திமுகவோ அதிமுகவோ தேமுதிகவோ, எந்த கட்சியாக இருந்தாலும் அகமுடையார் பெரும்பான்மையாக உள்ள தொகுதிகளில் அகமுடையார் வேட்பாளரையே நிறுத்திட வேண்டும். அப்படி பார்த்தால் குறைந்த பட்சம் 60 சட்டமன்ற உறுப்பினர்கள் அகமுடையார்களாக இருந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி இல்லையே. காரணம் என்ன? முக்குலமென சொல்லி அகமுடையார் மிகப்பெரும்பான்மையாக உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளெல்லாம் மற்றவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது.
டெல்டாவிலோ, வடக்கிலோ மறவருக்கு வாக்கு வங்கி இல்லை. வடக்கிலோ, கடைகோடி தெற்கிலோ கள்ளருக்கு வாக்கு வங்கி இல்லை. ஆனால், அகமுடையாருக்கு தெற்கு - வடக்கு - டெல்டா - கொங்கு என எல்லா பக்கமும் வேட்பாளரின் வெற்றியை நிர்ணயிக்க கூடிய வாக்கு வங்கி உண்டு.
முக்குலமென சொல்லி அகமுடையாருக்கென கிடைக்க வேண்டிய பதவிகளையும் விழுங்கி
ஆக்டோபஸ் போல அனைத்து பதவிகளையும் அனுபவித்து வருவதை இனியும் தட்டி
கேட்காமல் இருக்க முடியாது. அந்த சமூக ஏற்றத்தாழ்வுகளை களைய சொல்லி, ஆளும் -
ஆளப்போகின்ற அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தவே திருவண்ணாமலையில் அகமுடையார்
திருப்புமுனை மாநாடு.
அகமுடையாருக்கான மாநாடு என்பது யாருக்கும் எதிரானதல்ல. எனவே மறுக்கப்பட்ட சமநீதியை நிலை நாட்ட 27.12.2015 அன்று திருவண்ணாமலையில் அகமுடையார்களாய் அணிதிரண்டு ஆளப்போகின்ற அரசாங்கத்திற்கு அடையாளப்படுத்தி கொள்ளலாம், அகமுடையார் என்ற சாதி தமிழகமெங்கும் பெரும்பான்மையாக இருக்கின்றதென!
- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக