ஏறக்குறைய அனைத்து அஜித் ரசிகர்களும், தங்களால் முடிந்த அளவுக்கு
எவ்வளவு கீழ்த்தரமாக வன்மத்தை வார்த்தைகளால் விமர்சனம் என்ற பெயரில்
எழுதமுடியுமோ, அந்தளவுக்கு எழுதி விட்டார்கள். விஜய் ஒன்றும்
விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் இல்லை. ஆனால் ஒருவன் எப்போது தடுமாறி கீழே
விழுவான்?என காத்திருந்து மேலேறி மிதிக்கும் கேவலமான செயல்களை வெறும்
லைக்குக்காகவும், தன்னுடைய காழ்ப்புணர்ச்சியை வெளிக்காட்டவும்
முயற்சிப்பதுதான், 'நடிகனின் ரசிகனல்ல; நல்ல மனிதனின் ரசிக'னென
சொல்லிக்கொள்ளும் நபர்களின் செயலா?
ஒரு திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்பெற்றால் அது இயக்குனரின் திறமையென
புகழும் அறிவுஜீவிகள், ஒருவேளை ஒரு திரைப்படம் தோல்வியடைந்தால் அது நடிகனை
மட்டும் குறை கூறுவது எந்தவகையிலும் சரியென படவில்லை. பல அவமானங்களையும்,
பலரது விமர்சனங்களையும் தாண்டித்தான் இந்த உயரிய உட்ச நிலையை விஜய்
அடைந்திருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. மீண்டும், தொடர்ச்சியாக
மெகாஹிட் திரைப்படங்களை கொடுக்க, ரசிகனாக என் வாழ்த்துகள், இளைய தளபதி!
- இரா.ச.இமலாதித்தன்.
- இரா.ச.இமலாதித்தன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக