மதம் என்ன ஊறுகாயா?"நான் முஸ்லிம் என்பதால், என்னை இந்திய குடிமகனாக இந்திய அரசியல் கட்சிகள் சில நினைப்பதில்லை. என் தந்தை, தேச விடுதலைக்காக பாடுபட்டவர். எனினும், என்னை இந்தியாவிலிருந்து விரட்டி, பாகிஸ்தானுக்கு அனுப்பி விட சிலர் துடிக்கின்றனர்'
-
ஷாருக் கான்


இப்படி அறிக்கை விடுறதுனால, பயங்கரவாத அமைப்பான லஷ்கர் - இ - தொய்பா தலைவன், ஹபீஸ் சயீது, "இந்தியாவில் பாதுகாப்பு இல்லை என, ஷாருக் உணர்ந்தால், பாகிஸ்தான் வந்து விடட்டும்; தேவையான, பாதுகாப்பு வழங்கப்படும்' என அவன் பதிலுக்கு அறிக்கை விடுறான்.

போதாகுறைக்கு,
பாகிஸ்தான் உள்துறை அமைச்சர், ரகுமான் மாலிக்கும் "ஷாருக் கான் இந்திய குடிமகன்; அவருக்கு சக இந்தியர்கள் போலவே மதிப்பும், மரியாதையும் கிடைக்க வேண்டும். அதில் எந்த குறைவும் இல்லாத வகையில், இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய மக்கள் அனைவரும், ஷாருக்கை தங்கள் நாட்டினர் போலவே கருத வேண்டும்" ன்னு அறிவுரை சொல்றாப்ள.

தேவைப்படுறப்ப மட்டும், சாதி - மதத்தை ஊறுகாய் மாதிரி தொட்டுக்கிற விசயத்துல
கருணாநிதி மாதிரியே ஷாருக்கானும் இருக்காப்ள. நல்லா வருவீங்க. எங்களுக்கு, சாருக்கான் - சல்மான்கான் - சயித் அலிகான் - ஆர்யா - மும்தாஜ் - அமீர் - ஷாம் ன்னு எல்லாருமே ஒன்னுதான். நாங்க படத்தை படமா மட்டும்தான் பார்க்கிறோம். அதுலேயும் உங்க மத வெறியை சேர்க்க வச்சிடாதீங்க. சாதி ரீதியாகவும், மத ரீதியாகவும் சில விசயத்துல வேறுபட்டிருந்தாலும் எங்களுக்கு கமல்ஹாசனும் - வைரமுத்துவும் - இளையராஜாவும் ஒன்னுதேன்! கலைத்துறையில் பார்ப்பன - ஷத்ரிய - சூத்திர வர்ணாசிரமம் எல்லாம் கிடையாது.

0 உங்களது விமர்சனங்களை பகிர... சொடுக்குக!:

Post a Comment