சேர்வை பட்டம் 8 சாதிகளுக்கு உண்டு; பிள்ளை பட்டம் 80 சாதிகளுக்கு மேல்
உண்டு; தேவர் பட்டம் 3 சாதிகளுக்கு உண்டு; முதலியார் பட்டம் 2 சாதிகளுக்கு
உண்டு; இந்த அத்தனை பட்டங்களும் அகமுடையாருக்கு உண்டு. இந்த அடிப்படை
வரலாற்று அறிவே துளியும் இல்லாமல், 'யாரெல்லாம் அகமுடையார்?' என
வரையறுக்கும் சிலருக்கு பதில் அளிக்காமலே விலகி விடலாமென தோன்றுகிறது.
ஆனால் பதில் நம்மிடம் இல்லையென அவர்கள் நினைத்து விட கூடாதென்பதாலும்,
அவர்களின் கருத்து தான் சரியென தவறாக புரிந்து கொண்டுவிட கூடாதென்பதாலும்
தான் சில இடங்களில் பதில் சொல்ல வேண்டியது அவசியமாகிறது.
முழுமையான வரலாறே தெரியாமல் அகமுடையார் யார் என சொல்ல யாருக்குமே அறுகதை
இல்லை. அரசியல் ஆதாயத்திற்காகவும், தங்களது சுய தேவைக்காகவும் சாதியை
வரையறை செய்யும் சிலரால் தான், ஒட்டுமொத்த வரலாறும் பாழாகிறது.
அகமுடையாருக்கு பட்டங்கள் பலவாகினும், சாதி ஒன்றுதான். அடியேன், தேவர்
பட்டமுள்ள அகமுடையார் சாதியை சேர்ந்தவன் என்பதையும், தேவர் என்று ஒரு
சாதியே இல்லை என்பதையும், சிலருக்கு தெளிவு படுத்த விரும்புகிறேன்.
- இரா.ச. இமலாதித்தன்
- இரா.ச. இமலாதித்தன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக