அகமுடையார்களான, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் - தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இயக்குனர் அட்லி உள்ளிட்ட இம்மூவேந்தர்களின் கூட்டணியில் உருவான 'தெறி' படம் பார்த்தேன். எனக்கு ரொம்பவே படம் பிடித்து போனது. ஒவ்வொரு முறையும் துப்பாக்கி போலவே எல்லா படங்களையும் விஜயால் தர முடியாது; அப்படி அவர் அது மாதிரியான படங்களை தொடர்ச்சியாக தந்தால், விஜய் ஒரே மாதிரியான படங்களிலேயே நடிக்கிறாரென இணையதள நக்கீரன்கள் குற்றம் சுமத்துவார்கள். பொதுவாக விஜய் படத்தின் டீசர் வந்தாலே, அதையே திரைவிமர்சனம் போல பல்வேறு மீம்ஸ் உருவாக்கி தரம் தாழ்ந்து விமர்சித்து சுகம் காணும் கூட்டம் அதிகமாகி வரும் இச்சூழலில், சேகுவேரா படம் பதித்த டீசர்ட்டை அணிந்து கொள்வது போலவே விஜயை கிண்டல் செய்வதும் கூட ஒரு ட்ரெண்ட் செட்டாகி விட்டது என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.
விஜய் - அஜித் என்ற ஒப்பீட்டுளவில், தெறியை வீரம் படத்தோடு ஒப்பிட்டால்,
என் பார்வையில் தெறி நூறு மடங்கு வீரத்தை விட சிறப்பாக தான் இருக்கிறது.
மிகப்பெரிய நட்சத்திர தகுதியுள்ள நடிகரின் படம் எப்படி இருக்க வேண்டுமோ,
அந்த திரை இலக்கணத்தின் படியே தெறி படமும் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
ரசிகர்களுக்கான இந்த படத்தில், காமெடி - செண்டிமெண்ட் - ஃபைட் - டான்ஸ் -
லவ் என அனைத்து மசாலாக்களையும் குறைவில்லாமல் தந்திருக்கிறார் அட்லி.
மேலும் வசனம் - ஒளிப்பதிவு - எடிட்டிங் - பின்னணி இசையென படத்திற்கு
முக்கியமான எல்லா துறையிலும் குறையே சொல்ல முடியாத அளவிற்கு ஒரு டீமை கை
வசம் வைத்துள்ள இயக்குனர் அட்லி பாரட்டுக்குரியவர்.
தெறியில் 'மருதமலை' வடிவேலுக்கான இடத்தை மொட்டை ராஜேந்திரன் திறம்பட நடித்து வைகைபுயலின் இடத்தை சமன் செய்திருக்கிறார். ஃபேமிலி ஆடியன்ஸ் கூட்டம் தியேட்டரில் அதிகமாக இருக்கும் போதே, இது ரசிகர்களுக்கான படம் மட்டுமல்ல என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது. அப்பா - மகள், கணவன் - மனைவி, அம்மா - மகன் என பல உறவுகளை விஜயே வெவ்வேறு பரிமாணங்களில் பளிச்சென வெளிப்படுத்தி, படம் நெடுகிலும் தெறிக்க விட்டிருக்கிறார். வழக்கமாக, ஃபைட் - காமெடி - பஞ்ச்களுக்கு மட்டுமே கைத்தட்டல் வருமென நினைத்திருந்தாலும், இவை அல்லாத பல சீன்களுக்கும் கண்ணீருடன் கூடிய கைத்தட்டல்களும் திரையரங்கத்தை திணறடித்தன.
இங்கே இணையத்தில் எவ்வளவு வன்மத்தோடு விமர்சனம் வைத்தாலும், ஒரு படத்தை வெற்றியடைய வைக்கும் வல்லமையுள்ள தாய்க்குலங்களும், குழந்தை பட்டாளங்களும், தெறியை மிகப்பெரிய வெற்றி பெற வைப்பார்களென நம்புகிறேன்!
குறிப்பாக, குறுகிய காலத்தில் ஐம்பதாவது படத்தை தொட்டுள்ள இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், இயக்குனர் அட்லி, தயாரிப்பாளர் கலைப்புலி தாணு உள்ளிட்ட தெறிக்கு பின்புலமாக இருந்த மூவரோடு, பக்கபலமாக இருந்து தெறிக்க விட்டிருக்கும் இளைய தளபதி விஜய்க்கும் வாழ்த்துகள்!
- இரா.ச. இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக