தஞ்சை நாடாளுமன்ற நாயகர்கள்!

திமுக - திரு. டி.ஆர்.பாலு

இவரை இந்திய முழுமைக்குமே தெரியும். ஏனெனில் மத்திய கேபினட் அமைச்சராக பணியாற்றியவர். திமுகவின் முக்கிய தலைவர்களுள் இவரும் ஒருவர்.

காங்கிரஸ் - திரு. டி.கே.வி

இவரையும் தஞ்சை தொகுதி மக்களுக்கு நன்றாகவே தெரியும். ஏனெனில் தஞ்சையில் முதன் முதலாக கிராமத்து மாணவர்களின் கல்விக்காக அடித்தளமிட்ட பூண்டி பெரியவரின் புதல்வன் இவர்.

பிஜேபி - திரு கருப்பு முருகானந்தம்

இவரை இங்குள்ள பகுதிகளில் கருப்பு என்ற அடைமொழியோடு தெரியாவதவர்களே இல்லை எனலாம். மேலும் ஒட்டுமொத்த டெல்டா பகுதியில் மாநில பொது செயலாளர் என்ற மிகப்பெரிய பதவியை வகிக்கும் ஒரே அரசியல் தலைவர் இவர் மட்டுமே என்ற பெருமைக்கு உரித்தானவர்.

அதிமுக - திரு. கே.பரசுராமன்

ஆம் ஆத்மி - திரு எஸ். பழனிராஜன்

மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் - எஸ். தமிழ்செல்வி


இந்த மூன்று பேரையும் தஞ்சை தொகுதியின் பெரும்பாலான வாக்களர்களுக்கு யாருன்னே தெரியல... இதுதான் எதார்த்தம். கம்யூனிஸ்ட், ஆம் ஆத்மி கட்சிகளை விட, மாநிலத்தில் ஆளுங்கட்சியான அதிமுகவின் சார்பாக வேட்பாளரை நிறுத்தி, மத்திய சர்க்காருக்கான பிரதமர் ஆவதாக கனவு கண்டு கொண்டிருக்கும் செல்வி ஜெயலலிதாவின் வேட்பாளருக்கே இந்த நிலைமை என்ற போது கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கின்றது. ஒருவேளை நம்மளோட காலில் தானே விழுந்து கிடக்க போகிறார்கள், அவர்களை மக்களுக்கு தெரிந்தால் என்ன? தெரியாவிட்டால் என்ன? யென்று கூட செல்வி ஜெயலலிதா நினைத்திருக்கலாம். அதுவும் உண்மைதானே? கூன்பாண்டிகளின் வரிசையில் இன்னொரு அடிமை அதிமுகவிற்கு சிக்கியாகிவிட்டது. ஆனால், ஜெயிக்கணுமே... எது எப்படியோ ஆழ்ந்த அனுதாபங்கள்!

-இரா.ச.இமலாதித்தன்

0 உங்களது விமர்சனங்களை பகிர... சொடுக்குக!:

Post a Comment