09 செப்டம்பர் 2009

உலகத்திலேயே மிகச் சிறந்த பொறுமைசாலி யாரு ?




தினமும் ஏதாவது எழுதிடனும்னு நேத்துலேர்ந்து ஒரு முடிவோட இருந்தேன்.ஆனா, இன்னைக்கு எதப்பத்தி எழுதறதுன்னு ஒண்ணுமே தெரியல.
(இப்பவே கண்ண கட்ட ஆரம்பிச்சிடுச்சே...) இருந்தாலும் ஏதாவது எழுதனுமே,நம்ம தான் நேற்றைக்கு ஓவரா பில்டப் கொடுத்துடோம் வேற.அதுக்காகவே ஏதாவது எழுதனுமேன்னு எனக்குள்ளே நானே புலம்பிகிட்டு, கடைசியா எதையாவது எழுதிடலாம்னு ஒரு முடிவுக்கு வந்துட்டேன்.அப்படி ஒரு நல்ல (?) முடிவுக்கு வந்த பிறகும் கூட ஏதேதோ எழுதிகிட்டு இருக்கேன் என்ன பண்றது எல்லாம் ஒரு ஜலதோசத்துல வருது.சாரி பழக்கதோசத்துல  ன்னு சொல்றதுக்கு பதிலா ஜலதோசம்ன்னு பழக்கதோசத்துல சொல்லிட்டேன்.
அச்.....அச்....என்னான்னு கேக்குறீங்களா அதான் சொன்னேன்ல எனக்கு ரெண்டு நாளா ஜலதோசம் அதான் இப்படி.இப்ப வெயில் காலம் தானே அப்பறம்  ஜலதோசம் எப்படின்னு கேக்குறீங்களா...எங்க ஊரு பக்கம் கோடைமழை பேய்ஞ்சிட்டு இருக்கு.எனக்கு மழைன்னா அவ்வளவு சந்தோசம், பழக்கதோசத்துல நிறைய நேரம் நினைஞ்சிட்டேன்.அதுனால தான் இந்த ஜலதோசம்.  


சரி அது போகட்டும்,ஒரு வழியா விசயத்துக்கு வந்துடுறேன்.
எது எப்படியோ எனக்கு சந்தோசம் தான்.ஒன்னுமே தெரியாம இவ்வளவு வரிகளை எழுதிட்டோம்மான்னு எனக்கு நானே ஒரு சபாஷ் போட்டுக்கிட்டு நான் சொல்ல வந்தத இப்ப சொல்லிடுறேன்.அது என்னன்னா...


உலகத்திலேயே மிகச் சிறந்த பொறுமைசாலி யாரு ? ன்னு  ஒரு கேள்விய யாராவது  உங்ககிட்ட கேட்டாங்கன்னு வச்சிக்குங்க,அதுக்கு பதில் நீங்க யாரை சொல்லுவீங்க?


புத்தன்,
இயேசு,
காந்தி...ன்னு யாரை வேணும்னாலும் நீங்க சொல்லலாம்.ஆனால் அது உண்மையாக இருக்க வாய்ப்பில்லை...ஏன் ? எப்படி ? யார் அந்த நபர்? என்கிறீர்களா...அப்படியும் ஒரு நபர் இருக்காங்க.


வெளி உலகத்திருக்கு தெரியாத அந்த நபரையும்,அந்த நபர் பற்றிய ஆச்சரியமான தகவல்களையும் இங்கு தருகிறேன்.மிகவும் கவனத்தோடு படியுங்கள்.உலகத்துல பொறுமைசாலி நிறைய பேரு இருக்கலாம்.ஆனா  நான் சொல்ல போற நபர், மிகவும் பொறுமைசாலி.அவர் யாருன்னா.............. வேற யாரும் இல்ல நீங்கத்தான். ஏன்னா இவ்வளவு நேரம் என் மொக்கையை அசை போட்டதுனாலேயே...அந்த பொறுமைசாலி  நீங்கதான்னு நிருபிச்சிடீங்க.அப்பறம்  உங்கள பத்தி நான்  சொல்ல என்ன இருக்கு ? உங்களுக்கே உங்களை பற்றி தெரியாதா என்ன ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக