கால்நூற்றாண்டு கால தமிழ்நாட்டு அரசியலின் கவனிக்கதக்க விசயங்களாக, தஞ்சாவூர் மற்றும் 'So Called' முக்குலத்தோர் என்ற இந்த இரண்டு மட்டுமே தோன்றுகிறது.
முதலில் தஞ்சாவூர்...
தமிழக அரசியலில் ஒருங்கிணைந்த தஞ்சாவூர் மாவட்டத்தை உள்ளடக்கிய டெல்டா பகுதியே மிக முக்கிய பங்காற்றி இருக்கிறது; பங்காற்றி கொண்டும் இருக்கிறது. திமுகவில் மு.கருணாநிதி, க.அன்பழகன், முரசொலிமாறன், கோ.சி.மணி, டி.ஆர்.பாலு எனவும்... அதிமுகவில் எம்.நடராஜன் குடும்ப உறுப்பினர்களெனவும் பலரது பங்களிப்பு உலகறிந்த விசயம். ஆளுங்கட்சி - எதிர்கட்சி என்ற எல்லா நிலைகளிலும் டெல்டாவை சார்ந்தவர்களின் பங்கு பெருமளவு இருந்து கொண்டே வந்திருக்கிறது.
அடுத்ததாக 'So Called' முக்குலத்தோர்...
தமிழகத்தில் பெரும்பான்மை சமூகங்களாக வன்னியர், கொங்கு வெள்ளாளர், பட்டியல் சாதியினர் இருந்த போதும் கூட கள்ளர் - மறவர் - அகமுடையார் உள்ளிட்ட 'So Called' முக்குலத்தோர் என்ற கூட்டமைப்பை சேர்ந்தவர்களே அரசியலில் அதிகளவுக்கு ஆளுமை செய்திருக்கிறார்கள். அது பரபரப்பான சூழலான இப்போதும் கூட தொடந்து கொண்டேதான் வருகிறது.
மூன்றாவதாக இடம் யாருக்கு?
அடுத்து தற்போதைய அரசியல் கட்சிகளின் வலிமை, அவர்களின் ஓட்டு சதவீதம், எத்தனையாவது இடம் என்ற நம்பர்களை பற்றியெல்லாம் ஒப்பிட்டு பார்த்தால், அதிமுக - திமுக - பாஜக என்ற நிலை வந்துவிட்டது. மேலும், தமிழகத்தின் மூன்றாவது கட்சியாக பாஜக தன்னை பிரகடனப்படுத்த தயாராகி விட்டதாகவே தோன்றுகிறது. சென்ற தேர்தலில் எதிர்கட்சியாக இருந்த தேமுதிக, தவறாம முடிவுகளால் வைகோவுடன் கூட்டணி வைத்து தங்களது சின்னத்தையே இழந்து தடுமாறி நிற்கிறது.
எதிர்கட்சியாக திமுக இல்லாத போது எதிர்கட்சி தலைவராக இருந்த விஜயகாந்த் செய்ய தவறிய அரசியலை, பாமக சரியாக செய்த போதும், தற்போதைய சூழலில் கடந்த கால சாதி முத்திரையை அன்புமணி ராமதாஸ் தலையெடுத்த பின்னால் ஓரளவுக்கு மறைய தொடங்கிருக்கிறது. அதன் நீட்சியாக 2021 தேர்தலில் பாமகவின் பங்கு முக்கியத்துவம் பெறக்கூடும். ஆனால் இப்போதைக்கு மத்தியில் ஆட்சியில் இருக்கின்ற பாஜக, தென்னிந்திய அரசியலில் முழுமையாக களமிறங்க காத்துக்கொண்டே இருந்தது. கர்நாடகாவை தொடர்ந்து, ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னால் தமிழகத்திலும் பாஜகவிற்கு நல்லதொரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
அரசியல் செண்டிமெண்ட்டில், 'So Called' முக்குலத்தோரும் - தஞ்சாவூரும்...
ஆட்சியமைக்கும் திராணியுள்ள திராவிட கட்சிகளில், திமுகவின் தலைமையானது ஒருங்கிணைந்த தஞ்சாவூர் காரர்களிடமே இருக்கிறது. அதுபோலவே, அதிமுகவின் தலைமையானது 'So Called' முக்குலத்தோர் + ஒருங்கிணைந்த தஞ்சாவூர் காரர்களிடமே இருக்கிறது. தேசிய கட்சிகளில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக கட்சி மாறி வந்த திருநாவுக்கரசருக்கு கொடுத்திருக்கின்றனர். காரணம் 'So Called' முக்குலத்தோர் கோட்டாவில் அவர் மறவர். இந்த கணக்கீட்டின் படி பார்த்தால், மூன்றாவது கட்சியாக பரிமாணம் பெற்றுள்ள பாஜக, இந்த வாய்ப்பை நழுவ விடாமல், பாஜகவின் தலைமையை 'So Called' முக்குலத்தோருக்கு வழங்கலாம். அதுவே சரியான காய் நகர்த்தலாக இருக்க முடியும்.
இப்படியானதொரு தகுதியுள்ளவராக 'So Called' முக்குலத்தோராகவும், ஒருங்கிணைந்த தஞ்சாவூர் காரராகவும் உள்ள திரு. கருப்பு முருகானந்தம் அவர்களுக்கு பாஜகவின் தலைமை பொறுப்பை கொடுக்கலாம். மத்திய இணையச்சர் பொன். ராதாகிருஷ்ணனுக்கு நெருக்கமானவராகவும், மாநில செயலாளர், மாநில பொது செயலாளர், மாநில துணைத்தலைவர் உள்ளிட்ட முக்கிய கட்சி பதவியில் இருந்த கருப்பு முருகானந்தம் அவர்களை, பாஜகவின் மாநில தலைவராக்கினால் தமிழக அரசியலில் பாஜக தவிர்க்க முடியாத சக்தியாக உருவெடுக்கும் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக