ரஞ்சித் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரஞ்சித் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

01 மே 2019

தேவராட்டம் - ஓர் அலசல்!


தேவராட்டம் என்பது ராஜகம்பளத்தார் என்ற நாயக்க சாதியினரின் ஒருவகை பாரம்பரிய ஆட்டம்; மன்னரின் போர் வெற்றியை கொண்டாடும் ராஜகம்பளத்து நாயக்கர்களின் நாட்டாரியல் ஆடற்கலை தான் தேவராட்டம். இது அந்த ராஜகம்பளத்து நாயக்கர்களின் அனைத்து விழாக்களின் இயல்பாக நடைபெறும் நாட்டிய கலை. இதற்கும் மற்ற எந்த சாதிகளுக்கும் தொடர்பில்லையென்று சொல்லிக்கொண்டே இப்பதிவை தொடர விரும்புகிறேன்.

தலித்தியம் என்கிற பெயரில் பறையர் பெருமை பேசும் ரஞ்சித்தும், முக்குலத்தோர் என்கிற பெயரில் மறவர் பெருமை பேசும் முத்தையாவும் ஏறத்தாழ ஒன்று தான். இதில் நுட்பமாக கவனித்தால், முத்தையா படங்களில் வில்லன்கள் அனைவருமே கதைநாயகனின் சாதியை சேர்ந்தவர்களாகவே இருப்பார்கள். ரஞ்சித் படங்களிலோ, வில்லன்கள் 'சோ கால்டு' உயர்சாதியினராகவே சித்தரிக்கப் பட்டிருப்பார்கள். நடுநிலை என்பதே ஏமாற்றுவேலை. அதிலேயும் நடுநிலைவாதிகளென தங்களைத் தாங்களே காட்டிக்கொள்ளும் இணையவாசிகள், ரஞ்சித்தை சமூக போராளியென்றும், முத்தையாவை சமூக விரோதியென்றும் சமீப காலமாக கட்டமைக்க முனைகின்றனர்.

முத்தையாவின் திரைப்பட கதைக்களங்கள் யாவும் நாம் காண்கின்ற, அனுபவிக்கின்ற குடும்பச்சூழலையே பிரதிபலிக்கின்றன. ஆனால் ரஞ்சித்தின் படங்களோ, அகமுடையார் வழித்தோன்றல்களான (கபாலி) மலேயா கணபதி தேவர், (காலா) மும்பை வரதராஜ முதலியார் போன்ற நிஜப்போராளிகளின் கதைகளின் மூலத்தை திருடியோ, கோபி நயினார் போன்ற இயக்குனர்களின் (கருப்பர் நகரம்) படைப்பாக்கத்தை திருடியோ தான், தலித்திய காவியங்களாக பிரதிபலிக்கின்றன.

தயாரிப்பாளர் முதலீடு செய்த பணத்தை, பெரிய நட்சத்திர நடிகரல்லாதவர்களை வைத்தே முத்தையா இலாபமாக்கி தருகிறார். தமிழ்ராக்கர்ஸ்க்கு பிறகு திரையரங்க வருகை குறைந்த போதும், அதை தன்னளவில் பி மற்றும் சி செண்டர் ரசிகர்களையும் திரையரங்கிற்கு வரவழைத்து வசூலில் சரி செய்து வருகிறார். என்னளவில், ரஞ்சித்தை விட முத்தையா எவ்வளவோ மேல். இதை சொல்வதால், நான் முத்தையாவின் சாதியும் இல்லை; முக்குலத்தோரும் இல்லை.

- இரா.ச. இமலாதித்தன்

12 நவம்பர் 2017

அறம் சிறக்க வாழ்த்துகள்!

அறம் இன்னும் பார்க்கவில்லை; பார்த்தவர்களெல்லாம் பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். சில வருடங்களுக்கு முன்பு வரை கோபி நயினார் என்ற ஓர் அறியப்படாத படைப்பாளியான மீஞ்சூர் கோபியை, பலரும் விமர்சித்திருக்கிறார்கள். ’மெட்ராஸ்’ படத்தின் கதையானது, அவருடைய ‘கருப்பர் நகரம்’ என்பதின் கதை தான் என்பதை இப்போது அனைவரும் ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். பா.ரஞ்சித்தின் முதற்படமான அட்டைக்கத்தியில் கோபி நயினாரின் பல காட்சிகள் திருடப்பட்டிருந்தன என்பதும், இந்த கோபியின் கதை விவாதத்தில் இருந்தவர் தான் பா.ரஞ்சித் என்பதும் யாராலும் மறுக்க முடியாத உண்மை. அதுபோல ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ’கத்தி’ படத்தின் கதையும் இவருடையது தான் என்பது இன்று அறம் உரைத்திருக்கிறது இப்படம். எதிர்மறை விமர்சனங்களால், பல்வேறு தரப்பட்டவர்களாலும் குறிப்பாக அவர் சார்ந்த சமூகத்தை சேர்ந்த பா.ரஞ்சித் போன்றவர்களாலும் விமர்சிக்கப்பட்ட கோபி நயினார், அறம் மூலம் மீண்டெழுந்து வந்திருப்பது பெருமகிழ்ச்சி. இத்தனை தோல்விகளிலும், அவமானங்களிலும் இருந்து மீண்டெழுந்த மீஞ்சூர் கோபி என்ற கோபி நயினாரின் வெற்றியானது போற்றுதலுக்குரியது. இதற்கு காரணமாக இருந்து, இவர் மீது நம்பிக்கை வைத்து படம் உருவாக காரணமாக இருந்த நயன்தாராவுக்கு கோபி நன்றிக்கடன்பட்டவராகிறார். அறம் என்றும் வெல்லும் என்பது இந்த அறம் உணர்த்திருக்கிறது. வாழ்த்துகள்!
(பி.கு: இது பற்றிய மேலதிக தகவல்களுக்கு, கீழே கொடுக்கப்பட்டுள்ள சவுக்கு கட்டுரை மூலம் தெரிந்து கொள்ளலாம், https://www.savukkuonline.com/12697/ )
#Aramm


கேரள நயன்தாரா தோழராக தெரிந்த உமக்கு, மீஞ்சூர் கோபி ஏன் குருவாகவோ / அண்ணனாகவோ தெரியல? #ஒன்றுசேர்களவாடுபடமெடு 

26 மே 2017

காலா - குறிப்பிடும் குறியீடு என்ன?


கரிகாலனை ஏன் கொன்றார்கள்? யார் தூண்டுதலில் கொன்றார்கள்? என்பதே புரிந்து கொள்ள முடியாத பெரிய கதை. அண்ணன் பிரபாகரனுக்கும் இதே பெயர் உண்டு. கபாலியும், காலனும் அழிக்கும் கடவுளின் பெயர்களே; காலா என்பது கருமையையும் குறிக்கிறது. இப்படிப்பட்ட பல குழப்பத்திற்கு இடையே, அந்த பெயரில் ரஜினியை வைத்து என்ன செய்ய போறாப்ளயோ, 'குறியீடு' ரஞ்சித்?! ஒருவேளை ரஜினி சொன்ன அந்த அக்கப்'போர்' இது தான் போல!

காலா (கரிகாலன்)



மலேசியாவில் தொழிற்சங்க சம்மேளத்தின் தலைவராக இருந்து, சீன/தமிழ் தொழிலாளர்களுக்குள் சம்பள முறையில் ஏற்றத்தாழ்வு இருந்ததை எதிர்த்து களம் கண்டவர் தான் அகமுடையார் இனக்குழுவை சேர்ந்த தம்பிக்கோட்டையின் 'மலேயா' கணபதி தேவர். நேதாஜி உருவாக்கிய ஐ.என்.ஏ.விலும் பயிற்றுனராகவும் பணியாற்றியவர். பிரித்தானிய அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் இறங்கியதாகவும், சட்டத்திற்குப் புறம்பாக ஒரு கைத்துப்பாக்கி, ஆறு சுற்றுத் துப்பாக்கிக் குண்டுகளையும் வைத்திருந்தார் என்றும் மலேயா கணபதியின் மீது குற்றம் சாட்டப்பட்டது. கோலாலம்பூர் நீதிமன்றம் மலேயா கணபதிக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. இவரின் வரலாற்றை ஓரளவுக்கு தழுவித்தான், தலித்திய சிந்தனையோடு 'கபாலி' திரைப்படமாக ஏற்கனவே உருவாக்கினார் பா.ரஞ்சித். அந்த படத்தில் கோட் ஷூட்டெல்லாம் ரஜினி போட்டிருந்தார்.

இப்போது மீண்டும், இந்த போஸ்டரில் ரஜினியை கைலி கட்ட வைத்திருக்கிறார் இயக்குனர் ரஞ்சித். அநேகமாக இதை பார்க்கும் போது, பட்டியல் சாதி மக்களுக்காக தன் சொந்த சாதியான அகமுடையார் பண்ணையார்களையும், பண்ணையடிமை தனத்தையும் எதிர்த்து களம் கண்ட பொதுவுடைமை போராளிகளான வாட்டக்குடி இரணியன் தேவர் மற்றும் மணலி கந்தசாமி தேவரின் போராட்ட வாழ்க்கையைத் தான் கதைக்களமாக உருவாக்கி இருக்கக்கூடுமென நினைக்கிறேன். ஒருவேளை இப்படி இல்லாமல் கூட போகலாம்; ஆனால் அதற்கான தரவுகளை மணலி கந்தசாமி, வாட்டக்குடி இரணியன், ஜாம்பனோடை சிவராமன் போன்ற அகமுடையார் இனக்குழுவை சேர்ந்த இப்போராளிகளின் கதையை தழுவித்தான் பொதுவுடைமை தனத்தை திரைப்படமாக்க முடியும்.

(கபாலி படம் தொடங்கப்பட்ட போது கூட, அந்த படத்தின் கதை மலேயா கணபதி தேவரின் கதையை தழுவிய படம் தானென்று ஆரம்பத்திலேயே முகநூலில் பதிவிட்டு இருந்தேன். அப்போது அதை விமர்சித்த பலரும், கபாலி படம் வந்த பின்னால், மலேசியா நாளேடுகளும், மலேசியா தொழிலாளர் போராட்டத்தை பற்றி விவரமறிந்தவர்களும், மலேயா கணபதி தான் 'கபாலி' கதையின் நிஜ ஹீரோ என சொன்ன பின்னரே என் மீதான விமர்சனத்தை நிறுத்திக்கொண்டனர்.)

- இரா.ச. இமலாதித்தன்

#Guess #அகமுடையார்




1956ம் ஆண்டு அக்டோபர் 14ம் தேதி நாக்பூரில், பீம்ராவ் அம்பேத்கர் தனது ஐந்து லட்சம் ஆதரவாளர்களோடு அதிகாரப்பூர்வமாக விழா எடுத்து பௌத்த சமயத்திற்கு மாறினார். ஆனால் ஹிந்தியாவை பொறுத்தவரை சமணம், பெளத்தம் என்ற எல்லாமே ஹிந்து என்ற ஒற்றை அடையாளத்திற்குள்ளாகவே அடைபட்டு விடும் என்பது இயக்குனர் ரஞ்சித்திற்கு தெரியாமல் இருக்க போவதில்லை. ஆனால், இதிலுள்ள இரண்டு குறியீடுகளை மையப்படுத்தியே ரஜினி + ரஞ்சித் மீண்டுமொரு கூட்டணியில் 'காலா' படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது.

தலித்திய சிந்தனையாளரான ரஞ்சித்திற்கு, மராட்டியரான ரஜினி இரண்டாம் முறையும் கிடைத்திருக்கிறார். ஏற்கனவே அகமுடையார் இனக்குழுவை சேர்ந்த 'மலேயா' கணபதி தேவர் என்ற தொழிற்சங்க போராளியின் கதையை ரெஃபரன்சிற்காக உள்வாங்கி, 'கபாலி' என்ற தலித்தியவாதியாக ரஜினியை உருமாற்றி திரைக்கதை அமைத்திருந்தார். இப்போது கடல் கடந்து போகாமல், ஹிந்தியாவிற்குள்ளாகவே கடலோரமாக மும்பை வரை பயணித்திருக்கிறார் இயக்குனர் ரஞ்சித். இந்த 'காலா' கதைக்கள பின்னணி, ரஜினியின் பூர்வீக பூமியான மராட்டியத்திலேயே இருப்பதாக போஸ்டரின் மூலம் அறிய முடிகிறது. இங்கேயும் ரெஃபரன்சிற்கு வரதாபாய் என்ற அகமுடையார் இனக்குழுவை சேர்ந்த வரதராஜ முதலியாரே ரஞ்சித்தின் தலித்திய கதைக்கருவிற்கு தேவைப்படுவார்.

என்னதான் அம்பேத்கரியம் பேசினாலும் கடைசியில் கபாலி திரைப்படமானது பறையர் இனக்குழுவிற்கான அடையாளப்படம் போல சமூக ஊடகங்களில், அச்சாதியை சார்ந்தவர்களே பரப்புரை செய்தனர். இப்போது மீண்டும் நீலமும், கருப்பும், சிவப்பும் வண்ணக்குறியீடுகளோடு காலாவை வெளிக்கொண்டு வந்தாலும், அது மற்றுமொரு கபாலியின் நீட்சியாகவே சம்பந்தப்பட்ட பலராலும் பரப்புரை செய்யப்படும். இதிலுள்ள சிக்கல் என்னவெனில், மராட்டியரான ரஜினியை மள்ளரியம் பேசும் நபர்களால், கெய்க்வாட் என்ற பட்டம் கொண்ட அவர் சார்ந்த சாதியான குர்மியை, தமிழ் குடும்பர் என்ற பட்டத்தோடு இணைத்து தேசிய அளவிலான மள்ளரியம் பேசத்தொடங்கி பல ஆண்டுகள் கடந்து விட்டன. இப்போதைக்கு உலகளாவிய மள்ளரியம் பேசிக்கொண்டிருக்கிறார்கள் என்பது வேறு கதை; நிற்க.

ஏற்கனவே மெட்ராஸில் மஞ்சள்Xநீலம் குறியீடு வைத்ததால் வட மாவட்ட இளைஞர்களிடையே சலசலப்பு ஏற்பட்டது. இப்போது பர்ஸ்ட்லுக் போஸ்டரிலேயே, கரிகாலன், சிவப்பு, கருப்பு, அம்பேத்கர், பெளத்தம், மும்பை, தாராவி, மராட்டியம் என பல குறியீடுகள் தென்படுவதால், இனிவரும் விமர்சனங்களையெல்லாம் எப்படி சமாளிக்க போகிறார் என்பதை காலம் தான் பதில் சொல்லும். பார்க்கலாம்; காலா வரட்டும்.

- இரா.ச. இமலாதித்தன்

21 ஜூலை 2016

திருவள்ளுவரும் சாதி தலைவராகிறார்!


திருவள்ளுவர் தலித் என்பதால் தான் கங்கை கரையில் அவரது சிலையை நிறுவ அனுமதிக்கவில்லையென நவீன பார்பனராகி போன, திராவிட வைரமுத்து சொல்லிருக்கிறார். வடக்கத்தியனுக்கு தமிழ்நாட்டுக்காரன் எல்லாருமே தலித் தான் என்ற விசயம் கள்ளரான வைரமுத்துக்கு தெரியாது போல. திருவள்ளுவர் இந்த சாதியென சர்டிபிகேட் கொடுக்க யாருக்கும் இங்கே அறுகதை இல்லை. ஏனெனில் திருவள்ளுவர் பிறந்த ஊரையே இதுவரைக்கும் யாராலும் சரியாக நிரூபிக்க முடியவில்லை. மேலும், திருவள்ளுவர் இந்த சாதிதானென உறுதியாக சொல்லவும் எந்த ஆதாரமும் யாரிடமும் இல்லை. இதுதான் எதார்த்தம்.

கீழே இருக்கிற போஸ்ட்ரல இருக்கிற, 'அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பறையர் முதற்கே உலகு' என்ற புதுக்குறள் மாதிரி, ஒருசில வார்த்தையை மட்டும் மாற்றி புதிதாக போலியான வரலாற்றை உருவாக்கிட முடியுமே தவிர, ஒருபோதும் உண்மையை இவர்களால் வெளிக்கொணர முடியாது. அந்த முதற்குறளிலுள்ள 'பகவான்' என்ற சொல்லுக்கே பல பஞ்சாயத்து நடந்துக்கிட்டு இருக்கு. ஏனெனில், திருக்குறள் ஒரு சமணநூல். திருவள்ளுவரே சமண மதத்தை சார்ந்தவர் தான். எனவே அந்த குரலில் சொல்லப்பட்ட பகவான் என்பது சமணர்களின் கடவுளான ஆதிநாதரையே குறிப்பதாக பல சான்றுகளை இப்போது திரு.பானுகுமார் போன்ற பல ஆய்வாளர்கள் நிரூபணம் செய்திருக்கிறார்கள்.

"மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின்" என்று சொன்னவருக்கே தாடி ஜடைமுடி கொடுத்த உலகமிது. இவர்களிடமிருந்து, திருவள்ளுவரையும், பா.ரஞ்சித்தையும் தலித் ஆக்க முடியுமே தவிர, கடைசி வரை தமிழராக்கவே முடியாது.

கபாலிடா
பறையர்டா
ரஞ்சித்டா
தலித்டா
திருவள்ளுவர்டா

இப்படியே கத்திக்கிட்டு இருக்க வேண்டியதுதான், கடைசிவரைக்கும்...

- இரா.ச. இமலாதித்தன்

01 ஜூன் 2015

சூப்பர் ஸ்டார் ரஜினியெனும் ஒரு முதியவரின் கலைச்சேவை!?

சூப்பர் ஸ்டார் லிஸ்ட்லிருந்து தூக்கியெறியப்பட்ட ரஜினியின் இந்த படமும் ஃப்ளாப் ஆனாதான் ஹிரோவாவே நடிக்கிறதை(?) விட்டு தொலைப்பாருன்னு நினைக்கிறேன். திரும்பவும் ஐஸ்வர்யாராய் தான் ஹிரோயினா வேணும்ன்னு அவர் ஆசைப்படலாம். ஆனால் பாவம் ரஞ்சித்! இப்போது தான் நல்ல இயக்குனரென்று திரையுலகில் அடையாளப்பட்டிருக்கிறார். உடனே, ஓடுற குதிரை மேல பந்தயத்தை கட்டிவிட்டார் இந்த ரஜினி. ஒருதுளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு கொடுத்த தமிழுக்கும் தமிழர்க்கும் இதுவரையிலும் ஒரு மயிரையும் செய்யாத ரஜினி இந்த படத்துல வாங்குற கோடி கணக்கான கருப்பு வெள்ளை சம்பளத்தை மட்டும் ஏழை எளிய மக்களுக்காக கொடுக்க போறார்? பஞ்ச் டயலாக், நூறு பேரை அடித்து நொறுக்கும் ஆக்‌ஷன் சீக்வன்ஸ், பேத்தி வயசுல உள்ள பொண்ணோட டூயட், ஐம்பது பேரோட சேர்ந்து ஆடாமாலே ஓர் ஓபனிங் சாங், இறக்குமதி செய்யப்பட்ட ஆறடி உயர வில்லன் என மொக்கையான கமர்சியல் மசாலாவை உருவாக்கி, ரஞ்சித்தின் கதைக்களத்தையே குளறுபடி செய்ய சொல்லிருப்பார் ரஜினி. முருகா! போன ரஜினி படத்துக்கு கேட்டதை தான் இந்த தடவையும் கேட்குறேன், இந்த படமும் அட்டு ப்ளாக் ஆகிடணும்! ஏதாவது பார்த்து பண்ணி விடு.
பவர் ஸ்டாருக்கு கூடத்தான் வயசானாலும் படம் 365 நாள் ஓடுது. அதுக்காக அவரை ரஜினியோட கம்பேர் பண்ண முடியுமா? சீனிவாசன் கோவிச்சிக்க மாட்டாரா என்ன? சூப்பர் ஸ்டார்ங்கிற மட்டும் என்ன மொத்தமா ரஜினிக்கு குத்தகைக்கு விட்டுருக்கா என்ன? மக்கள் திலகம் முதல்வர் ஆனார். நடிகர் திலகம் ஒரு கட்சியின் தலைவரானர். ஒன்னுக்குமே வழியில்லையே இவர்கிட்ட. அப்பறமென்ன பட்டம் மட்டும் வாழுதாக்கும்.

வயசான காலத்துல கலைத்துறையை தனியாளா சூப்பர் ஸ்டார்ன்னு சொல்லிக்கிடே ஏன் தூக்கி சுமக்கணும்.தகுதியான ஆளுங்க வந்த பிறகும் அடம்பிடிக்கலாமா? பட்டத்தை கொடுத்தது மக்கள்.அதை பிடுங்கவும், அதை இன்னொருவருக்கு மாற்றி கொடுப்பதும் மக்களிடம் தான் உள்ளது.நான் மட்டும்தான்னு அடம்பிடிக்க கூடாது

- இரா.ச.இமலாதித்தன்