13 ஜூன் 2014

சீமானின் தமிழ்தேசியமும் சாதி ஒழிப்பும்!

திரு.சீமான் ஏன் ஈழத்து அகதி பெண்ணை திருமணம் செய்யப்போறேன்னு சொல்லிட்டு வசதியான வீட்டு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்? இது அவரது தனிப்பட்ட வாழ்க்கைன்னு சொல்லுவீங்க. சரி, திரு. சீமான் ஏன் ஜெயலலிதாவிற்கு ஜால்ரா அடிக்கின்றார்? தன் சாதி சார்ந்த தந்தி டிவிக்காக பகுதிநேர ஊழியர் போல செயல்படுகிறாரே, காரணம் என்ன? தனது சாதிக்காரரான ஆதித்தனார் உருவாக்கிய நாம்தமிழர் கட்சியின் பெயரை அப்படியே இவரும் எடுத்துகொண்டாரே ஏன்? தமிழில் சொல்லுக்கா பஞ்சம்? ஜெயலலிதாவை திரு.சீமான் எப்படி பார்க்கிறார்? தமிழராகவா? தமிழரல்லதவராகவா? இல்லை தன்னுடைய தலைவராகவா?

இந்த அதிமுக ஆட்சியில் திரு.சீமானின் எந்த வித தமிழர் சார்ந்த நடவடிக்கையும் சொல்லும்படியாகவே இல்லையே? ஏன்? இதையெல்லாம் கேட்கும் நான் தெலுங்கனோ கன்னடனோ மலையாளியோ அல்ல. இனத்தால் தமிழன் - சாதியால் தேவன் - பிரிவால் அகமுடையான். சாதி பிரிவை ஏன் சொன்னேன் என்றால், சட்டுன்னு வழக்கமா எல்லாரையும் சொல்ற மாதிரி என்னையும் தெலுங்கன்னு சொல்லுவீங்க. சீமானே சொல்லிருக்காரு, ஒருவனை தமிழன் என்பதை அறிந்து கொள்ள, முதலில் அவனுடைய சாதி பெயரை கேள் என்று! ஏனென்றால், சீமானும் சாதித்தமிழனே...

இதே சீமான், அரசியல் சார்ந்த அமைப்பு தொடங்கும் முன் உ.பி கிறிஸ்துவ தேவலாய பிரச்சனையின் போது, தமிழ்நாட்டிலுள்ள ஹிந்து பெண்களின் தாவணியை உருவ சொன்ன்னவர் தானே? அப்படிப்பட்ட சீமான் அடிப்படையில் மதவாதி, பிறகு சாதிய சார்பு வாதி. அதையெல்லாம் மறந்துவிட்டு சீமானை ஒட்டுமொத்த தமிழ்தேசியத்தின் அடையாளமாக பார்க்க முடியவில்லை. ஏனெனில் சீமான் வருங்கால முதல்வர் என்ற கனவோடு, வருங்காலபிரதமர் கனவில் இருந்த ஜெயலலிதாவோடு மறைமுக கூட்டணியில் இருக்கின்றார். தேர்தலில் பார்பனாரான ஜெயலலிதாவுக்கு களமாடுவதுதான் சீமானைன் தமிழ்தேசியத்தின் ஆரம்பநிலை கொள்கையென்றால், அதை கண்ட மொழிக்காரனும் விமர்சிக்கத்தான் செய்வான்.

முதலில், சீமான் தன்னுடைய (நாடார்)சாதி, (கிருஸ்துவ)மத அடையாள சார்புகளை விட்டு முழுமையாக வெளியாகட்டும். அதன்பிறகு கழுத்து நரம்பு தெறிக்க மேடையில் முழங்கட்டும். அண்ணன் பிரபாகரனோடு படம் எடுத்து கொண்டதை தவிர சீமான் சாதித்தது ஒன்றுமில்லை என்பதே எதார்த்தம். இந்த எதார்த்தத்தை புரியாமல் விசிலடிச்சான் குஞ்சுகள் போல இணையத்தில் உளறிக் கொட்டுபவர்கள் இனியாவது திருந்துவார்களென நம்புவோம்.

- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக