30 ஜனவரி 2013

காவல்துறை யாருடைய நண்பன்?


எங்க நாகப்பட்டினம் உள்பட தமிழகத்தின் பல திரையரங்குகளில் விஸ்வரூபம் திரைப்படத்தை பாதியில் நிறுத்தி, ரசிகர்களை வெளியேற்றியது தமிழக அரசின் அடியாட்களான காவல்துறை!

அணைய போற விளக்கு ரொம்ம்ப பிரகாசமா எரியும்ன்னு சொல்லுவாங்க. ல்லாவே எரியு, போறோக்கை பார்த்ால், எம்பி எலக்சன்லியை அணைச்சிடுவங்கன்னு நினைக்கிறேன். மிய அடத் ட்டன்ற எலக்சன்ல அணைச்சுடுவங்கன்னு நினைக்கிறேன்.


சில வருடங்களுக்கு முன் சென்னை சட்டக்கல்லூரியில், தேவர் இனத்தை சார்ந்த மாணவனை நூறு பேர் கொண்ட ரவுடி கும்பல், கல்லூரி வாசலிலேயே கொலைவெறி தாக்குதல் நடத்திய போது கைக்கட்டி வேடிக்கை பார்த்த காவல்துறை, இப்போவரைக்கும் திருட்டு விசிடில விற்பனை செய்றவனையெல்லாம் வேடிக்கை பார்த்துகொண்டு இருக்கும் காவல்துறை, தியேட்டருக்கு தன்னோட காசை கொடுத்து படம் பார்க்க வந்தவனை அடிச்சு விரட்டுறதுக்கு பேருதான் வீரமா?

இப்படி அடியாட்கள் மாதிரி ஓட்டுபோட்ட / ஓட்டு போடப்போகும் மக்களின் மீது அடக்குமுறையை ஏவுவதற்குதான் அரசாங்கம் உங்களுக்கு சம்பளம் தருதா? எங்க வரியில தானே அந்த சம்பளம் உங்களுக்கு கிடைக்குது. அதே வரிப்பணத்திலிருந்து கிடைக்கும் பணத்தால், காவலர் குடியிருப்பு, அதுஇதுன்னு எல்லாவற்றுக்கும் சலுகைன்னு பேருல சுகபோகத்தை அனுபவிச்சுக்கிட்டு இருக்கிற நீங்க தானே, பொதுமக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கணும். அதைவிட்டுட்டு இப்படி அடியாட்கள் மாதிரி செயல்படுறதுதுறது நியாயமா?

காவல்துறை உங்கள் நண்பன்ன்னு சொல்லிக்கிட்டா மட்டும் போதாது, அதுமாதிரி நடக்கவும் பழகிக்கணும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக