மனசுல உள்ளதை மறைக்காமல் நேர்மையான பதிவை தரும் பதிவர்கள் சமூக ஊடகங்களில் ஒன்றான ஃபேஸ்புக்கில்
மிக குறைவு. தனிப்பட்ட செயல்பாட்டுக்கும், ஃபேஸ்புக்கிற்கும் சம்பந்தமே
இல்லாமல் பதிவிடும் நபர்களின் போலி பிம்பம் அருகிலுள்ளவர்களுக்கு மட்டுமே
தெரியும். மனசுல ஒன்னு; செயல்ல ஒன்னு; பேச்சுல ஒன்னு; எழுத்துல ஒன்னு;
இப்படி பல முகங்களில் முகமூடியிட்டு போலியாக பதிவிடும் நபர்களே இங்கே
அதிகம். இதுல ஏன் பிரபலம் என்ற பிதற்றல்? இங்கே வழங்கப்படும் லைக்குகளை
வைத்து பக்கத்து வீட்டுக்காரன் கிட்ட கடன் கூட வாங்க முடியாது. இது தான்
எதார்த்தம். அதை விட்டுவிட்டு பிரபலம் - லைக் போன்ற அற்பதனத்துக்காக
அக்கப்போர் தேவையில்லாதது. பிரபலமான பதிவர்கள், அந்த பிரபலத்தை பயன்படுத்தி
திரைத்துறையிலோ - எழுத்துத்துறையிலோ, டிவி/பத்திரிகை போன்றதோர் ஊடகத்திலோ
தனக்கானதொரு முத்திரையை பதித்தால் மகிழ்ச்சி. மற்றபடி இந்த லைக்குகளெல்லாம்
வெறும் போலி பெருமை பட்டியலில் தான் சேரும். ஒரு பிரபலமான பதிவர் ஓரிரு
மாதம் பதிவிடாமல் இருந்துவிட்டால், அதன் பிறகு அந்த பிரபல பதிவரை சீண்ட கூட
ஆளிருக்காது. இதை சொல்வதனால், ச்சீ ச்சீ இந்த பழம் புளிக்கும் என்ற
இயலாநிலையில் நானில்லை. எதார்த்தம் இது தான்.
- இரா.ச.இமலாதித்தன்
- இரா.ச.இமலாதித்தன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக