சிகோகோவில், அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே! என புகழ்மிக்க சொற்பொழிவை நிகழ்த்தி, இந்திய ஆன்மீகத்தை வெளியுலகிற்கு அடையாளப்படுத்திய விவேகானந்தரை, அங்கு அனுப்பி வைத்ததே பாசுகர சேதுபதி என்ற தமிழர் என்பதே நமக்கெல்லாம் பெருமை. தனக்கு வந்த அழைப்பை பெருந்தன்மையாக, என்னை விட விவேகானந்தர் சென்றால் பொருத்தமாக இருக்குமென எண்ணி அனைத்து பயண செலவுகளையும் செய்து வைத்தவர் பாசுகர சேதுபதி.
நேற்று, மலேசியாவில் விவேகானந்தரின் சிலையை திறந்து வைத்து, சகோதர சகோதரிகளே என உரையாற்றியதற்காக நரேந்திர மோடியை விவேகானந்தரோடு ஒப்பிட்டு புகழ்வதை ஏற்க முடியவில்லை. விவேகானந்தரின் இயற்பெயர் நரேந்திரன் என்பதால், மோடியின் பெயரோடு மட்டும் ஒப்பிடுவதோடு நிறுத்தி கொள்ளுங்கள். ஏனெனில், எத்தனை பிறப்பெடுத்தாலும் மோடி விவேகானந்தர் ஆக முடியாது.
அரசியலில் நேதாஜியையும், ஆன்மீகத்தில் விவேகானந்தரையும் பின்பற்ற சொன்ன
பெருந்தமிழர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் கொள்கையை பின்பற்றும்
உறவுகள் இந்த மாதிரியான, தவறான ஒப்பீடுகளையும் கண்டிக்க வேண்டும்.
- இரா.ச.இமலாதித்தன்
- இரா.ச.இமலாதித்தன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக