26 நவம்பர் 2015

தமிழர்களின் எழுச்சிமிகு விடுதலை நாள்!

என் ராசி, என் நட்சத்திரம், என் தலைவன்! தமிழ் தேசிய தலைவனின் பிறந்தநாளே, தமிழர்களின் எழுச்சிமிகு விடுதலை நாள்!

(அடியேனும் விருச்சிக ராசி, கேட்டை நட்சத்திரம் தான்)


(படம்: மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் ஜாதகம்.)

தமிழ் தேசியத்தலைவர் அண்ணன் வே.பிரபாகரனின் பிறந்த நாளான இன்றைக்கும் கூட, இனத்தாலும் - மொழியாலும் தமிழர்களான இசுலாமியர்களில் பெரும்பான்மையானோர் வடக்கத்திய அந்நிய மொழி பேசும் ஆமீர்கானுக்காக மல்லுக்கட்டி கொண்டிருக்கின்றனர்.

ஆக, இவர்களின் முதன்மை அடையாளம் மொழி, இனம் இல்லை; மதம் தான் இவர்களின் ஒட்டுமொத்த அடையாளம் என்பது போலவே செயல்படுவது வேதனையான விசயம்.

- இரா.ச.இமலாதித்தன்

25 நவம்பர் 2015

கார்த்திகை தீபஒளி திருநாள் வாழ்த்துகள்!

தமிழர்களின் பெரும்பாலான விழாக்கள் முழுநிலவு பெருநாளில் தான் இருந்தது. அதற்கு மற்றுமொரு சான்றாக, உலகத்திற்கே வழிகாட்டிய பெருந்தமிழர்கள் கொண்டாடும் கார்த்திகை தீபஒளி திருநாள் வாழ்த்துகள்!

ரஹ்மானென்ற தமிழன்!



2009ம் ஆண்டு உலக ஊடகங்களே உற்று நோக்கிய ஆஸ்கார் மேடையில், 'எல்லா புகழும் இறைவனுக்கே!' என தாய்த்தமிழில் முழங்கிய ஏ.ஆர்.ரஹ்மானை, அன்றைய வட இந்திய ஊடகங்கள் மொழிரீதியாக மென்மையாக சாடின. இரண்டு ஆஸ்கார் விருதுகளை இந்தியனாக வாங்கி இந்தியாவிற்கு கெளரவம் சேர்த்த போதும், தென்னிந்தியனாகவும், தமிழனாகவும் தான் ரஹ்மான் வடக்கத்திய ஊடகங்களுக்கு தென்பட்டார். இப்போதும் கூட அவர் சொன்ன கருத்தை பெரிதாக்கி அவரது புகழுக்கு களங்கம் விளைவிக்க மற்றுமொரு காரணம் தமிழன் என்பதால் கூட இருக்கலாம்.

அமீர்கானின் பின்புல வரலாறு எதுவும் தெரியாது. அந்த வரலாறை தேடவும் விரும்பவில்லை. ஆனால், ஏ.ஆர்.ரஹ்மானின், தந்தையும் தாயும் தமிழர்கள் என்பதும், ரஹ்மானின் அப்பாவான இசையமைப்பாளர் திரு.சேகர் அவர்கள் தமிழ் இனக்குழுவான முதலியார் பட்டமுள்ள அகமுடையார் தான் என்பதும், ரஹ்மானின் இயற்பெயர் திலீப்குமார் என்பதும் தான் எனக்கு தெரிந்த ஏ.ஆர்.ரஹ்மான் என்ற தமிழனின் கடந்தகால பின்புல வரலாறு.

இசைஞானி இளையராஜாவுக்கு பிறகு ரஹ்மானின் இசைக்கு பரம ரசிகன் என்பது மட்டுமல்ல; மேலும் இளையராஜாவை விட ரஹ்மானின் தனிப்பட்ட குணநல பண்புகளுக்கும், தன்னடக்கத்திற்கும் மிகப்பெரிய ரசிகன் என்ற முறையில், ஊடகங்கள் என்ன சொன்னாலும், சக தமிழ் பேரினத்தவனாக, மதம் கடந்து ஏ.ஆர்.ரஹ்மானை ஆதரிக்கிறேன்.

- இரா.ச.இமலாதித்தன்

என் பார்வையில் இந்த வாரம்

விஜய் தொலைக்காட்சியின் 'ஒரு வார்த்தை ஒரு லட்சம்' என்ற தமிழ் வார்த்தைகளை கண்டுபிடிக்கின்ற மாணவர்களுக்கான அறிவுபூர்வமான பொழுதுபோக்கு நிகழ்ச்சியின் இன்றைய பகுதியில், பெரும்பாலான வார்த்தைகளில் தமிழில்லை; சமக்கிருதம் தான்!

#



விகடன் மீது அ.தி.மு.க.விற்கும், தந்தி மீது தி.மு.க.விற்கும், ஆமீர்கானின் மனைவி சொன்ன 'அது' இல்லை போல!


#

பல லட்ச மக்களை தங்களது பேச்சுகளாலும், எழுத்துகளாலும் கட்டிப்போட்டு ஆட்சியை பிடித்த தி.மு.க., இன்று தந்தி டி.வி.போன்ற ஊடக விவாதக்களங்களில் ஒருசிலர் மத்தியில் கூட தனது ஆளுமையை நிரூபணம் செய்ய முடியாமல் ஒதுங்கி செல்வது ஆச்சர்யம் தான்.
களத்தில் வெற்றி தோல்வி என்பதை விட, தோல்வியடைவோம் என்ற எண்ணத்தில் அந்த களத்தையே இழப்பது தான் பலவீனம் என்பது போலவே தி.மு.க.வின் இந்த முடிவும் அமைந்திருக்கிறது.

#

திரு. நெப்போலியன் ரெட்டியாரும், பா.ஜ.க.வின் மாநில துணைத்தலைவரானார்!

வாழ்க தமிழக பா.ஜ.க.!

#

கருணாநிதியை சந்தித்த கோவன் மீதான புரட்சி - புடலங்காய் - நம்பிக்கையெல்லாம், இனி சந்தேகத்திற்கு உள்ளானாலும் துளியும் தவறில்லை.

#
கூகிள் போன்ற இணைய தேடுபொறிகளில், Tiger என தேடினால் புலி வருமா என தெரியாது. கண்டிப்பாக எம் அண்ணன் பிரபாகரன் வருவார்.
‪#‎Hbd_TamilTiger‬
#

கோமள விலாஸ் உணவகம்
தமிழ் முரசு பத்திரிகை
தமிழ்

சிங்கப்பூர்!

இந்தியா
நரேந்திர மோடி
ஹிந்தி

#

23 நவம்பர் 2015

நரேந்திர மோடிக்களால் நரேந்திரனாக முடியாது!



சிகோகோவில், அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே! என புகழ்மிக்க சொற்பொழிவை நிகழ்த்தி, இந்திய ஆன்மீகத்தை வெளியுலகிற்கு அடையாளப்படுத்திய விவேகானந்தரை, அங்கு அனுப்பி வைத்ததே பாசுகர சேதுபதி என்ற தமிழர் என்பதே நமக்கெல்லாம் பெருமை. தனக்கு வந்த அழைப்பை பெருந்தன்மையாக, என்னை விட விவேகானந்தர் சென்றால் பொருத்தமாக இருக்குமென எண்ணி அனைத்து பயண செலவுகளையும் செய்து வைத்தவர் பாசுகர சேதுபதி.

நேற்று, மலேசியாவில் விவேகானந்தரின் சிலையை திறந்து வைத்து, சகோதர சகோதரிகளே என உரையாற்றியதற்காக நரேந்திர மோடியை விவேகானந்தரோடு ஒப்பிட்டு புகழ்வதை ஏற்க முடியவில்லை. விவேகானந்தரின் இயற்பெயர் நரேந்திரன் என்பதால், மோடியின் பெயரோடு மட்டும் ஒப்பிடுவதோடு நிறுத்தி கொள்ளுங்கள். ஏனெனில், எத்தனை பிறப்பெடுத்தாலும் மோடி விவேகானந்தர் ஆக முடியாது.

அரசியலில் நேதாஜியையும், ஆன்மீகத்தில் விவேகானந்தரையும் பின்பற்ற சொன்ன பெருந்தமிழர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் கொள்கையை பின்பற்றும் உறவுகள் இந்த மாதிரியான, தவறான ஒப்பீடுகளையும் கண்டிக்க வேண்டும்.

- இரா.ச.இமலாதித்தன்

அமீர்கான்களும் - கமல்ஹாசன்களும்!

அமீர்கான்களுக்காக சிரியாக்களும், கமல்ஹாசன்களுக்காக இஸ்ரேல்களும் காத்துக்கொண்டுதான் இருக்கின்றன. சகிப்புத்தன்மை இல்லாத இந்த நாட்டில் இனிமேலும் இருந்து என்ன கிழிக்க போகிறீர்கள்? குரைக்கிற நாய்கள் பெரும்பாலும் இங்கே கடிப்பதேயில்லை என்ற பழமொழியை இன்னமும் பேசிக்கொண்டிருக்கும் பழமைவாதிகளின் நாட்டில், புதுமை படைக்கவே அவதரித்த நீங்கள் பிறந்ததே ஓர் அதிசயம் தான். உங்களது சாதனைகளுக்கு நன்றி!

சீக்கிரம் கிளம்புங்கள்.

20 நவம்பர் 2015

ஆவணத்தான்கோட்டை பிரபாகரனுக்கு ஜாமீன்!



ஈழ விசயத்தில் தமிழர்களுக்கு எதிராக செயல்பட்ட முன்னாள் வெளியுறவுத்துறை செயலாளர் எம்.கே.நாராயணனை செருப்பால் அடித்த புதுக்கோட்டை மாவட்டம் ஆவணத்தான் கோட்டையை சேர்ந்த, உறவின்முறை சகோதரர் திரு.பிரபாகரனுக்கு ஜாமீன் கிடைத்துள்ளதில் மட்டற்ற மகிழ்ச்சி! மேலும், இதற்கு பின்புலமாக இருந்த அனைத்து தமிழ் உணர்வாளர்களுக்கும் நன்றி.

சகோ.பிரபாகரன், பிறப்பாலும், சாதியாலும் அகமுடையாராக இருக்கலாம். ஆனால் அவர் இனத்தாலும், செயலாலும் சுத்த தமிழன் என்பதாலேயே, அவருக்கு பின்னால் அனைத்து தமிழ் அமைப்பினர்களும் துணை நின்றார்கள் என்ற இந்த ஒற்றை நிகழ்வே மறக்க முடியாத சமகால வரலாறு!
இனிவரும் காலங்களில் ஏற்றத்தாழ்வின்றி தமிழர்களாகவே பயணிப்போம்.

- இரா.ச.இமலாதித்தன்