பூம்புகார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பூம்புகார் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

21 ஏப்ரல் 2016

இந்திர விழா! - 2016





'ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி'

- திருக்குறள்

வேளாண்மை இருபெரும் பிரிவுகளாகவே பன்னெடுங்காலமாய் மருத நிலத்தில் இருந்து வந்தது. ஒன்று உழுவித்த வேளாளர், மற்றொன்று உழுதுண்ட வேளாளர். ஆதி நிலமான குறிஞ்சியிலிருந்து முல்லையும், முல்லையிலிருந்து ஒரே காலக்கட்டத்தில் ஒருபுறம் நெய்தலும், மறுபுறம் மருதமும் மக்கள் பயன்பாட்டுக்கு வந்த பின்னாலே தான் மனிதனின் வளர்ச்சியே உருவெடுத்தது. அப்படிப்பட்ட பெருந்திணைகளில் ஒன்றான மருதத்தின் கடவுளாக போற்றக்கூடிய இந்திரனை, உழுவித்த வேளாளர்களான அகமுடையார் போன்ற சமூகத்தினரும் போற்றி வணங்கி இருந்திருக்க கூடும். ஏனெனில் '...கணத்ததோர் அகமுடையார், மெல்ல மெல்ல வெள்ளாளர் ஆகினரே!' - பழங்நெடுங்காலமாக சொல்லப்பட்டு வரும் இந்த மொழியாடலில் கூட கணம் என்பது காவலையும், வேள் என்ற பதத்தையும் தான் குறிப்பதாக இலக்கிய சான்றுகள் மூலம் அறிய முடிகிறது. இந்த வேள், கணம் என்ற ஆய்வே அகமுடையார்களின் வேளாண் - காவல் போன்ற துறைகளை பற்றி மிக நீண்ட வரலாற்றை மீட்க உதவுகிறது.

ஆண்டு தோறும் சித்திரை முழுநிலவு திருநாளில் சோழாநாடான (எங்கள் நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட பூம்புகார் என்ற) காவிரிபூம்பட்டிணத்தில், 'இந்திர விழா' வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு கொண்டிருந்தது. ஆனால் அது பலகாலம் விடுபட்டு, இப்போது மீண்டும் புத்துயிர் பெற்று வருகிறது.
ஏழாம் ஆண்டாக இம்முறை பூம்புகார் - சாயவனம் பெரிய கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்திர விழாவில், அடியேனும் இன்று கலந்து கொண்டு சிறப்பு வழிபாட்டோடு, கோவிலெங்குமுள்ள இறையுருவ சிலைகளுக்கெல்லாம் அகல் விளக்கேற்றி சிவன் - முருகனுக்கு அர்ச்சனையும் செய்து, இந்திரனையும் வழிபட்டு வந்த இந்நாள் எனக்கு மற்றுமொரு சிறப்பான நாளாகவே அமைந்தது. விவசாயம் சார்ந்த குடும்ப பின்னணியில் பிறந்து வளர்ந்தேன் என்ற பெருமையையே, இதுபோன்ற பெருவிழாக்களே எனக்கு உணர்த்துகிறது.

உழுதுண்ட - உழுவித்த வெள்ளாளர்களான அனைத்து விவசாய பெருங்குடியினருக்கும், 'இனிய இந்திர விழா பெருநாள் வாழ்த்துகள்!'

- இரா.ச. இமலாதித்தன்

14 பிப்ரவரி 2016

'வேலன்'டைன்ஸ் டே வாழ்த்துகள்!

பூம்புகார் - சாயவனம் சிவாலயத்தில் ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு முன்பாக கடலிலிருந்து கண்டெடுக்கப்பட்ட வில் ஏந்திய எம்பெருமான் திருமுருகனின் உற்சவர் சிலையை வணங்குவது இங்கு மிகவும் சிறப்பு வாய்ந்த புண்ணியமாக கருதப்படுப்பதால்,

'வேலன்'டைன்ஸ் டே நாளான இன்று வள்ளியின் காதலன் வடி'வேலன்' உடைய தரிசனத்தை தனி ஆளாக தரிசித்து வந்தேன்.

05 மார்ச் 2014

காவிரி சமவெளி நாகரீகம்



பாகிஸ்தான் - இந்தியா எல்லையில் அமைந்துள்ள 'ஹரப்பா - மெகஞ்சோதாரா - லோத்தல்' யென்ற சிந்துசமவெளி நாகரீகம் தான் உலகில் பழைமையான நாகரீகமென்று பெருமபாலோனோர் சொல்லிக்கொண்டிருந்தாலும், என் அளவில் அதை என் மனம் ஏற்று கொண்டதே கிடையாது. ஏனெனில், எங்க ஊரு நாகப்பட்டினம்தான் பழைமையான ஆதிநாகரீகம் கொண்ட நகரம் என்பதை தீர்க்கமாக நம்புகிறேன். சோழர்களின் துறைமுகமான பூம்புகார் என்ற காவிரிபூம்பட்டினம் தான் உலகில் தலைச்சிறந்த நாகரிக நகரம் என்பது ஆழமான நம்பிக்கை. மேலும், சிந்து நதி நாகரிகத்தை விட காவிரி நதி நாகரிகம் ஒன்றுக்கொன்று சளைத்ததுமில்லை என்பதும் என்னளவிலான எண்ணம்.

அதனோடு தொடர்புடைய ஒன்றை இன்று இங்கே சொல்ல விருப்பபடுகிறேன். கூகுள் மேப் மூலமாக இன்று ஒரு விசயத்தை என்னால் அறிந்துகொள்ள முடிந்தது. பாகிஸ்தான் எல்லையோரம் அமைந்துள்ள ஈரான் நாட்டின் ஓரிடத்தில் "சரவண்" என்ற பகுதியும், அதனருகிலேயே "சூரன்" என்ற பகுதியும் உள்ளது. சரவண் என்றால் எம்பெருமான் முருகன் என்பது எல்லோருக்கும் தெரியும். அதுபோலவே சூரன் என்றால் எம்பெருமான் முருகன் வதம் செய்த பகைவன் என்பதும் நமக்கு தெரியும். என் கணிப்பின் படி, எங்க ஊரு நாகப்பட்டினம் அருகேயுள்ல சிக்கல் என்ற இடத்திலிருந்து வேல் வாங்கிதான் திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்வு மதம்சார்ந்த நம்பிக்கையாக இன்றளவும் பெருவிமர்சையாக கொண்டாடப்பட்டு கொண்டிருக்கின்றது. அதன்படி இந்த மேப்பில் உள்ள இந்த இரு நகரங்களின் பெயர்களை படிக்கையில் அதன் பெயர்க்காரணமும், அந்த இரு நகரங்களின் ஆதிவரலாற்று விசயங்களை பற்றியும் எனக்குள் ஆர்வமும் - எதிர்பார்ப்பும் அதிகம் ஏற்பட்டது.

- இரா.ச.இமலாதித்தன்