மின்வெட்டு நாளில்...

தமிழகத்தில் ஆளுங்கட்சியாகவும், இந்தியாவின் எதிர்கால பிரதமராகவும் இருக்க கூடிய செல்வி ஜெயலலிதா, தற்போதுள்ள மின்வெட்டுக்கு காரணம் எதிர்கட்சிகளின் சதி யென்று வாய் கூசாமல் பொய் சொல்லி ஒவ்வொரு மேடைகளிலும் பேசி வருகின்றார். ஒருவேளை தன்னுடைய ஏற்ற இறக்க மேடை பேச்சை கேட்குறவனெல்லாம் அடி முட்டாளென்று நினைத்து விட்டார் போல செல்வி ஜெயலலிதா...

உங்களது அடி முட்டாள்தனமான வாதத்தை ஒரு பேச்சுக்கு எடுத்துக்கொள்வோமேயானால், ஆளுமை திறன்மிக்கவரென்று உங்களை சில ஜால்ராக்கள் புகழ்வார்களே, அவர்களது வாக்கு இப்போது பொய்த்து போய்விடுமே.  நான், எனது என அடிக்கடி தானென்ற தம்பட்டம் அடிப்பீர்களே, அப்படிப்பட்ட தங்களது கட்டுப்பாட்டில் தானே தமிழக அரசு உள்ளது. உங்களுக்கு தெரியாமல் தமிழ்நாடு மின்சார வாரியம் எப்படி, உங்களுக்கு எதிராக சதி செய்ய முடியும்? ஒருவேளை சதி செய்திருந்தாலும் எந்த யூனிட்டில் சதி நடந்தது என்பது கூடவா உங்களது கவனத்திற்கு வரவில்லை? தமிழ்நாட்டுல மழை வரலைன்னா கூட இனி எதிர்கட்சிகளின் சதியென்று தான் சொல்வீர்கள் போல....


இன்னும் சொல்லப்போனால், தமிழ்நாட்டில் எதிர்கட்சி என்ற ஒன்று இல்லவே இல்லையே... திரு விஜயகாந்தின் எம் எல் ஏக்களை பேரம் பேசி உங்களது காலடியில் விழ வைத்த பின்னால் எதிர்கட்சிக்கான தகுதியும் தேமுதிவிற்க்கு இல்லாமல் போய்விட்டது. மைனராட்டி அரசு என்ற சென்ற ஆட்சியாளர்களை மணிக்கொருமுறை விமர்சித்த நீங்கள் இப்போது மிகப்பெரும் மெஜாரிட்டி அரசாகத்தானே இருக்கின்றீர்கள். இதுவரை மின்வெட்டு பிரச்சனையை உங்களால் கூட சரி செய்ய முடியவில்லையே? அப்படியென்றால் அதற்கான திராணி உங்களிடம் இல்லையென்று அர்த்தம் கொள்ளலாமா?

இப்படியாக, தமிழ்நாட்டு பிரச்சனையை கூட சரிவர தீர்க்க முடியாத நீங்கள் வெறுமனே வருங்கால பிரதமர் என்ற பகல்கனவை காணுவது வேடிக்கையாகத்தான் உள்ளது என்பது ஏழை எளிய வாக்கள பெருமக்களின் பேச்சாக இருக்கிறது என்பதை எப்போது உணரப்போகின்றீர்கள்?

மின்வெட்டு நாமம் வாழ்க! பாதாள சாக்கடை நாமம் வாழ்க!

- இரா.ச.இமலாதித்தன்

0 உங்களது விமர்சனங்களை பகிர... சொடுக்குக!:

Post a Comment