12 அக்டோபர் 2011

இமலாதித்தயியல் - 3

¤ ஒரு தவறான புரிதலால் அவசரவசரமாக நீங்கள் எடுக்கும் முடிவானது, நிச்சயமாக மிக மோசமான பின்விளைவுகளையே தருமென்பதால், உண்மை நிலையை அறிந்துகொள்ள சிலகால காத்திருப்பு அவசியமாகிறது!

¤ ஒரு சிலருக்கு ஏக்கத்தை நிறைவேற்றவும், மற்ற பலருக்கு கர்வத்தை அதிகப்படுத்தவும் வைக்கிறது இந்த பாழப்போன அன்பு!

¤ நம்மை விமர்சிப்பவர்களிடம் நம்முடைய சுய விளக்கங்களை தந்து நமது நிலைப்பாட்டை புரியவைக்க வேண்டியதில்லை. மாறாக நமது செயல்பாடுகள் மூலமாக நம்மின் நிலையை புரியவைப்பதோடு, நேரத்தை வீணாக்காமல் அடுத்த இலக்கை நோக்கி நகர்வதே சரியான வழிமுறையாக இருக்கும்! 

¤ கடவுளிடம் வரம் கேட்க, அர்ச்சகரிடம் அவமானப்பட வேண்டிய நிலைதான் மதத்திற்கான சாபக்கேடு!

¤ தன்னைப்பற்றி மேலாக நினைப்பதில் தவறில்லை. பலநேரங்களில் தங்களின் அனுமானமும்/கணக்கீடும் தவறாக போய்விடும் என்பதை மறந்துவிட்டு, ஒருசிலர் மிக உயர்ந்த நிலையில் தங்களை கணக்கிட்டு கொள்கின்றனர்! 


¤ நான் இப்படித்தானென்று நீங்கள் நினைக்கும் வரையிலும், நான் யாரோவாகத்தான் இருக்க வேண்டிருக்கிறது!


 ¤ ஓர் இலக்கை நோக்கிய பயணத்தில், வழியெங்கும் பரவிக்கிடக்கும் இடையூறுகள் எந்த அளவிற்கு கடினமாய் இருக்கிறதோ, அப்போதுதான் இலக்கின் மதிப்பும் உயர்கிறது!

¤ பட்டறிந்தபின்பு வரும் ஞானமெல்லாம், அந்த பட்டறிவு தருவதில்லை!


¤ 'நான்' யாரென்று என்னிடம் கேட்டதும், உருவம்/குணாதிசயம்/பெயர்..., இதுபோல எதுஎதுவோதான் நினைக்கு வருகிறது. "நான்" என்பது யாரென்றே தெரியாமல் போய்விடுகிறது!


 ¤ நீங்கள் எல்லோரையும் எப்படி நினைகிறீர்களோ, அதைப்போலவேதான் உங்களையும் நினைப்பார்கள் என்று கருதுவதுகூட அறியாமையே!


- இரா.ச.இமலாதித்தன்

1 கருத்து: