மாமன்னர் மருதுபாண்டியரின் நினைவேந்தல் நிகழ்வை அக்டோபர் 24ம்
தேதியையும் முன்னிலை படுத்தினால் நன்றாக இருக்கும். மேலும், வெறும்
உணர்ச்சி பூர்வ வாசகங்களை மட்டும் பயன்படுத்தாமல், அனைத்து தமிழ்
இனக்குழுக்களையும் ஒன்றிணைத்து மேற்கத்திய ஏகாதிபத்தியத்தை எதிர்த்த
கூட்டணியான வீரசங்கம் பற்றியும் பதாகை வாயிலாக பரப்புங்கள். தமிழரின்
பாரம்பரிய போர் மரபான வளரி வீச்சு பற்றியும், ஜம்புதீவு பிரகடனம் பற்றியும்
பதிவிடுங்கள். கொரில்லா போர்முறையை முதன்முதலாக பயன்படுத்திய போர் தந்திர
நுட்பங்களையும், 1780 முதல் 1801 வரையிலான தங்களது ஆட்சிக்காலத்தில் மத
வேறுபாடின்றி அனைத்து வழிபாட்டு தளங்களுக்கும் செய்த திருப்பணிகளை
பற்றியும் வெளியுலகிற்கு சொல்லுங்கள்.
- இரா.ச.இமலாதித்தன்
- இரா.ச.இமலாதித்தன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக