25 நவம்பர் 2015

ரஹ்மானென்ற தமிழன்!



2009ம் ஆண்டு உலக ஊடகங்களே உற்று நோக்கிய ஆஸ்கார் மேடையில், 'எல்லா புகழும் இறைவனுக்கே!' என தாய்த்தமிழில் முழங்கிய ஏ.ஆர்.ரஹ்மானை, அன்றைய வட இந்திய ஊடகங்கள் மொழிரீதியாக மென்மையாக சாடின. இரண்டு ஆஸ்கார் விருதுகளை இந்தியனாக வாங்கி இந்தியாவிற்கு கெளரவம் சேர்த்த போதும், தென்னிந்தியனாகவும், தமிழனாகவும் தான் ரஹ்மான் வடக்கத்திய ஊடகங்களுக்கு தென்பட்டார். இப்போதும் கூட அவர் சொன்ன கருத்தை பெரிதாக்கி அவரது புகழுக்கு களங்கம் விளைவிக்க மற்றுமொரு காரணம் தமிழன் என்பதால் கூட இருக்கலாம்.

அமீர்கானின் பின்புல வரலாறு எதுவும் தெரியாது. அந்த வரலாறை தேடவும் விரும்பவில்லை. ஆனால், ஏ.ஆர்.ரஹ்மானின், தந்தையும் தாயும் தமிழர்கள் என்பதும், ரஹ்மானின் அப்பாவான இசையமைப்பாளர் திரு.சேகர் அவர்கள் தமிழ் இனக்குழுவான முதலியார் பட்டமுள்ள அகமுடையார் தான் என்பதும், ரஹ்மானின் இயற்பெயர் திலீப்குமார் என்பதும் தான் எனக்கு தெரிந்த ஏ.ஆர்.ரஹ்மான் என்ற தமிழனின் கடந்தகால பின்புல வரலாறு.

இசைஞானி இளையராஜாவுக்கு பிறகு ரஹ்மானின் இசைக்கு பரம ரசிகன் என்பது மட்டுமல்ல; மேலும் இளையராஜாவை விட ரஹ்மானின் தனிப்பட்ட குணநல பண்புகளுக்கும், தன்னடக்கத்திற்கும் மிகப்பெரிய ரசிகன் என்ற முறையில், ஊடகங்கள் என்ன சொன்னாலும், சக தமிழ் பேரினத்தவனாக, மதம் கடந்து ஏ.ஆர்.ரஹ்மானை ஆதரிக்கிறேன்.

- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக