மருதுபாண்டியர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மருதுபாண்டியர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

13 செப்டம்பர் 2022

ஆண்ட பரம்பரையில் வந்த இங்கிலாந்த ராணி!






இந்திய மண்ணை அடிமைப்படுத்திய ஆங்கிலேயரை எதிர்த்த நேதாஜிக்கு ஒரு பக்கம் சிலை திறக்கிறோம். மறுபக்கம் அந்த ஆங்கிலேய அரச வம்சத்தை சேர்ந்த ஒரு மூதாட்டி இறந்ததற்காக நாடு முழுதும் துக்கம் அனுசரித்து அரைக்கம்பத்தில் தேசியகொடியை பறக்க விடுறோம். இது இந்திய கொள்கை.

தமிழ்நாட்டிலோ, எல்லா சாதியிலும் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்த சுதந்திரப்போரட்ட வீரர்களை, தேசபக்தி நாயகர்களை விழா எடுத்து கொண்டாடுகிறோம். ஆனால், அவர்களை சூழ்ச்சியால் வீழ்த்தி கொன்றொழித்த ஆங்கிலேய மன்னர் வம்சத்தை சேர்ந்த வயது முதிர்வால் இறந்து போன மூதாட்டிக்கும் இரங்கற்பா படிக்கின்றோம்.

இதெல்லாம் என்ன மாதிரியான டிசைன்?

தமிழ்நாட்டில் மன்னர் பரம்பரை, ஆண்ட பரம்பரை என சொல்பவர்களை கடுமையாக எதிர்க்கும் எல்லா குரூப்களும் இங்கிலாந்து ராணிக்கு ராஜவிசுவாசம் காட்டுகின்றனர். 1801ம் ஆண்டு அக்டோபர் 24ம் தேதியில் மாமன்னர் மருதுபாண்டியர்கள் மட்டுமில்லாது அவர்களது குடிவழி உறவினர்கள் என திருப்பத்தூரில் 500க்கும் மேற்பட்ட தமிழர்களை, தேச பக்தர்களை, மண்ணின் மைந்தர்களை கொன்றொழித்தன் பின்னணியில் இந்த இங்கிலாந்து ராணியின் குடும்பமும் உண்டென என்பது கூடவா தெரியாது? இதையெல்லாம் கேட்டால், முரட்டு முட்டு தான் கொடுக்கிறார்கள். ஒருபோதும் நம் வரலாற்றை மறக்காதீர்கள். அது கடந்த காலத்தை மட்டும் நினைவு படுத்தவில்லை. எதிர்காலத்தை எச்சரிக்கை செய்யும் வல்லமையும் அதற்குண்டு.

- இரா.ச. இமலாதித்தன்


பிற்சேர்க்கை:

இந்த சாதி ஒளிப்பு போராளிகள், தலித்திய போராளிகள், பகுத்தறிவு போராளிகள், ஆண்டப்பரம்பரை எதிர்ப்பு போராளிகள், ஆணவக்கொலை என பெயர்மாற்றம் செய்த போராளிகள், கருஞ்சட்டை, நீலச்சட்டை, பச்சை சட்டை, சிவப்புசட்டை என வண்ணப்போராளிகளெல்லாம் சேர்ந்து, இந்தியா உள்பட நூற்றுகணக்கான நாடுகளை அடிமைப்படுத்திய அந்த மன்னர் பரம்பரையை சேர்ந்த ராணிக்கு விதவிதமா இரங்கல் பா படிச்சாட்டாங்க. இந்நேரம் அந்த மகாராணியின் ஆன்மா சாந்தி அடைஞ்சிருக்கணும்.

20 ஏப்ரல் 2017

மாமன்னர் சின்னமருதுபாண்டியருக்கு 264வது புகழ்வணக்கம்!



சிவகங்கையை கி.பி.1780 முதல் கி.பி.1801 வரை ஆண்ட மருதிருவரில் ஒருவரான மாமன்னர் சின்ன மருது அவர்கள் பிறப்பெடுத்த நாள் இன்று. பூமாரங் என்ற வளரி வீச்சை பற்றி இன்று உலகெங்கும் பேசப்பட்டாலும், அதை வெள்ளைக்காரனுக்கு கற்றுக்கொடுத்து ஆவணப்படுத்திய பெருமைக்கு காரணமாக இருந்திருக்கிறார் சின்ன மருது. உருவத்தில் கருத்த நிறத்திலும், உள்ளத்தில் வெள்ளையாகவும் திகழ்ந்த சின்னமருதுவின் சிவந்த இரத்தம் தான் சிவகங்கை மண்ணின் வீரத்தின் அடையாளமாக இன்றளவும் திகழ்கிறது.

உலகிலேயே முதன் முறையாக ஐரோப்பியர்களுக்கு எதிராக திருச்சி மலைக்கோட்டையிலும், திருவரங்கத்திலும் கி.பி.1801 ம் ஆண்டு ஜூன் 12ம் தேதி 'ஜம்புத்தீவு பிரகடனம்' வெளியிட்ட பெருமைக்குரியவர் சின்ன மருது. தன் குடிவழி முழுக்க அழித்தொழிக்கும் எண்ணத்தில் செயற்பட்ட ஐரோப்பிய இழிபிறவிகள் கூட்டத்தை சேர்ந்த வெல்ஷ் என்ற வெள்ளையன் கூட சின்னமருதுவின் மகன் துரைசாமியை இயலொணா நிலையில் கண்டதை பற்றியும், சின்னமருதுவின் வீரத்தை பற்றியும் கண்ணீர் ததும்ப பதிவு செய்திருக்கிறார்.

கரடி கருத்தான் போன்ற துரோகிகளின் கூட்டத்தினரால் காட்டிக்கொடுக்கப்பட்டும் கூட, தாங்கள் கட்டிய காளையார்கோவில் கோபுரம் தகர்க்கப்படக் கூடாதென்பதற்காக தன்னுயிரை கொடுக்க முன்வந்தார் சின்னமருது. தங்கள் மன்னன் மட்டுமா இறப்பது? அவர்களோடு நாங்களும் செத்து மடிகிறோமென சூளுரைத்து 500க்கும் மேற்பட்ட பல்வேறு இனக்குழுக்களை சேர்ந்தவர்களும் 1801ம் ஆண்டு அக்டோபர் 24ல் உயிர்கொடை தந்தனர் என்பது வரலாற்றில் மறக்க முடியாத சுவடுகளாகி போனது. அப்படிப்பட்ட தியாகத்திற்கும், வீரத்திற்கும், ஆளுமைக்கும் பெயர்போன சின்னமருதுவை இந்நாள் மட்டுமின்றி எந்நாளும் நெஞ்சில் வைத்து போற்றுவோம்!

எம் முப்பாட்டான் மாமன்னர் சின்னமருதுபாண்டியருக்கு 264ம் ஆண்டு புகழ் வணக்கம்!

26 ஏப்ரல் 2016

மரு.சேதுராமனுக்கு சில கேள்விகள்!





மாமன்னர் மருதுபாண்டியர் பிறந்த நரிக்குடி முக்குளத்திற்கு என்ன செய்தார், முக்குலத்தின் காவலரான சேதுராமன் அகமுடையார்?! குறைந்த பட்சம் மணிமண்டபம் கட்டலாமே? ஏன் தயக்கம்? வறண்ட சிவகங்கை என்பதாலா?!

சென்னையில் மருதுபாண்டியர் சிலை வைக்க நடவடிக்கை எடுப்பாரா, அகமுடையாராக பிறந்த சேதுராமன்?

சிவகங்கையில் சிலை வைக்கவோ, காளையார்கோவில் நினைவிடத்தை புணரமைக்கவோ முடியாத சேதுராமன், தானொரு அகமுடையார் என இப்போது சொல்லிக்கொள்வது ஏன்?

11 ஏப்ரல் 2016

மாமன்னர்களின் சிலை சேதம்!

மதுரை திருமங்கலம் அருகேயுள்ள மருதுபாண்டியர்களின் சிலையை உடைத்தவர்கள், நிச்சயமாக முக்குலத்தோருக்கு எதிரான மாற்று சாதிக்காரர்கள் இல்லை. அது முக்குலத்தோர் என அரசியல் செய்யும் ஈனபுத்தி கொண்ட துரோகிகளால் தான் மருதுபாண்டியர்களின் சிலை உடைக்கப்பட்டுள்ளதாகவே உறுதிபடுத்தப்பட்ட தகவல்கள் வந்துள்ளது.

அகமுடையார்கள் தனித்த அடையாளத்தோடு முக்குலத்தோர் என்ற போலி அரசியல் கட்டமைப்பை விட்டு வெளியேறுவதால், அது முக்குலத்தோர் என அரசியல் செய்பவர்களுக்கு பெருத்த அடியாக இருப்பதால் தான் இம்மாதிரியான கேவலமானதொரு செயலில் இவர்கள் இறங்கிருக்கிறார்கள்.
என்னமாதிரியான கீழ்த்தரமான செயல்களில் இறங்கினாலும், முக்குலத்தோர் என அரசியல் செய்யும் துரோகிகளினால் அகமுடையார் ஒற்றுமையை சீர்குலைக்க முடியாது; இதன் மூலம், மென்மேலும் அகமுடையார்களின் ஒற்றுமை பலமடையத்தான் செய்யும் என்பதை இனி துரோகிகள் புரிந்து கொள்வார்கள்.


 இந்திய போராட்டத்தின் விடிவெள்ளியாக, உலகிலேயே முதன்முறையாக வெள்ளையனுக்கு எதிராக திருச்சி - திருவரங்கத்தில் 'ஜம்புதீவு' போர் பிரகடனத்தை வெளியிட்டு, 'வீரசங்கம்' என்ற தமிழ்தேசிய கூட்டமைப்பை அன்றைக்கே உருவாக்கிய மாமன்னர் மருது பாண்டியர்களை, வெறும் சமுதாய தலைவர்கள் என திரித்து பிரசுரித்த 'தமிழ் முரசு' பத்திரிகை மீதும் நடவடிக்கை எடுக்க கோரி கண்டன போஸ்டர்!



மருதுபாண்டியர் சிலைகளை சேதப்படுத்திய இழிபிறவிகளை ஒரு வார்த்தை கூட கண்டிக்க வக்கில்லாமல், 'அகமுடையார்களை பிரிக்கிறானுங்க'ன்னு புலம்பும் போதே இவர்கள் நோக்கம் எதுவென பலருக்கும் புரிந்திருக்கும்.


மருதுபாண்டியரின் சிலையை உடைத்து விட்டு, அந்த பழியை பட்டியல்சாதி மக்கள் மீது போடலாமென நினைத்த தப்பு கணக்கு பலிக்கவில்லை!


மாமன்னர் மருதுபாண்டியர்களின் சிலையை உடைத்த, முக்குலத்து துரோகிகளை கைது செய்!


மாமன்னர் மருது பாண்டியர்கள் சிலையை உடைத்த கள்வர்களை கைது செய்!
இதை விட வெளிப்படையாக கண்டிக்க முடியாது. இனியும் அந்த கள்வர்களை அடையாளம் கண்டுகொள்ளாமல் முக்குலத்தோர் என சொல்லிக்கொண்டு இருந்தீர்களேயானால் துரோகத்தால் அகமுடையார்கள் வீழ்த்தப்படுவதை யாராலும் தடுக்க முடியாது. துரோகிகளின் கூட்டமைப்பான முக்குலதோர் என்ற போலி அரசியல் கட்டமைப்பில் இருந்து வெளியேறி, அகமுடையார்களாக ஒன்றிணைவோம்!




19 நவம்பர் 2015

ஆளும் வர்க்கத்தின் அரஜாகம் - மருதுபாண்டியர் நினைவுத்தூண் அகற்றம்!



விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகிலுள்ள ஆத்திப்பட்டியில், சுதந்திர போராட்ட வீரர்களும், தமிழ் தமிழ் தேசியம் காத்தவர்களான மாமன்னர் மருது பாண்டியர்களின் உருவம் பதித்த நினைவுத்தூணை அரசு சார்பில் தரைமட்டமாக அகற்றப்பட்டுள்ளது. தமிழக தலைநகரிலே, நாட்டிற்காக என்ன சாதனை செய்தாரென்றே தெரியாத தெலுங்கர் சோபன்பாபு சிலையெல்லாம் பாதுபாப்பாக இருக்கையில், ஏதோவொரு கிராமத்து மூலையில் பெருந்தமிழர்களான மருது சகோதர்களின் நினைவுத்தூணை அகற்றுவதுதான் நாடு போற்றும் நான்காண்டு சாதனை போல.
ஆளும் வர்க்கத்தின் அராஜக போக்கான இச்செயலை, அனைத்து தமிழ் உறவுகளும் நிச்சயம் கண்டிப்பார்களென நம்புகிறேன்.

- இரா.ச.இமலாதித்தன்

14 ஆகஸ்ட் 2015

வெள்ளித்திரையில் மருது!




திரு. முத்தையா இயக்கும் 'மருது', திரு. வெற்றி மகாலிங்கம் இயக்கும் 'மருதாண்ட சீமை', திரு. வி.பி.செந்தில்குமார் இயக்கும் 'மதுரை அண்ணா பஸ் ஸ்டாண்ட்' உள்ளிட்ட இம்மூன்று திரைப்படங்களும் ஏதோவொரு வகையில், உலகிலேயே முதன்முறையாக வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிராக 'வீர சங்கம்' என்ற தமிழ் இனக்குழுக்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பை உருவாக்கி 'ஜம்புதீவு பிரகடன'த்தை அமல் படுத்தி, 1780 முதல் 1801 வரை 'சிவகெங்கை சீமை'யை திறம்பட ஆண்ட 'மாமன்னர் மருதுபாண்டியர்'களின் புகழை அறியாத இளந்தலைமுறையினருக்கும் மீண்டுமொருமுறை உலகறிய செய்யுமென நம்புகிறேன்.

இம்மூன்று திரைப்படங்களும் மாபெரும் வெற்றி பெற எம் வாழ்த்துகள்!

12 ஜூன் 2014

ஜம்புதீவு பிரகடன நாள்!

”இதை ஏற்றுக்கொள்ளாதவன் வைத்திருக்கும் மீசை என்பது என்னுடைய அடி மயிருக்குச் சமமானது. இதனை ஏற்றுக்கொள்ளாதவனுடைய பிள்ளைகள் ஐரோப்பிய ஈனப்பிறவிகளுக்கு தன்னுடைய மனைவியைக்கூட்டிக் கொடுத்தவன் பெற்ற பிள்ளைகள் ஆவார்கள். எனவே உடம்பில் ஐரோப்பியனின் இரத்தம் ஓடாத அனைவரும் ஒன்று சேருங்கள்!” யென்று உலகிலேயே முதன்முதலாக ஆங்கிலேயனுக்கு எதிராக போர்பிரகடனம் செய்த வரலாற்று சிறப்புமிக்க நாள் (ஜூன் 12 1801) இன்று. அன்றைய தமிழகத்தில் இருந்த 72 பாளையத்து அரசுகளையும் #வீரசங்கம் என்ற அமைப்பின் மூலமாக ஒன்றிணைத்து, திருச்சி - திருவரங்கத்தில் ஐரோப்பிய ஈனர்களுக்கு எதிராக ஜம்புதீவு பிரகடனத்தை மாமன்னர் மருதுபாண்டியர் வெளியிட்ட வீரம்செறிந்த நினைவேந்தல் நாளில், அன்றைக்கே தமிழ் சிற்றரசர்களை ஒன்றிணைத்து இன்றைய தமிழ்தேசியத்திற்கு வித்திட்ட மாமன்னர் மருதுபாண்டியர்களின் ஆளுமைமிக்க வீரத்தை அனைவரும் போற்றுவோம்!

வாழ்க மருதரசர் புகழ்!

- இரா.ச.இமலாதித்தன்

02 ஏப்ரல் 2014

போற்ற வேண்டிய தெய்வங்கள் மருதுபாண்டியர்!



உலகிலேயே முதன்முறையாக ஆங்கில ஏகாபத்தியத்திற்க்கு எதிராக ஜம்புதீவு பிரகடனத்தை திருச்சியில் வெளியிட்டு, நேரடியாக வெள்ளையர்களுக்கு எதிராக போர் புரிய தமிழகத்தை அன்றைய காலக்கட்டத்தில் ஆண்ட அனைத்து தரப்பட்ட மன்னர்களையும், சிற்றரசர்களையும், பாளையககாரர்களையும் ஒன்றுபடுத்தி "வீரசங்கம்" என்ற அமைப்பை உருவாக்கிய சிவகெங்கை சீமையின் மன்னர்கள் மருதுசகோதரர்களை இன்றைக்கு சாதீய பின்புலத்தில் அடையாளப்பட வைத்தது வேதனையான விசயம்.

பழந்தமிழர்களின் போர்க்கருவியான பூமாரங் என்ற வளரி பயன்பாட்டை அன்றைய நாட்களில் போர்களங்களிலும், வேட்டையாடும் களங்களிலும் பயன்படுத்தியவர்களில் மிக கைத்தேர்ந்தவர்களாக மருது சகோதரர்கள் மட்டுமே விளங்கினர் என்பது குறிப்பிடதக்கது.

மேலும், அவர்களது ஒப்பிடமுடியாத வீரத்தை - கடின உழைப்பை - நாட்டுப்பற்றை - தன்னம்பிக்கையை - இறை பக்தியை - அனைத்துதரப்பட்ட மக்களையும் அரவணைத்து சென்ற ஆளுமையை யாராலும் மறக்கடிக்க முடியாது. உலகிலேயே வெள்ளையர்களால் தனது எதிராளியின் பச்சிளங்குழந்தைகள் உள்பட குடிவழி ஆண் சந்ததியினரையும் ஒருவர் விடாமல்  ஒட்டுமொத்தமாக கொன்றொழித்த ஒரே சம்பவம் மருதுசகோதரர்களது விசயத்தில் மட்டுமே நடந்தேறியது என்பதை நினைக்கையில் மருதுசகோதரர்களின் வீரத்தையும் ஆளுமையையும் நம்மால் தெரிந்து கொள்ள முடியும்.

ஆட்சியை பிடிப்பதற்காக துரோகிகளின் தூண்டதலால்  மெய்க்காப்பாளன் கருத்தன் மூலமாக காட்டிக்கொடுக்கப்பட்டு மருது பாண்டியர்களை திருப்பத்தூரில் தூக்கிலிடும்போது அவர்களுக்கு ஆதராவாக கடைசிவரை நின்ற அனைத்து தரப்பட்ட மக்களான 500க்கும் மேற்பட்டோரை  ஒரே நாளில் தூக்கிலிடப்பட்ட அதிர்ச்சிகரமான மாபெரும் துயர சம்பவமும் இங்கேதான் அரங்கேறியது.

இன்றைய காலக்கட்டங்களில் விடுதலைப்புலிகள் உள்பட பல இராணுவ இயக்கங்கள் பயன்படுத்தி வருகின்ற முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் கொரில்லா போர்முறையை மிக நேர்த்தியாக அன்றைக்கே பயன்படுத்தி வெற்றிவாகை சூடிய மருதுபாண்டியர்களை வெறும் சாதீய வட்டத்தில் மட்டும் அடைக்க நினைப்பது அவர்களுக்கு நாம் செய்யும் துரோகமாகும்.

ஆன்மீகப்பணியில் கிருத்துவம் - இசுலாம் - ஹிந்து என்ற பாகுபாடின்றி அனைத்து வழிபாட்டு தளங்களையும் திருப்பணி செய்த மண்ணுரிமை போராளிகளான வெள்ளை மருதுவும் - சின்ன மருதுவும் நாம் போற்றி வணங்க வேண்டிய காவல்தெய்வங்கள் என்பதை நினைவில் கொண்டு எந்நாளும் அவர்களது ஆளுமையையும் வீரத்தையும் விவேகத்தையும் போற்ற வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை.

வாழ்க மருதரசர் புகழ்!

- இரா.ச.இமலாதித்தன்.

04 ஜனவரி 2014

அண்ணன் - தம்பி!

மதுரை மாவட்ட திமுக நிர்வாகிகள் கூண்டோடு நீக்கம்; புறக்கணிக்கப்படும் அழகிரி. கருணாநிதியின் கண்ணுக்கு எதிராகவே, அண்ணன் - தம்பிக்கான பதவி போட்டி வெடிக்கும் காலம் நெருங்கிவிட்டது. விரைவில், 'கலைஞர் திராவிட முன்னேற்ற கழகம்' என்ற கட்சிக்கூட உருவாகலாம். மக்களாட்சி காலத்திலும் மன்னராட்சி போல, வாரிசு அரசியலை உருவாக்கினால், அதன் எதிர்வினை இப்படித்தான் இருக்கும் என்பதற்கான சான்று இது. இதே போல, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலிலும், அண்ணன் - தம்பி போட்டி உச்சத்தில் இருக்கிறது.

விட்டுக்கொடுத்தலிலும் - விவேகத்திலும் - வீரத்திலும் - ஆளுமையிலும் - அரசாள்வதிலும், அண்ணன் - தம்பியாக வெற்றி வகை சூடியவர்கள், மாமன்னர் மருது பாண்டியர்கள் மட்டுமே!

24 அக்டோபர் 2013

மறக்கமுடியுமா மருதுபாண்டியரை?




உலகிலேயே பூமரங் எனப்படும் வளரி என்ற ஆயுதத்தை மிக நேர்த்தியாக பயன்படுத்த தெரிந்த ஓர் தமிழர் மாமன்னர் மருது பாண்டியர். மதுரை தெப்ப குளத்தின் ஒரு கரையில் இருந்து வீசினால், மறுகரை வரையில் சென்று மீண்டும் கண்ணிமைக்கும் நேரத்தில் மருதுவின் கைகளுக்கே வந்து சேரும். இதை நம்ம ஆளுங்க சொல்லல; வெள்ளைக்காரன் ஒருவரின் நூல் குறிப்பில் இது உள்ளது. "வீரம் என்ற குணம் தான் எதிரியும் மெச்சும்படியான நிலையை ஏற்படுத்தும்" என்று முத்துராமலிங்க தேவர் மருதுபாண்டியர்களை மனதில் வைத்தே சொல்லி இருக்க கூடும்!

வெள்ளை ஏகாதிபத்தியத்தை எதிர்த்து திருச்சிராப்பள்ளியில் ஜம்புதீவு பிரகடணத்தை அமல் படுத்தி அனைத்து தரப்பட்ட தமிழ் மக்களையும் ஒன்றிணைத்த மாமன்னர் மருது பாண்டியர்களின் வாய்மையும் - வீரமும் போற்றுதலுக்குரியது.
எங்கெல்லாம் அந்த (ஐரோப்பிய) இழிபிறவிகளை பார்க்க நேரிடுகிறதோ அங்கேயே அவர்களை அழித்தொழியுங்கள். ஐரோப்பியரால் இன்னும் ரத்தம் கலப்படமாகாமல் இருக்கும் அனைவரும் ஒன்றுபட முனைவீர். - இது மருதுபாண்டியரின் பிரகடணத்தின் ஒரு பகுதி.

முத்துவடுகநாத தேவரோடு காட்டில் வேட்டையாடி கொண்டிருந்த போது, அவர் மீது பாய்ந்த புலியை தனியாளாக நின்று கூரிய நகங்களும், பற்களும் கொண்ட புலியோடு யுத்தமிட்டு அதை அடக்கி வெற்றிகண்டவர் மருது!


எல்லைப்புற ஊர்களில் எல்லாம் காடுகளை உருவாக்கி காட்டரண்கள் அமைத்து, அங்கெல்லாம் கோட்டைகளை வலுவாக உருவாக்கிய மருது பாண்டியர்களின் இந்த போர்முறை இந்த உலகுக்கே புதிதானது. திடீர் தாக்குதல் - தாக்கிவிட்டு மறைதல் - மறைவிடங்கள் அமைத்து மறைந்து தாக்குதல் - ஆயுதங்களை மறைத்துவைத்து பிறகு பயன்படுத்துதல் - தங்கள் இடத்தை எதிரி கைப்பற்றும் சூழ்நிலையில் அந்த இடத்தை அழித்தல் போன்ற கொரில்லா போர் யுக்தியை பயன்படுத்தி பெரும்படைகளை வென்று மண்ணை காத்த மாவீரர்களான மாமன்னர் மருதுபாண்டியர்களின் வீரம் இன்றைக்கல்ல என்றைக்குமே போற்றத்தக்கது.

கி.பி. 1780 முதல் 1801 வரை சுமார் 20 ஆண்டுகள் ஆட்சி புரிந்த காலகட்டத்தில் சாதி, சமயச் சார்பற்ற, மத நல்லிணக்கத்தைக் கடைப்பிடித்த சிவகங்கை சீமை மருது பாண்டியர்களின் ஆட்சி தமிழ் வரலாற்றின் மைல்கல்!
 

தங்களது ஆட்சிக் காலத்தில் இஸ்லாமியர்களுக்காக நரிக்குடியில் மசூதியும், திருப்பத்தூரில் கான்பா பள்ளிவாசலையும், கிறிஸ்தவர்களுக்கு சருகணியில் தேவாலயமும், இந்துகளுக்காக குன்றக்குடி, காளையார்கோவில், திருமோகூர், மானாமதுரை, மதுரை ஆகிய இடங்களில் பெரிய சிவாலயங்களையும், முருகன் கோயிலையும் எழுப்பி திருப்பணி செய்து வழிபாடு நடத்தி இருபது வருடங்கள் ஆட்சி புரிந்த மாமன்னர் மருது பாண்டியர்களின் புகழை யாராலும் அவ்வளவு எளிதாக மறைத்துவிட முடியாது.

மாமன்னர் மருது பாண்டியர்களின் உயர்ந்த நாட்டுப்பற்றையும், வீரத்தையும், விவேகத்தையும், சுயமரியாதையையும் கி.பி. 85ம் ஆண்டில் வாழ்ந்த பிரிட்டானியத் தளபதியின் உரையோடு ஒப்பிட்டுப் பாராட்டுகிறார் ஆங்கில நாட்டைச் சார்ந்த நூலாசிரியர் கோர்லே.
  

தாங்கள் கட்டிய காளையார்கோவில் தகர்ந்து விட கூடாதென்பதாலும், ஆட்சியை பிடிப்பதறக்காக ஒருசில துரோகிகளின் சூழ்ச்சியாலும் தூக்கிலிடப்பட்டனர் மருதுபாண்டியர். ஆனால், திருப்பத்தூரில் மாமன்னர்கள் இருவர் மட்டும் தூக்கிலிடப்படவில்லை; தங்களது மன்னர்களுக்காக அவர்களோடு துணை நின்ற சாதி / மத வேறுபாடின்றி ஆயிரகணக்கான மக்களும் தூக்கிலிடப்பட்டது உலக வரலாற்றிலேயே இதுதான் முதலும் கடைசியும்! தன் மன்னனுக்காக தங்களது உயிரை தர நினைத்த மக்களும், அப்படிப்பட்ட மக்களுக்காகவும் மண்ணுக்காகவும் தங்களை இழந்த மருது பாண்டியர்களுக்கு நிகர் வேறு யாராக இருக்க முடியும்?

ஆங்கில ஏகாதிபத்தியத்தாலும் - ஆன்மீக பக்தியாலும் அக்டோபர் 24 - திருப்பத்தூர் மண்ணில் மாமன்னர் மருது பாண்டியர்களை தூக்கிலிட்ட 212 வது நினைவேந்தல் தினம் இன்று!

அடங்காத பற்றோடு அடியேனின் வீரவணக்கம்!
  
   - இரா.ச.இமலாதித்தன்