விஜயகாந்த் கிட்ட, அதிமுக என்ன மாதிரியான 'பேக்கரி டீலிங்' செய்ததென
தெரியவில்லை. இது இப்படியே போனால், நிச்சயமாக அடுத்த தேர்தலில் 'முரசு'
சின்னத்தின் நிலையும் 'பம்பரம்' போல ஆகிவிடும்.
விஜயகாந்த் மீதான விமர்சனத்தை அவர் இந்த முடிவால் தகர்த்தெறிந்திருக்கலாம். ஆனால் நட்டம் தேமுதிகவுக்கு தான் என்பதும், தனித்து களம் காண்பதென்பதால் நேரடியாகவே அதிமுகவுக்கு மட்டும் தான் மிகப்பெரிய லாபம் என்பதையும் விஜயகாந்தை இயக்கும் பிரேமலதா தேர்தல் முடிவுக்கு பின் புரிந்து கொள்வார்.
கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதை விட, இப்போதே நமஸ்காரம் செய்து கொள்ளலாம் சூரியனை! என்பதுதான் தேமுதிகவை சார்ந்த பல மாவட்ட செயலாளர்களின் ஏக்கமாக இருக்கிறது என்பதை பிரேமலதா புரிந்திருந்தால் இதுபோன்ற முடிவை விஜயகாந்த் அறிவித்திருக்க மாட்டார்.

நான்கில் இரண்டு திராவிட கட்சிகள் இந்த தேர்தலோடு ஓரம்கட்டப்படலாம் என்பது
மட்டும் தான் ஒரே ஆறுதல். மேலும், இதனால் மறைமுக லாபம் அடைய போகும் நாம்
தமிழர் கட்சிக்கும் வாழ்த்துகள்!
- இரா.ச. இமலாதித்தன்
- இரா.ச. இமலாதித்தன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக