04 அக்டோபர் 2017

அகமுடையார் ஆய்வுகளில், ஐயா ஒரிசா பாலு!


அகமுடையார் உறவுகளுக்கு
வணக்கம்,
மற்றுமொரு மகிழ்வான செய்தி. கடலியல் ஆய்வாளரும், தமிழர்களின் தொன்மையை வெளிக்கொணரும் நோக்கில் பழந்தமிழர்களின் வாழ்வியலை பற்றிய ஆய்வில், இத்தனை ஆண்டுகளான பலதரப்பட்ட களப்பணியில் மாற்று தமிழ் இனக்குழுக்களை பற்றிய நீண்ட ஆய்வை செய்து வந்த நம் உறவினர் ஐயா ஒரிசா பாலு அவர்கள், இனி தன்னுடைய இனக்குழுவான அகமுடையார் பற்றிய ஆய்வுகளையும் தொடங்கி இருக்கிறார். இன்னும் மூன்று மாதங்களுக்கு மேலாக அகமுடையார் சார்ந்த வரலாற்று தேடலில் தான், ஐயா இருப்பாரென நம்புகிறோம். சேர்வை - உடையார் - முதலியார் - நாயக்கர் - பிள்ளை - தேவர் உள்ளிட்ட பல்வேறான பட்டப்பெயர்களோடு பழந்தமிழ்நாடங்கெங்கும் பரவி வாழும் 85 லட்சத்திற்கும் மேற்பட்ட அகமுடையார் பேரினத்தை பற்றிய தெளிவான வரலாற்று புரிதல், இனி ஐயா ஒரிசா பாலு அவர்களாலும் விரிவடையட்டும்.
மகிழ்ச்சி.
நன்றியும் - வாழ்த்துகளும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக