குயிலி - கற்பனை பாத்திரம்!குயிலி என்பதே கற்பனை பாத்திரம். ஜீவபாரதி எழுதிய புனைவு இலக்கியத்தில் வாசகர்களின் ரசனைக்காக உருவாக்கப்பட்ட பாத்திரமே குயிலி. முப்பது ஆண்டுகளுக்குள் உருவாக்கப்பட்ட குயிலி பாத்திரத்திற்கு பல்வேறு (மறவர்/சக்கிலியர்/பறையர்) சாதி முத்திரையை குத்தி, கடைசியாக இருபத்தெட்டு லட்சத்தில் நினைவு சின்னமும் தமிழக அரசாங்கம் ஏற்படுத்தி விட்டது; இது முற்றிலும் தவறான முன்னுதாரணம். இவற்றையெல்லாம் நெஞ்சுறுதியோடும் ஆதாரத்தோடும் 'ஒப்பனைகளின் கூத்து' வாயிலாக விளக்கியுள்ள குருசாமி மயில் வாகனன் அவர்களின் நேர்மைக்கும், உழைப்பிற்கும், வரலாற்று தேடலுக்கும், நன்றியும் - வாழ்த்துகளும்!
- இரா.ச. இமலாதித்தன்

0 உங்களது விமர்சனங்களை பகிர... சொடுக்குக!:

Post a Comment