14 ஆகஸ்ட் 2009

திருத்தேவூர் கோவில் வரலாறு!

தேவகுருநாதர் திருக்கோயில் - தேவூர்


இறைவன் : தேவகுருநாதர் (தேவபுரீசுவரர்,கதலிவனேசுவரர்)
இறைவி : தேன்மொழியம்மை (மதுரபாஷிணி)

இத்தலத்து இறைவனை தேவர்கள் வழிபட்டு அருள் பெற்றதாலும் , குருபகவான் வழிபட்டு அருள் பெற்றதாலும் தேவகுருநாதர் என்று இங்குள்ள இறைவன் வணங்கப்படுகிறார். கோசெங்கட் சோழன் கட்டிய மாடக் கோவில்களில் இத்தலத்து ஆலயமும் ஒன்றாகும். இத்தலத்தில் பிற்காலப் பாண்டியர், விஜயநகரத்தார் கல்வெட்டுகளும் காணப்படுகின்றன.
மூன்று நிலைகளை உடைய ராஜகோபுரத்தின் வழியாக உள்ளே நுழைந்தவுடன் தென்புறம் தேவதீர்த்தம் இருக்கிறது. மூலவர் தேவகுருநாதர்(தேவபுரீசுவரர்), இறைவி தேன்மொழியாள்(மதுரபாஷினி) ஆகிய இருவரும் கிழக்கு நோக்கி அருள் பாவிக்கின்றனர். தலவிநாயகர் வலம்புரி விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். கருவறையின் பின்புறச் சுவற்றில் எப்போதும் காணப்படும் லிங்கோத்பவருக்கு பதிலாக மகாவிஷ்னு காட்சி கொடுக்கிறார்.
இதன் வேறு பெயர்கள் கதலிவனம், விராடபுரம், அரசங்காடு, தேவபுரம் என்பன. ஊரின் நடுவே கோயில் உள்ளது. இங்கு விநாயகர், முருகர், அகலிகை வழிபட்ட லிங்கம், கௌதமர் வழிபட்ட லிங்கம், மகாலட்சுமி, அறுபத்துமூவர், நவக்கிரகம், நடராஜர்சபை, இந்திரலிங்கம், பைரவர், சந்திரன், சூரியன், சோமஸ்கந்தர் முதலிய சந்நிதிகள் உள்ளன.


திருத்தலத்தின் சிறப்புகள் :

தலமரம் :
























கல்வாழை

இத்தலத்து ஸ்தலவிருட்சம் கல்லிலேயே வளரும் அதிசய வாழைமரம் ஆகும். இது வெள்வாழை என்ற வகையைச் சார்ந்தது. தேவர்கள் இத்தலத்து இறைவனை வழிபட்டபோது தேவலோகத்தில் உள்ள வெள்வாழை
யும் இறைவனை இங்கு வழிபட்டு ஸ்தல விருட்சமாக மூலவர் அருகிலேயே அமைந்துவிட்டது. இந்த வாழைமரத்திற்கு இன்றும் நீர் ஊற்றுவதில்லை. கருங்கல்லால் ஆன கட்டுமலையில் வளர்வது இந்த ஸ்தல விருட்சத்தின் தெய்வீகத் தன்மையைக் காட்டுகிறது. கல்லில் வளர்வதால் இவ்வாழைமரம் கல்வாழை என்று அழைக்கப்படுகிறது.

திருத்தல தீர்த்தம் :

தேவ தீர்த்தம், வருண, கௌதம, மிருத மற்றும் சஞ்சீவினி முதலிய தீர்த்தங்கள்.
திருத்தல பாடல்பெருமைகள் :

திருஞானசம்பந்தர்,நாவுக்கரசர்,மாணிக்கவாசகர்,வள்ளலார்,அருணகிரிநாதர்,சேக்கிழார் ஆகியோரால் பாடப்பெற்ற தலம்.
வழிபாட்டு பலன்கள் :


  • குபேரனுக்கு பட்டம் வழங்கபட்ட ஸ்தலம் இது. செல்வம் வளரவும், இழந்த செல்வத்தை மீண்டும் பெறவும் இத்தலத்து இறைவனை வழிபட்டால் குபேரனுக்குச் சமமான செல்வத்தைப் பெறலாம்.
  • இந்திரன் தனது இந்திர பட்டத்தை இழந்தபோது இத்தலத்து இறைவனை வணங்கி சாபம் நீங்கப் பெற்றான். மீண்டும் இந்திர பட்டத்தைப் பெற்றான். ஆகையால் பதவி வேண்டுவோர், இழந்த பதவியை மீண்டும் பெற விழைவோர், வேலை வேண்டும் என தவிப்போர் இத்தலத்து இறைவன் தேவபுரீசுவரரை வழிபட வேண்டும்.
  • இத்தலத்து இறைவனை சூரியன் வழிபட்டிருப்பதால், சூரியனால் இடர்வரும் என்று எண்ணுபவர்கள் தேவபுரீசுவரரை வழிபட்டால் சூரியன் அருள் கிடைக்கும்.கார்த்திகை மாதம் ஞாயிற்றுக்கிழமை சூரிய ஒளி இறைவன் மேல் படுவதை தரிசிக்க பக்தர்கள் பெருமளவில் இங்கு வருகிறார்கள்.
  • திருமணமாகாதவர்கள், புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் தேவூர் தலத்து இறைவனை திங்கட்கிழமைகளில் வழிபாட்டால் பலன் பெறலாம்.
திருத்தல இருப்பிடம்:

இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் தேவூரில் இத்தலம் உள்ளது.நாகை - திருவாரூர் சாலையில் உள்ள கீழ்வேளூருக்கு தெற்கே 5 கி.மீ தொலைவில் திருத்துறைப்பூண்டி செல்லும் சாலையில் தேவூர் உள்ளது.திருவாரூரிலிருந்து18 கி.மீ தொலைவிலும்,நாகப்பட்டினத்திலிருந்து 18 கி.மீ. தொலைவிலும் இத்தலம் அமைந்துள்ளது.

திருத்தல முகவரி:

தேவபுரீஸ்வரர் ஆலயம்,
தேவூர் அஞ்சல்,
கிழ்வேளூர் வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம்,
தமிழ்நாடு - 611 109

நன்றி :  www.karma.org.in, www.shivatemples.com, www.shaivam.org, www.tamil-temples.co

06 ஆகஸ்ட் 2009





இன்று முதல்....

வணக்கம்.

இந்த வலைப்பதிவை யாருமே கண்டுக்கிறதே இல்லைனாலும் நான் ஒரு முடிவு பண்ணிட்டேங்க.என்ன முடிவுன்னு கேக்குறீங்களா...?
(நீங்க ஒன்னும் கேட்க்காட்டினாலும்...நான் அந்த உண்மைய சொல்ல வேண்டிய நேரம் வந்துடிச்சி.என்னை யாரும் தடுக்காதீங்க...) 

ஆமாங்க, அதை தான் நானும் சொல்ல வரேன்.கொஞ்சம் என்னான்னு கேட்டுட்டு போங்க..

இன்னைக்கு காலைல மின்னரட்டை (அதாங்க chat) ல ,என் உடன்பிறவா அண்ணன் பாலகேசன்தேவர் அண்ணா கிட்ட ரொம்பநாள் கழிச்சு பேசிட்டு இருந்தேன்.அண்ணன் US ல (US ன்னா உழவர்சந்தை இல்லைங்க அமெரிக்கா) இருக்காரு.சரி அதுகிடக்கட்டும் அவர்கிட்ட அப்போ பேசும்போது நான் சொன்னேன் "அண்ணா நானும் ஒரு வலைப்பதிவை வச்சிருக்கேன்...முடிஞ்சா பாருங்க" ன்னு சொல்லிட்டு தமிழ்வாசல் சுட்டியை அனுப்பினேன் அவருக்கு.

அண்ணாவும் பார்த்துட்டு "நல்லா எழுத ஆரம்பிச்சிருக்க...ஆனா ஒன்னு...நீ உன்னோட சொந்த படைப்புகளை மட்டும் எழுது.மத்தவங்க எழுதுனத உன் வலைபதிவுல சுட்டு போடுறதுனால உனக்கென்ன பயன்...? நீ என்ன பண்ற...? (நான் என் அலுவலகத்தில் சும்மா தான் இருக்கறேன்னு எப்படி அவருக்கு தெரியும்னு தெரியல.ஆனா சரியா சொல்லிவிட்டு ) நீயே சொந்தமா எழுது ன்னு அன்பு கட்டளையிட்டார்.

நான் உடனே "எதபத்தி ண்ணா எழுதுறதுன்னு? " கேட்டேன்....
"உனக்கு என்னவெல்லாம் தோணுதோ எழுது " ன்னு சொல்லிட்டு 
அப்பறம் அவர் சில உக்திகளை தந்தார்....
  • உன் வேலை பற்றி...
  • உன் பெற்றோர்களை பற்றி...
  • சமீபத்துல வந்துள்ள தமிழ் சினிமா (உம்.கந்தசாமி) பற்றி...
  • உன் பார்வையில் பொண்ணுங்கள பற்றி...
  • உன்னை போல் திருமணமாகாத ஆண்களின் வாழ்க்கை கடினத்தை பற்றி...
  • உன் குலதெய்வத்தை பற்றி...
  • பணம்,வசதிவாய்ப்பை பற்றி... 
  • உன் திருமண விருப்பம் பற்றி...
இப்படி நிறையா விசயம் சொன்னாரு.அப்பறம் முக்கியமா, இவையெல்லாம் உன் எழுத்து நடையிலேயே,உன் தனித்துவம் மாறாமல் எழுதனும்னு கண்டிப்பா சொல்லி முடிச்சாரு.இப்படி நிறைய வியூகங்களை எனக்களித்து என்னை ஊக்கபடுத்திய என் அண்ணனுக்கு நன்றிய இங்க சொல்லிக்கிறேன்.அதுனால இன்னைலேர்ந்து  மத்தவங்க ஆக்கங்களை சுட்டு போடுறதை நிறுத்திட்டு என் சொந்த சோக,சந்தோஷ,வெறுப்பு,விருப்பு தருணங்களை தமிழ்வாசல் ல இடுகை இட்டிடலாம்னு முடிவு பண்ணிட்டேன். 
(ஒரு தடவ முடிவு பண்ணிட்டேன்னா என் பேச்சை நானே கேக்கமாட்டேன்... )

இது முதல் தடவை என்பதால் கொஞ்சம் அப்படி இப்படி இருக்கலாம்.வரும் நாட்களில்  கொஞ்சம்,கொஞ்சம் என்னை மாத்திக்கிறேன்.
(எவ்ளவோ பண்ணிட்டோம் இத பண்ண மாட்டோமா என்ன?) 

"மாற்றம் ஒன்று தானே எப்போதும் மாறாத ஒன்று ...."

வரட்டா...அதுவரைக்கும் டாட்டா
நன்றி

(இது எதுக்குடான்னு கேக்குறீங்களா, வணக்கம்னு ஆரம்பத்துல பழக்கதோசத்துல போட்டு தொலைஞ்சிட்டேன்.அதுக்காதான் முடிவுல  நன்றி.அப்பறம் முக்கியமா என் மொக்கையையும் இவ்வளவு நேரம் படிச்சி இருக்கீங்களே அதுக்கும் சேர்த்துத்தான் இந்த நன்றி.என்னடா இவன் நன்றிக்கே இவ்வளவு நேரம் மொக்கை போடுறேன்னு நினைக்காதிங்க...எத பத்தி வேணும்னாலும் எழுதுன்னு என் குரு,என் அண்ணனே சொல்லிட்டாரே...அதுனாலதான்)

எப்பூடீ...

09 ஜூலை 2009

சாதி என்பது படித்து வாங்கிய பட்டமா...?


சாதி என்ற இந்த ஒற்றை வார்த்தை பெரியார்  காலத்திலிருந்து பிரயோகப் படுத்தி இருந்தாலும், இன்றைக்கு அந்த வார்த்தையை நம்பி தான் இப்ப நிறைய பேருக்கு பொழப்பே ஓடுது.அரசியல் தொழில் நடத்தும் பகுத்தறிவாதிகள், சாதி ஒழியவேண்டும் என்று போர்முழக்கமிட்டாலும் தன் கட்சியிலும்/ஆட்சியிலும்  ஒவ்வொரு சாதியினர்க்கும் ஒரு முக்கிய பொறுப்பு/பதவிகளை வழங்கி ஓட்டுவேட்டை காண்கிறார்கள். பதவிசுகம் காணும் இந்த மாதிரியான ஆட்( __________ )களும் பகுத்தறிவாதி யென தன்னைத்தானே அடையாளபடுத்திக்கொள்கிறார்கள். அரசியல் காட்டில் இவர்கள் வேட்டையாடப்படுவது பணம் பதவி மட்டும் அல்ல.இவர்களின் அறிக்கைகளை நம்பி வீதிக்கு வந்து போராடும் பாட்டாளிகளான, அப்பாவி மக்களின் உரிமைகள் தான் கூடவே பறிபோய் கொண்டிருக்கிறது.

ஒரு குறிப்பிட்ட சில சாதிய பிரிவினரை மட்டும் தாக்கி பேசியும், எழுதியும்,அறிக்கை விட்டும், சுகம் காணும் சுகவீனமற்றவர்களை பற்றியும் என்ன சொல்றதேன்னு தெரியலை.சாதியை ஒரு அடையாளமாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.
"சாதி என்றவொன்று தனியாக தலை தூக்குறதுக்கு முன்பு அது ஒரு தொழில் சார்ந்த,பகுதி சார்ந்த,குணாதிசயம் சார்ந்த ஒரு குறியீடாகத்தான் கணக்கிடப்பட்டது."
சாதி ஒருவரையோ அல்லது அவரது வர்க்கத்தையோ தனித்துவ படுத்தவே தேவைப்படுகிறது.ஆரம்ப காலக்கட்டங்களில்,ஒவ்வொருவரும்  அவரவர்களுக்கென தனித்துவமாய் தனக்கென ஒரு பாரம்பரியத்தையும்,ஒரு தெய்வ வழிபாட்டு முறையையும் தனக்கென ஒரு தொழிலை மூலதனமாக வைத்திருந்தனர்.அந்த பாரம்பரியத்தையும்,சடங்கு சம்பிரதாயங்களையும் நெறிப்படுத்தி  தன்  சந்ததினருக்கும் அதை புகட்டினார்கள்.தனது தொழிலையே குல தொழிலாக வைத்து அதையே தனக்குப்பின்,  தன் சந்ததினருக்கும் கற்று தந்து வழிநடத்தி சென்றனர்.அதனாலேயே அவர்களை அடையாளப்படுத்த அவர்களது தொழிலையே அவர்களது பெயருக்கு பின்னாலிட்டு அழைத்தனர்.வேறு சிலரை அவர்கள் இருக்கிற வதிவிடங்களை அவர்களது பெயருக்கு பின்னால் இணைத்தும் அழைத்தனர்.
"காலப்போக்கில் தன் குல தொழிலையே, பல சூழ்நிலைகளாலும்,அவமானம் என கருதியும் தொடர்ந்து செய்ய தவறியதும் தான், சாதிய முறை வேரூன்ற தோன்றியதற்கு காரணமாய் இருக்கலாம்."
சாதியை ஒழிக்க போறேன்னு வெற்று சத்தமிடும் இந்த கும்பல்கள் தத்தமது பிள்ளைகளையோ,பேரன்/பேத்தி களையோ பள்ளியில் சேர்க்கும் போது, படிவத்தில் கேட்க்கப்பட்டிருக்கும் மதம்/சாதி என்று இடங்களில் என்ன வார்த்தைகளை கொண்டு நிரப்பினார்களோ,அதை தான் மற்றவர்களும் செய்வார்கள் என்பதை கூட  உணரமறுக்கும் இந்த அறிவு ஜீவிகளை என்னவென்று சொல்லுவது?
"வேறு சிலரோ அரசாங்கத்தின் சலுகைக்காகவே தான் வேறு பிரிவினையை சார்ந்திருந்தாலும், தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்த சாதி பெயரிலேயே தன் குழந்தை/வாரிசுகளை பள்ளியில் சேர்க்கின்றனர்."
இப்போதெல்லாம் பகுத்தறிவாதின்னு சொல்லிக்கிற நபர்கள்தான் அதிகமாக கல்வி நிலையங்களை நடத்தி பணம் சம்பாதித்துக்கொண்டு இருக்கின்றனர்.ஏன்... இவர்கள் நடத்துகிற கல்வி நிலையங்களிலும் கூட ,சாதி பெயரில் இட ஒதுக்கிடு செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.இவர்கள் தான் எந்த அரசாங்கம் ஆட்சியில் அமர்ந்தாலும் குடை பிடிக்கிறார்களே... அப்பறமென்ன, ஆட்சியாளர்களிடம் என்றாவது சாதி அடிப்படையிலான ஒதுக்கீட்டை ரத்து செய்ய கேட்டு இருப்பாங்களா...?அப்படியே கேட்டாலும் அது வெறும் கண்ணீர் துடைப்புக்காக தான் இருக்க முடியும்.
 "கண்ணீரே வராமல் இருக்க வழிவகை செய்ய வேண்டிய இவர்கள்...வழிந்தோடி கொண்டிருக்கும் கண்ணீரை கூட துடைக்க தயங்குவது விதத்தில் நியாயம்...?"
சாதியை எதிர்த்து போராடும் எல்லா கும்பல்களும் அரசியல் நீரோட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டுதான்இருந்தன; இருக்கின்றன; இருக்கபோகின்றன. இந்த பகுத்தறிவாதிகளின் ஆதரவோடுதான் எல்லாசெயல்களும் அரசாங்கத்தால் செயற்படுத்த படுகிறது.அதையெல்லாம் கைகட்டி வேடிக்கை பார்த்து தலையாட்டிவிட்டு,ஊருக்கு வெளியே ஆர்ப்பாட்டம்,போராட்டமென அறிக்கைகளை விடுவது இவர்களின் வாடிக்கையான செயலாகிவிட்ட ஒன்று.

சாதி எதிர்ப்பு பற்றி பேசும் பகுத்தறிவாதி என்று தன்னைத்தானே அடையாள படுத்திக்கொள்ளும் இந்த கும்பல்கள் தன் மகள்/மகனின் திருமணங்களை யாருடன் திருமணம் செய்து வைப்பார்கள் என்று பார்த்தால்,ரொம்ப வேடிக்கையாக இருக்கும்.தான் சாதியிலே உள்ள வேறுசில உட்பிரிவு வரன்களை கூட வேண்டாமென தவிர்த்துவிட்டு அவர்களின் உட்பிரிவிலேயே,மருமகன்/மருமகளை தேர்ந்தெடுத்து திருமணத்தை அரங்கேற்றுவார்கள்.
"ஊருக்கு மட்டும் தான் இவர்களின் உபதேசங்கள் !"
சாதியே இல்லைன்னு மறுக்குறவன் முதல்ல அவன் ஒரு ஆதிக்க சாதி வர்க்கத்திலிருந்து கீழே வந்து, அடிமை வர்க்கம் என தன்னை தானே தாழ்த்தி நினைத்துகொண்டிருக்கிற  மக்களுக்காக போராட வேண்டும்.அப்போதுதான் அது முழுமையான சாதிய எதிர்ப்பாக இருக்க முடியும்.சாதிய எதிர்ப்புகளை பற்றி பேசும் இந்த பகுத்தறிவாதிகளில் யாரென்று பார்த்தால்,உண்மையாவே ஒரு ஆதிக்க சாதியனரை எதிர்க்கும் தன்னைத்தானே தாழ்த்தி நினைத்துக் கொண்டிருக்கும் ஆதங்கத்தில் உள்ளவர்கள் மட்டுமே.

இன்றைய நாட்களில்  பாதிக்கும் மேற்பட்டவர்கள், சரியாக சொல்லப்போனால் முக்கால் வாசிக்கும் மேற்ப்பட்டவர்கள்  சாதிய முறையில் கீழாக கணக்கிடபட்டவர்கள் தான் அதிகமாக காணப்படுகின்றனர் என்பது தான் உண்மை.அவர்கள் சாதியை எதிர்ப்பதில் எந்தவொரு ஆச்சரியமும் இருக்க வாய்ப்பில்லை.ஏனென்றால் சாதிய ஒடுக்குமுறையில் பாதிக்கப்பட்டவர்களே இவர்கள் தானே.அன்றைய நாட்களில் நாயக்கர் என்ற ஆதிக்கச்சாதி வர்க்கத்தை சார்ந்த ராமசாமி என்ற நபர்,தன்னை ஒரு சாதிய எதிர்ப்பாளனாக ஒடுக்க ப்பட்ட  மக்களுக்கு ஆதரவாக போராடியதாலும் தான், நாயக்கர் என்பரை இவ்வுலகம் பெரியார் என பிரமிப்போடு அழைக்கிறது.



# இது 10/9/09 அன்று தமிழ்வாசலில் எழுதிய கொஞ்சம் பழைய பதிவு