்லைனிலேயே ஆர்டர் செய்து படிதாண்டா பணக்காரர்கள். வேலையாட்களை வைத்து கொண்டு அவர்களுக்கான எல்லாவற்றையும் கவனித்து கொண்டு, டிவி முன்பு அமர்ந்து கொண்டே தெருவில் வருவோர்களை அவர்களால் ஏளனம் செய்ய முடியும்.

        மொபைலோ லேப்டாப்போ அதன் மூலம், "ரோட்ல போறவனையெல்லாம் புடிச்சு ஜெயிலுக்குள்ள போடுங்க. கொரானாவை பரப்புறதே இவங்க தான்!" என பதிவுகள் எழுதவோ, கமெண்ட் செய்யவோ, கருத்து கூறவோ அந்த படிதாண்டா பணக்காரர்களால் முடியும். ஆனால் எதார்த்தம் அதுவல்ல.

         கொரொனாவை பரப்புவது வெளியில் திரிவோரின் வேலை. அவனவன் பிழைப்பே வெளியே போனால் தான் நடக்கும் என்பதை மிடில் கிளாஸ் உள்ளிட்ட அடித்தட்டு மக்களுக்கே புரியும். இந்த எதார்த்தம் புரியாமல், சுகர், பீ.ப்பி மாத்திரைகளை சாப்பிட்டு கொண்டே மாடியிலோ, ட்ரெட் மில்லிலோ வாக்கிங் போகும் ஆட்கள் மனதிற்கு வந்ததையெல்லாம் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
 
        அன்றாடும் மன உளைச்சலில் அல்லற்பட்டு ஓடிக்கொண்டிருக்கும் (பொருளாதார பிச்சைக்காரர்களாகி போன, தனியார் தொழிலாளிகள், சிறு தொழில் செய்வோர், தினக்கூலிகள் உள்ளிட்ட) நபர்களையெல்லாம் ஏளனமாக பேசாமல் இருப்பதே படிதாண்டா பணக்காரர்களுக்கு நல்லது. இங்கே, அறிவுரை கூறவது தான் மிக எளிது. அது போல் வாழத்தான் எல்லாருக்கும் வாய்ப்புகளும் கிடைப்பதில்லை. வசதிகளும் கிடைப்பதில்லை.

- இரா.ச. இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக