01 மே 2019

தேவராட்டம் - ஓர் அலசல்!


தேவராட்டம் என்பது ராஜகம்பளத்தார் என்ற நாயக்க சாதியினரின் ஒருவகை பாரம்பரிய ஆட்டம்; மன்னரின் போர் வெற்றியை கொண்டாடும் ராஜகம்பளத்து நாயக்கர்களின் நாட்டாரியல் ஆடற்கலை தான் தேவராட்டம். இது அந்த ராஜகம்பளத்து நாயக்கர்களின் அனைத்து விழாக்களின் இயல்பாக நடைபெறும் நாட்டிய கலை. இதற்கும் மற்ற எந்த சாதிகளுக்கும் தொடர்பில்லையென்று சொல்லிக்கொண்டே இப்பதிவை தொடர விரும்புகிறேன்.

தலித்தியம் என்கிற பெயரில் பறையர் பெருமை பேசும் ரஞ்சித்தும், முக்குலத்தோர் என்கிற பெயரில் மறவர் பெருமை பேசும் முத்தையாவும் ஏறத்தாழ ஒன்று தான். இதில் நுட்பமாக கவனித்தால், முத்தையா படங்களில் வில்லன்கள் அனைவருமே கதைநாயகனின் சாதியை சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள். ரஞ்சித் படங்களிலோ, வில்லன்கள் 'சோ கால்டு' உயர்சாதியினராகவே சித்தரிக்கப் பட்டிருப்பார்கள். நடுநிலை என்பதே ஏமாற்றுவேலை. அதிலேயும் நடுநிலைவாதிகளென தங்களைத் தாங்களே காட்டிக்கொள்ளும் இணையவாசிகள், ரஞ்சித்தை சமூக போராளியென்றும், முத்தையாவை சமூக விரோதியென்றும் சமீப காலமாக கட்டமைக்க முனைகின்றனர்.

முத்தையாவின் திரைப்பட கதைக்களங்கள் யாவும் நாம் காண்கின்ற, அனுபவிக்கின்ற குடும்பச்சூழலையே பிரதிபலிக்கின்றன. ஆனால் ரஞ்சித்தின் படங்களோ, அகமுடையார் வழித்தோன்றல்களான (கபாலி) மலேயா கணபதி தேவர், (காலா) மும்பை வரதராஜ முதலியார் போன்ற நிஜப்போராளிகளின் கதைகளின் மூலத்தை திருடியோ, கோபி நயினார் போன்ற இயக்குனர்களின் (கருப்பர் நகரம்) படைப்பாக்கத்தை திருடியோ தான், தலித்திய காவியங்களாக பிரதிபலிக்கின்றன.

தயாரிப்பாளர் முதலீடு செய்த பணத்தை, பெரிய நட்சத்திர நடிகரல்லாதவர்களை வைத்தே முத்தையா இலாபமாக்கி தருகிறார். தமிழ்ராக்கர்ஸ்க்கு பிறகு திரையரங்க வருகை குறைந்த போதும், அதை தன்னளவில் பி மற்றும் சி செண்டர் ரசிகர்களையும் திரையரங்கிற்கு வரவழைத்து வசூலில் சரி செய்து வருகிறார். என்னளவில், ரஞ்சித்தை விட முத்தையா எவ்வளவோ மேல். இதை சொல்வதால், நான் முத்தையாவின் சாதியும் இல்லை; முக்குலத்தோரும் இல்லை.

- இரா.ச. இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக