திரு. வைகோ தாயாரின் மறைவுக்காக திரு. சீமானின் இரங்கல் அறிக்கையும்,
கலிங்கப்பட்டிக்கே சென்று நேரில் அஞ்சலி செலுத்தியதையும், அரசியல் காய்
நகர்த்தலாகவே பார்க்கின்றேன். ஒருமுறை ஈழ ஆதரவு திரைப்படத்தின் சிறப்பு
காட்சியை ஒரே திரையரங்கினுள் அருகருகே திரு.வைகோவும் - திரு. சீமானும்
அமர்ந்திருந்து பார்த்திருந்தும், இருவரும் முகம் பார்த்து கூட
பேசிக்கொள்ளவில்லை. அதே போல எங்கள் நாகப்பட்டினத்தில் சில மாதங்களுக்கு
முன்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைத்த பொது கூட்டத்தில் திரு. சீமான்
அவர்களின் பேச்சில் கூட முழுக்க முழுக்க திரு. வைகோவின் ஒவ்வொரு அரசியல் நடவடிக்கையையும் விளக்கமாக சாடி விமர்சித்து பேசினார்.
அப்படி இருந்தும் இப்போதைய அரசியல் சூழலில் தெய்வத்திருமதி
வை.மாரியம்மாளின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டது, தன் மீதான தெலுங்கு
அமைப்புகளுடைய எதிர்ப்பின் வீரியத்தை திசை திருப்பவே என எண்ணுகிறேன்.
மேலும், திரு. வைகோவோடு இணக்கமாக இருந்த விடுதலைகளத்தை சேர்ந்த திரு.
நாகராஜன் போன்றோரெல்லாம் திரு. சீமானின் இந்த அரசியல் காய் நகரத்தலை
நிச்சயமாக எதிர்பார்த்திருக்கவே மாட்டார்கள்.
விவேகமுள்ள வீரம் கண்டிப்பாக வெற்றிக்கு வித்தாகும். வாழ்த்துகள், திரு. சீமான்!
- இரா.ச.இமலாதித்தன்.
விவேகமுள்ள வீரம் கண்டிப்பாக வெற்றிக்கு வித்தாகும். வாழ்த்துகள், திரு. சீமான்!
- இரா.ச.இமலாதித்தன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக