27 அக்டோபர் 2015

மருது பாண்டியர் பிறப்பெடுத்த நரிக்குடி - முக்குளத்தில் மணி மண்டபம்!

அனைத்து இணையமெங்கும் - இதயமெங்கும் - இவ்வூரெங்கும் - மாமன்னர் மருதுபாண்டியர்களாக தென்படுகின்றனர். தமிழ் தேசியத்தின் முன்னோடிகளை நினைவுபடுத்தும் அனைவருக்கும்,
தமிழ் தேசியத்திருநாள் நல் வாழ்த்துகள்!

 ~~~~~~~~~~~~~

மாமன்னர் மருதுபாண்டியர்கள் பிறப்பெடுத்த நரிக்குடி-முக்குளத்தில் மணிமண்டபம் எழுப்ப வேண்டும். அக்டோபர் மாதம் மட்டும் மாலை அணிவித்துவிட்டு போகும் அரசியல்-சாதி கட்சிகள் இதை முன்னெடுக்க வேண்டும்.

~~~~~~~~~~~~~~

மாமன்னர் மருதுபாண்டியர்களுக்கு அவர்கள் பிறப்பெடுத்த நரிக்குடி - முக்குளத்தில் மணிமண்டபம் கட்ட விருப்பப்படும் அனைத்து உறவுகளும், கீழே உள்ள கோரிக்கையை காப்பி செய்து, http://www.cmcell.tn.gov.in என்ற இணையத்தின் மூலமாக முதல்வர் தனிப்பிரிவுக்கு இதை அனுப்பலாம். நாம் அனுப்பும் இந்த கோரிக்கையானது அதிகமானால் மணிமண்டபத்தை அரசங்கமே விரைவாக கட்டி முடிக்க வாய்ப்பு அதிகமுள்ளது.

-------------------------------------------
வணக்கம்!
முதல் சுதந்திர போராட்ட வீரர்களான மாமன்னர் மருது சகோதரர்களின் நாட்டுப்பற்றையும், தியாகத்தையும் போற்றும் வண்ணம் தமிழ்நாடு அரசின் சார்பாக ஆண்டுதோறும் அக்டோபர் 24ம் தேதி திருப்பத்தூரில் அரசுவிழா நடைபெற்று வருகிறது. இது தமிழக அரசின் முன்னெடுப்பால் தான் சாத்தியாமானது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை. மேலும் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின / குடியரசு தின உரையில், மாமன்னர் மருதுசகோதரர்களின் சுதந்திர போராட்ட வீரத்தை பறைசாற்றும் வகையில் அவர்களின் பெயர்களை சுட்டிக்காட்டி, கூடவே அவர்களின் வாரிசுதாரர்களுக்கு ஊதியத்தொகையை அதிகரித்து கொடுத்து வரும் தமிழக அரசுக்கு நன்றிகளை தெரிவிக்க நாங்கள் அனைவருமே கடமைப்பட்டிருக்கின்றோம். கடந்த சில நாட்களுக்கு முன்பாக, உத்ரகாண்ட் நாடாளுமன்ற உறுப்பினரான மாண்புமிகு. தருண்விஜய் அவர்கள் கூட, ”நாட்டுக்காக உயிர் நீத்த மருது சகோதரர்கள் பற்றிய வரலாற்று செய்தியை நாடு முழுவதுமுள்ள பள்ளி/கல்லூரி பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளார். அப்படிப்பட்ட நாடுபோற்றும் சுதந்திர போராட்டவீரகளான மாமன்னர் மருதுசகோதரர்கள் பிறந்த ஊரான நரிக்குடி-முக்குளம் என்ற ஊரில் அவர்களது நாட்டுப்பற்றை உலகறிய செய்யும் வகையில் அங்கே ஒரு மணிமண்டபம் கட்டி, அவர்கள் பிறந்த வீட்டை நினைவு சின்னமாக அறிவிக்க வேண்டுமென மாண்புமிகு தமிழக முதல்வருக்கு, ஒட்டுமொத்த இந்திய குடிமக்களின் சார்பாக கோரிக்கை வைக்கின்றோம். எந்தவிதமான செயற்கரிய கோரிக்கையை கூட செயல்படுத்தும் வல்லமையும், தாயுள்ளமும் கொண்ட தமிழக முதல்வர் அவர்கள் மாமன்னர் மருதுபாண்டியர்களுக்கு அவர்கள் பிறந்த மண்ணான நரிக்குடியில் மணிமண்டபத்தை ஏற்படுத்துவார்களென நம்பிக்கையுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.
நன்றி.
---------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக