கருப்பு சேர்வைக்கு வீர வணக்கம்!


மாமன்னர் மருதுபாண்டியர்கள் போலவே போரில் 'தீரன் சின்னமலை'யை வெல்ல முடியாது என்பதை அறிந்திருந்த ஆங்கிலேய வல்லாதிக்க சக்திகள், சூழ்ச்சி மூலம் தீரன் சின்னமலையையும், கருப்ப சேர்வையையும் சங்ககிரி் கோட்டையில் தூக்கிலிட்டனர். ஆடி பதினெட்டாம் நாள், ஆடிபெருக்கான இதே நாளில் வீரமரணம் அடைந்த மாவீரர்களுக்கு எம் வீர வணக்கம்!

மேலும். முனைவர் திரு மருது மோகன் அவர்களின் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய அரியதகவல்களும் கீழே இணைத்துள்ளேன்.

எனக்கு கிடைத்த தகவல் நெப்போலியனுக்கு திப்புவின் கடித்த்தை எடுத்துச் சென்று 2 அல்லது 3 ஆண்டுகள் கழித்து பதில் வாங்கி வந்து திப்புவிடத்தில் சேர்த்து விட்டு பயணத்தில் நோய் தாக்கி ஸ்ரீரங்கபட்டணத்தில் இறந்து போய்விட்டார். அவரின் செயல்திறனைப் பார்த்து நெகிழ்நத திப்பு அவருக்கு அங்கேயே சமாதி கட்ட ஏற்பாடு செய்தார் என்று கேள்விப்பட்டேன். அதனால் 30 ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீரங்கப்பட்டணம் சென்று அவரது சமாதியை தேடினேன். இல்லை என்று கூறினார்கள். ஆனால் அங்கு தொல்லியல் துறையில் பணி புரியும் ஒருவர் எனக்கு தெரிந்து ஒரு தமிழனின் சமாதி நீண்ட வருடங்கள் இருந்தது . பின்பு இதன் அடையாளத்தை அழித்து விட்டனர். என்று கூறினார். கருப்பு சேர்வை தமிழ் தவிர பிரெஞ்சு மொழியியலும் வல்லவர்.

0 உங்களது விமர்சனங்களை பகிர... சொடுக்குக!:

Post a Comment