அம்பேத்கர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அம்பேத்கர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

08 டிசம்பர் 2017

புத்தனும் சித்தனும்!



பத்து லட்சம் பேரை அம்பேத்கர் பெளத்தர்களாக மதமாற்றம் செய்ததை மிகப்பெரும் சாதனையாக இசுலாமிய தலைவர்களுக்கிடையே மேடையில் சொல்லும் திருமாவளவன், ஏன் அதே அம்பேத்கர் அந்த பத்து லட்சம் பேரையும் இசுலாம் மதத்திற்கு மாற்றவில்லை என்பதை பற்றியும் கொஞ்சம் விவரமாக சொல்லிருக்கலாம்.
ஹிந்து மத கோட்பாட்டின் படி வகுக்கப்பட்டுள்ள பத்து அவதாரங்களில் ஒருவராக புத்தரை சேர்த்து பலகாலம் ஆகிவிட்டதை கூட கவனிக்காமல் பெளத்தத்திற்காக திருமாவளவன் மார்கெட்டிங் செய்திருந்த அவருடைய பேச்சு அர்த்தமற்றதாகவே தெரிந்தது. அதைத்தவிர திருப்பதி - காஞ்சிபுரம் - திருவரங்கம் கோவில்களை இடித்துவிட்டு பெளத்த விகாரங்களாக மாற்ற வேண்டுமென்ற தன் விருப்பத்தையும் அந்த கண்டன உரையில் தெரிவித்திருக்கிறார். எதார்த்தத்தை சொல்ல வேண்டுமென்றால் 'உருவ வழிபாட்டையும் - கோவில்களையும் - வேதங்களையும்' கடுமையாக எதிர்த்த சித்தர்கள் ஜீவசமாதியான இடங்கள் தான் இவை என்பதையும் திருமாவளவன் இனி தெரிந்து கொண்டால் மகிழ்ச்சி.
தகவலுக்காக,
(புத்தரை விட காலத்தால் முற்பட்ட சித்தர்கள் ஜீவசமாதி அடைந்த இடங்களில் திருமாவளவன் சுட்டிக்காட்டிய பகுதிகள்... திருப்பதி - கொங்கண சித்தர், காஞ்சிபுரம் - கடுவெளி சித்தர், திருவரங்கம் - சட்டைமுனி சித்தர்)
புத்தர் சொன்ன வழிமுறைகளை கடைபிடிக்காமல் புத்தரையே கடைபிடித்த இலங்கையால், தமிழின அழிப்பையே செய்ய முடிந்ததென்பதை புத்தரின் ஆன்மாவும் கூட அறிந்திருக்கும். உலகுக்கே தெரிந்த இந்த உண்மை திருமாவளவனுக்கு மட்டும் தெரியாமல் போனது ஆச்சர்யமாகத்தான் இருக்கிறது. ஆழ்ந்த நன்றி!

14 ஏப்ரல் 2017

பீம்ராவ் அம்பேத்கருக்கு புகழ் வணக்கம்!



"ஆரியம்போல் உலகவழக்கழிந் தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!"

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலாக்கப்பட்ட மனோன்மணீயம் நூலிலுள்ள நீக்கப்பட்ட பாடல் வரி இது. வழக்கொழிந்த ஆரியம் என்ற உண்மையை சொன்னதற்கே அவ்வரி தமிழ்த்தாய் வாழ்த்திலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது. இப்படி கோலோச்சிக்கொண்டிருந்த அப்போதைய ஆரிய பார்ப்பனீய அரசியல் சூழலில் கூட, "நான் என்ன செய்ய வேண்டும் என்பதே என் கவலை. அடுத்தவர்கள் என்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று யோசிப்பது அல்ல!" என அழுத்தம் திருத்தமாக சொல்லி தனது கொள்கையிலிருந்து கடைசிவரை மாறாமல் அரசியலில் பயணித்து இன்றளவும் உயிர்ப்போடு அடையாளப்பட்டு கொண்டிருக்கும் பிராமணரல்லாத பீமராவ் அம்பேத்கர் அவர்களுக்கு பிராமணரல்லாதவனாய் புகழ் வணக்கம்!

14 ஏப்ரல் 2016

அம்பேத்கர் ஜெயந்தி!



சாதிய - அரசியல் - சமூக காரணங்கள் பல பின்புலமாக இருந்தாலும் கூட, பெரு நகரங்கள் முதல் குக்கிராமங்கள் வரை இந்தியாவெங்கும் உயிர்ப்புடன் இருக்கும் ஒரே தலைவரின் சிலையாக அம்பேத்கார் இருக்கிறாரென்பதை உணர்கையிலேயே அவரது ஆளுமையை புரிந்து கொள்ள முடியும். எந்த அரசியல்வாதிகளாலும் புறக்கணிக்க முடியாத பெருந்தலைவராக சமகாலத்திலும் விளங்கி வரும், 'அம்பேத்கர் ஜெயந்தி' வாழ்த்துகள்!