05 மார்ச் 2014

காவிரி சமவெளி நாகரீகம்



பாகிஸ்தான் - இந்தியா எல்லையில் அமைந்துள்ள 'ஹரப்பா - மெகஞ்சோதாரா - லோத்தல்' யென்ற சிந்துசமவெளி நாகரீகம் தான் உலகில் பழைமையான நாகரீகமென்று பெருமபாலோனோர் சொல்லிக்கொண்டிருந்தாலும், என் அளவில் அதை என் மனம் ஏற்று கொண்டதே கிடையாது. ஏனெனில், எங்க ஊரு நாகப்பட்டினம்தான் பழைமையான ஆதிநாகரீகம் கொண்ட நகரம் என்பதை தீர்க்கமாக நம்புகிறேன். சோழர்களின் துறைமுகமான பூம்புகார் என்ற காவிரிபூம்பட்டினம் தான் உலகில் தலைச்சிறந்த நாகரிக நகரம் என்பது ஆழமான நம்பிக்கை. மேலும், சிந்து நதி நாகரிகத்தை விட காவிரி நதி நாகரிகம் ஒன்றுக்கொன்று சளைத்ததுமில்லை என்பதும் என்னளவிலான எண்ணம்.

அதனோடு தொடர்புடைய ஒன்றை இன்று இங்கே சொல்ல விருப்பபடுகிறேன். கூகுள் மேப் மூலமாக இன்று ஒரு விசயத்தை என்னால் அறிந்துகொள்ள முடிந்தது. பாகிஸ்தான் எல்லையோரம் அமைந்துள்ள ஈரான் நாட்டின் ஓரிடத்தில் "சரவண்" என்ற பகுதியும், அதனருகிலேயே "சூரன்" என்ற பகுதியும் உள்ளது. சரவண் என்றால் எம்பெருமான் முருகன் என்பது எல்லோருக்கும் தெரியும். அதுபோலவே சூரன் என்றால் எம்பெருமான் முருகன் வதம் செய்த பகைவன் என்பதும் நமக்கு தெரியும். என் கணிப்பின் படி, எங்க ஊரு நாகப்பட்டினம் அருகேயுள்ல சிக்கல் என்ற இடத்திலிருந்து வேல் வாங்கிதான் திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்வு மதம்சார்ந்த நம்பிக்கையாக இன்றளவும் பெருவிமர்சையாக கொண்டாடப்பட்டு கொண்டிருக்கின்றது. அதன்படி இந்த மேப்பில் உள்ள இந்த இரு நகரங்களின் பெயர்களை படிக்கையில் அதன் பெயர்க்காரணமும், அந்த இரு நகரங்களின் ஆதிவரலாற்று விசயங்களை பற்றியும் எனக்குள் ஆர்வமும் - எதிர்பார்ப்பும் அதிகம் ஏற்பட்டது.

- இரா.ச.இமலாதித்தன்

1 கருத்து:

  1. அருமையான கட்டுரை. நான் சிக்கலுகு வந்திருக்கேன். ஆனால் இலங்கை பழங்குடி இனம் இன்றும் வள்ளி தினைப்புனம் காவல் காத்தது அவர்களோட காட்டில்தான் என்று நம்புகிறார்கள். அது மட்டும் இல்லாமல் கந்த புராணத்தில் மகேந்திரபுரியை அழிக்க வீரபாகு இலங்கை வழி சென்றதாக இருக்கிறது

    பதிலளிநீக்கு