07 ஏப்ரல் 2014

அரசியலாகி போன ஆன்மீகம்!

 தமிழ்நாட்டுல உள்ள காவல் தெய்வங்களான மதுரை வீரன், சுடலை மாடன், கருப்புசாமி, கருப்பண்ணசாமி, அய்யனார், இடும்பன், கருப்பன், சோணையாசாமி, மலைச்சாமி, முணியாண்டி, காத்தவராயன் போன்ற தெய்வங்களை புறக்கணித்துவிட்டு வடக்கத்திய இராமரை மட்டும் முன்னிறுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தமிழின் ஆதிகாலம் தொட்டே "மாயோன் - சேயோன் - கொற்றவை" வழிபாடு மட்டும்தானே இருந்ததாக இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. அப்படி பார்த்தால், மாயோனென்ற பெருமாளையும், சேயோனென்ற முருகனையும், கொற்றவை என்ற அம்மனையும் தானே இங்குள்ள ஹிந்து அமைப்புகள் முன்னிறுத்த வேண்டும்?

நீங்க இராமர்கோவிலை கட்டுங்க; கட்டாமல் விடுங்க. தமிழ்நாட்டிலுள்ள எத்தனையோ பிரசித்தி பெற்ற கோவில்களில் எக்கசக்கமான சிவாலயங்கள் இன்றளவும் புதுப்பிக்கப்படாமல் இடிபாடோடு பாதி உடைந்தும், மீதி சிதிலமடைந்தும், கோவிலில் கையேந்த்தும் பிச்சைக்காரர்கள் போல பரிதாபமாக காட்சி தருகின்றது! அதை சரி செய்யுங்கய்யா மொதல்ல... அதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்க வக்கில்லாமல் மதம் சார்ந்த அரசியல் செய்வது இழிவானது. செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?



- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக