காமராஜர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காமராஜர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

01 நவம்பர் 2018

தமிழ்த்தேசிய நாட்காட்டி!



காமராஜர் - வேலுப்பிள்ளை பிரபாகரன் - நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.
பொதுவாக நேதாஜி - பசும்பொன் தேவர் காம்பினேசனை தான் அதிகம் பார்த்திருப்போம். காரணம், ஐ.என்.ஏ., பார்வார்ட் ப்ளாக் கட்சி. மேலும் நேதாஜி வழியில் பயணித்த பசும்பொன் தேவருக்கும் - காமராஜருக்கும் இடையிலான அரசியல் பகைக்கு பலிக்கடா ஆனவரே இமானுவேல் சேகரன். இதன் பின்புலத்திலேயே, பசும்பொன் தேவரோடு மட்டுமில்லாது பிற்காலத்தில் நேதாஜியோடும் நேரெதிர் திசையில் பயணித்தவர் காமராஜர். இப்படியாக நேதாஜிக்கும், காமராஜருக்கும் கருத்தொற்றுமையே இல்லாத போது, இந்த நாம் தமிழரின் 2019ம் ஆண்டு நாட்காட்டி எந்த வகையில் இம்மூவரையும் இணைத்திருக்கிறது?



தமிழ் தேசியத்தின் முன்னோடிகளான மாமன்னர் மருதுபாண்டியர்களின் படங்கள் இடம்பெற்ற நாம் தமிழரின் தமிழ்த்தேசிய நாள்காட்டி. வரவேற்கிறோம்!

15 ஜூலை 2016

சாதியம் தாண்டி, சாதித்த காமராஜர்!

கடைசி வரை திருமணமே செய்து கொள்ளாமல் ஏழை எளிய மக்களின் வளர்ச்சிக்காக பாடுபட்ட காமராஜர் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் பல இந்திய அரசாங்கத்தின் நிறுவனங்கள் இங்கே இல்லாமலே போயிருந்திருக்கும். மிக குறைந்த எண்ணிக்கையில் இருந்த பள்ளிகளின் எண்ணிக்கையை, 27000 பள்ளிகளாக தன் ஆட்சிக்காலத்தில் மேம்படுத்தி, பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு திட்டத்தை முதன்முதலாக உருவாக்கிய உத்தமர் காமராஜர்.

மேலும், ராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வி திட்டதை ரத்து செய்த சமதர்மவாதி அவர். இந்திய அரசியலில் கிங்மேக்கராக விளங்கிய காமராஜர் காலத்தில் தான் என்.ஐ.டி. போன்ற தேசிய அளவிலான கல்வி நிலையங்களும் தமிழகத்தில் கால் பதித்தன. இது தவிர அவரால் தான் தமிழகத்தின் நீர் மேலாண்மை பாதுகாக்கப்பட்டது. காவிரி, அமராவதி, வைகை, மணிமுத்தாறு, மேட்டூர் போன்ற பல நீர்பாசன திட்டங்களும் காமராஜர் காலத்தில் தான் உருவாகப்பட்டது.

01. பாரத மிகு மின் நிறுவனம் (BHEL)

02. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்

03. மணலி சென்னை சுத்திகரிப்பு நிலையம்
(MRL இதன் தற்போதைய பெயர் CPCL)

04. இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை (ICF)

05. நீலகிரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை

06. கிண்டி மருத்துவ சோதனைக் கருவிகள் தொழிற்சாலை

07. மேட்டூர் காகிதத் தொழிற்சாலை

வெறும் வாய்ச்சொல் வீரராக மேடையில் மட்டும் பேசி கைத்தட்டி வாங்கிக்கொள்ள விரும்பாத கர்மவீரர் காமராஜர் என்ற பச்சைத்தமிழனால் தமிழ்நாட்டிற்கு இவையெல்லாம் அற்பணிக்கப்பட்டவை என்பதை நினைக்கையிலேயே தமிழனாக பெருமையாக இருக்கிறது. படிக்காத மேதை காமராஜர் அவதரித்த நாளான ஜூலை 15ம் தேதியை, கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடுவோம்!

காமராஜரை அகமுடையார்கள் ஏன் போற்ற வேண்டும்? என்று கேள்வி கேட்பதை விட, காமராஜரை ஏன் அகமுடையார்கள் புறக்கணிக்க வேண்டும்? என்ற கேள்விக்கு யாரிடமும் பதில் இருக்காது. ஏனெனில்,காமராஜரின் ஆட்சிக்காலத்தில் தான், தென் தமிழகத்தில் அகமுடையாருக்கு அதிக அளவில் தேர்தலில் நிற்க தொகுதிகள் வழங்கப்பட்டன. டெல்டா பகுதிகளில் உள்ள அகமுடையார் உள்பட அனைவருமே காமராஜரின் பக்கமே நின்றார்கள். அந்த காலந்தொட்டே, அகமுடையார்களுக்கும் காமராஜருக்கும் ஒருவித இணக்கமான நிலையே இருந்து வந்திருக்கிறது. அதுபோலவே நாடார்களுக்கும் அகமுடையார்களுக்கும் எந்த நேரத்திலும் தனிப்பட்ட பகை வந்தது இல்லை. அனைத்து சமூகங்களையும் அரவணைத்து செல்லும் அகமுடையார் சமூகத்திற்கு யாரும் எதிரியில்லை என்பதை உணர்வோம். சிலர் சாதிக்காக காமராஜரை எதிர்க்கலாம். நாம் சாதித்த காமராஜரை ஆதரிப்போம்.

தன் காலத்தில் அரசியல் செய்தவர்களெல்லாம் மைக் பிடித்து பல மணி நேரம் பேசி மக்களின் கைத்தட்டலை மட்டுமே வாங்கிய நேரத்தில், தொலைநோக்கு பார்வையோடு பல திட்டங்களை பேசாமல் செயல்படுத்தி காட்டியவர் கிங்மேக்கர் காமராஜர்.இத்தனை வருடங்கள் கழித்த பின்னாலும் கர்மவீரர் காமராஜரை அவரது சாதியினர் அல்லாத மாற்று சாதியினரும் வருடாவருடம் போற்றுக்கின்றனர் என்பதே அவருக்கான அங்கீகாரம். இன்னும் எத்தனை வருடங்கள் கடந்தாலும், தமிழக தேர்தல் பரப்புரையில் "மீண்டுமொரு காமராஜர் ஆட்சியை நாங்கள் தருவோம்!" என்று முழுக்கமிடாத கட்சிகளே இருக்க போவதில்லை.

சாதி அடையாளம் கடந்து சாதித்த பெருந்தலைவரின் பிறந்தாள் ஜூலை 15!
பெருந்தமிழருக்கு சக தமிழனாக புகழ் வணக்கம்!

14 ஆகஸ்ட் 2015

ஆகஸ்ட் மாத ட்விட்!



நீயா நானாவின் இயக்குனரான ஆண்டனி நாடாரின் தயவால் காமராஜர் பற்றிய அரிய நிகழ்ச்சி, தற்போது! (ஆகஸ்ட் 09)


-)(-


கஜினி படத்துல ஏர்வாய்ஸ் ஓனரை லவ் பண்ற மாதிரி நடிச்ச அசினுக்கு உண்மையாகவே கணவராக போறவர் மைக்ரோமேக்ஸ் ஓனர். வாழ்க்கையில எதுவும் நடக்கலாம்! (ஆகஸ்ட் 10)


-)(-


மேகி நூடுல்ஸ் மீதான தடையை நீக்கியதால் அந்த கம்பெனி காரனை விட, சமையல் தெரியுமென பில்டப் கொடுத்துக்கொண்டிருந்த பொண்ணுங்க தான் சந்தோச படுதுங்க! (ஆகஸ்ட் 13)


-)(-


சுதந்திர தினத்தில் குண்டுவெடிப்பு நிகழாமல் இருக்க நாடு முழுவதும் பாதுகாப்பை அதிகரிக்கும் போதே, 'சுதந்திரம்' என்ற வார்த்தை அர்த்தமற்றதாகிறது! (ஆகஸ்ட் 14)


-)(-


எங்க நாகப்பட்டினம் அருகேயுள்ள தலைஞாயிறில் மது அருந்தியவர் மரணம். மேலும் அவரது நண்பர்கள் ஐந்து பேர் மருத்துவமனையில் அனுமதி. ஜெய் டாஸ்மாக்! (ஆகஸ்ட் 15)

15 ஜூலை 2015

காமராஜர் பிறந்தநாள்!

கருவேல மரங்களை போலவே முதுகளத்தூர் கலவரத்தையும் தென்னகத்தில் விதைத்த கல்விக்கண் திறந்த காமராஜர் பிறந்தநாள் இன்று! கருவேலமரங்கள் விருட்சமாகி விவசாயத்தையே இன்று பாழாக்கி விட்டது, அதுபோலவே முதுகளத்தூர் கலவரமோ பெருந்தீயாய் இரு சமுதாயத்தையே வீணாக்கி கொண்டிருக்கிறது என்பது கூட பல சிறந்த சாதனைகளை செய்த கர்மவீரர் காமராஜருக்கு கரும்புள்ளியாக அமைந்து விட்டது என்பதையும் யாராலும் மறுக்க முடியாது!

18 ஜூன் 2015

திரு.கக்கனின் பிறந்தநாள் இன்று!

திரு.காமராசரோடு ஒப்பிடுகையில் திரு.கக்கன் ஒருபடி மேலாகவே போற்றுதலுக்குரிய ஆளுமைமிக்க மாமனிதர். மறதியை வழமையாக கொண்ட தமிழனுக்கு தொடர்ச்சியாக நினைவூட்ட திரு.காமராசருக்கு 'நாடார் சங்கம்' போல, திரு.கக்கனுக்கு பின்புலத்தில் அவர் சார்ந்த எந்தவொரு சாதி சங்கமும் முன்வரவில்லை என்பதுதான் கசப்பான உண்மை!

திரு.கக்கனின் பிறந்தநாள் இன்று!

15 ஜூலை 2014

கிங்மேக்கர் காமராஜரின் அரசியல் வரலாறு!

பசும்பொன் தேவரை பிடிக்காதவர்களும், காமராஜரை பிடித்தவர்களும் தவறாமல் படிக்க வேண்டிய பதிவு:-

1936-ல் நகரசபை தேர்தல் நடைபெற்ற இருந்த சமயம், அன்று காமராஜர் விருதுநகரில் ஒரு சாதாரண காங்கிரஸ் தொண்டர். சிறந்த தேச பக்தராகத் திகழ்ந்தார். அன்று வாக்குரிமை உள்ள நாடார் சமூகத்தில் நூற்றுக்கு தொண்ணூறு பேர் ஜஸ்டிஸ் கட்சியில் இருத்தால் நகரசபை தேர்தலில் காமராஜரை நிற்க வைக்க வேண்டுமென பசும்பொன் தேவர் நினைக்கிறார்

ஆனால் காமராஜருக்கு ஓட்டுரிமை இல்லை. காரணம் அவர் பெயரில் எந்த ஒரு சொத்தும் இல்லை. காமராஜரின் தாயார் சிவகாமி அம்மையாரைப் பார்த்து “உங்கள் மகனை தேர்தலில் நிற்க வைக்கப் போகிறேன். உங்கள் பெயரில் உள்ள வீட்டை காமராஜ் பெயரில் எழுதி வையுங்கள்” என்று பசும்பொன் தேவர் கேட்கிறார். யாருக்கு சொத்து இருக்கிறதோ, யார் வரி செலுத்துகின்றாரோ அவர் தான் வாக்காளாராக முடியும். அதனால் தான் பசும்பொன் தேவர் சிவகாமி அம்மையாரிடம் வீட்டை மாற்றி எழுதி வைக்கக் கேட்டார். அதற்கு அந்த அம்மையார் அவர்கள் “எனக்கு இருப்பது இந்த ஒரு வீடு தான். என் மகனை ஓட்டராக்குவதற்காக இந்த வீட்டை அவன் பேருக்கு எழுதிவைக்க முடியாது. எனக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. நானோ விதவை. எங்கள் சாதியில் ஒரு வீடாவது இருந்தால் தான் அந்தப் பெண்ணுக்கு நல்ல இடத்தில் மாப்பிள்ளை கிடைப்பார். என் மகன் காமராஜ் வீட்டுக்கு உதவாத பிள்ளையாக போய்விட்டான். அவனுக்கு எழுதி வைத்துவிட்டு நானும் என் பெண்ணும் தெருவில் நிற்கமுடியாது” என்று காமராஜரின் தாயாரும் மறுத்து விட்டார்.

அதற்கு மேல் பசும்பொன் தேவர் எதுவும் யோசிக்காமல் நான்கு வெள்ளாட்டை விலைக்கு வாங்கி, அதற்கு விருதுநகர் நகரசபையில் காமராஜர் பெயரில் வரி செலுத்தி ரசீதைப் பெற்றுக்கொண்டு ஒரு தகர வில்லையை வரிக் கட்டியதன் அடையாளமாக வெள்ளாட்டின் கழுத்தில் கட்டி விட்டு காமராஜரை வாக்களராக்கி தேர்தலில் நிற்க வைத்து வெற்றி பெற வைத்தார் பசும்பொன் தேவர்.

பின்பொரு சட்டமன்ற தேர்தல் சமயம், இரவோடு இரவாக காமராஜரை காரில் தூக்கி போட்டு பட்டிவீரன்பட்டி சென்று அங்கேயுள்ள சௌந்திரபாண்டிய நாடார் வாழைத் தோப்பில் கொலை செய்து புதைத்துவிட வேண்டும் என்று காமராஜருக்கு எதிரான அரசியல் எதிரிகள் தீட்டிய திட்டம் பற்றிய தகவல் பசும்பொன் தேவருக்கு கிடைக்க, உடனே தேவர் விருதுநகருக்கு வருகிறார். காமராஜரை சந்தித்து "மேலே சொன்னவைகள் உண்மை தானா?" என்று கேட்கிறார். ‘ஆமாய்யா, அப்படித்தான் சொல்கிறார்கள்” என்றார் காமராஜர். அன்று இரவே விருதுநகரில் தேசபந்து மைதானத்தில் பொதுக் கூட்டம். காமராஜருக்கு ஓட்டுக் கேட்டு பசும்பொன் தேவர் பேசினார்.

"இப்போது காமராஜரை கொலை செய்து தீர்த்துக் கட்டி விடலாம் என்று பேசுவதாக கேள்விப்படுகிறேன். காமராஜர் ஏழைத்தொண்டன் என்று இங்கே உள்ள ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் நினைத்தால் அவர்களுக்காக அனுதாபப்படுகிறேன். காமராஜருக்குப் பின்னால் காங்கிரஸ் மகா சபை இருக்கிறது. அதே மகா சபையில் எங்களைப் போல் எந்தவித தியாகத்திற்கும் தயாராக உள்ள கோடான கோடிப் பேர் இருக்கிறார்கள் என்பதை மறந்துவிட வேண்டாம். இதை மீறி காமராஜர் மீது ஒரு ஒரு சிறு துரும்பு படுமேயானால் இங்கே ஜஸ்டிஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வி.வி.ராமசாமி நாடாருக்கு நான் எச்சரிக்கையாகச் சொல்கிறேன். நீங்கள் வீதியில் நிம்மதியாக நடமாட முடியாது. இரும்புக் கவசம் போட்டுக் கொண்டுதான் நடமாட முடியும்” என்று வேகமாகப் பேசினார்.

அந்தப் பேச்சுக்கு பின்னால் பசும்பொன் தேவருடைய ஆதரவாளர்களால் தனது உயிருக்கு ஆபத்து வரலாம், நான் கிராமங்களுக்குப் போய் ஒட்டுக் கேட்கும் பொழுது எனக்கு போலீஸ் பந்தோபஸ்து வேண்டும் எண்டு கலெக்டரிடம் கேட்டும் பலன் இல்லாததால், வி.வி.ராமசாமி நாடார் போட்டியிலிருந்து விலகிக் கொண்டார். காமராஜர் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பசும்பொன் பெருமகனாருடைய ஆதரவு மட்டும் அன்றைக்கு காமராஜருக்கு இல்லாமல் இருந்திருக்குமானால் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பது மாத்திரமல்ல, காமராஜரை ஜஸ்டிஸ் கட்சியினுடைய பெரும்புள்ளிகள் உயிரோடு விட்டு வைத்திருப்பார்களா? என்பது கூட சந்தேகம் தான். கிங்மேக்கர் என்று அழைக்கப்பட்ட காமராஜரையே அரசியலில் அடையாளப்படுத்திய பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் பற்றி பலர் புரிந்து கொள்ளாமல் இருப்பது வேதனையான விசயமே!

- இரா.ச.இமலாதித்தன்