22 மார்ச் 2017

இரு செய்திகளுக்கு பின்னாலுள்ள அரசியல்!

இருகுலத்தோர் அரசியல்:

சின்னத்தை மட்டுமல்ல; கட்சிப்பெயரை கூட பயன்படுத்த முடியாத நிலை உருவாகி இருக்கிறது. தமிழக அரசியலில் அதிமுக என்ற கட்சி, கள்ளர் அணி; மறவர் அணியென இரண்டாக பிளவுபட்டிருக்கிறது. இதன் மூலம், இந்த போலியான முக்குலத்து சாதி அரசியலில், எப்போதுமே அகமுடையார் தனி என்ற நிலையும் மீண்டும் தெளிவாகியுள்ளது.

தமிழகத்தில் இத்தனை வருடங்களாக, கள்ளராலும் - மறவராலும் கட்டமைக்கப்பட்ட போலி சாதி கூட்டமைப்பான 'முக்குலத்தோர் அரசியல்' கொஞ்சம் கொஞ்சமாய் முடிவுக்கு வருகிறது. இத்தனை காலம், மக்கள்தொகைக்கேற்ற உரிய பிரதிநிதித்துவம் கிடைக்காமல் அரசியலில் புறக்கணிக்கப்பட்ட அகமுடையார் பேரினம், இனி மெல்ல மெல்ல தன் இருப்பை நிலை நிறுத்துமென நம்பிக்கையும் துளிர்விடுகிறது. மகிழ்ச்சி!

கூத்தாடி அரசியல்:

தமிழரல்லாத ரஜினி, சினிமாவில் சூப்பர் ஸ்டாராக கூட இருந்துவிட்டு போகட்டும். காலாவதியான அந்த பட்டத்தைப்பற்றியெல்லாம் கவலையேதுமில்லை. ஆனால், அரசியலில் அவர் செல்லாக்காசாகி பல வருடங்கள் ஆகிவிட்டது. இலங்கைக்கு போனால் என்ன? போகவிட்டால் என்ன? ராஜபக்சேவின் பினாமியான லைக்கா நிறுவன அதிபரின் படமான 2.0 வில் நடிப்பதற்காக வாங்கிய கோடி கணக்கான பணத்திற்கான விசுவாசம் அது. அப்படி சுயலாபத்திற்காகவும், தன் படத்தினை புலம்பெயர் தமிழர்களிடம் விளம்பரப்படுத்தவும் தான், ரஜினியின் இலங்கை பயணம் திட்டமிடப்பட்டது. அதை எதிர்க்க திருமாவளவன், வைகோ போன்றவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? இந்த எதிர்ப்பை வைத்து பாஜகவினர் சிலர் ரஜினியை தங்கள் பக்கம் இழுக்க மெனக்கெடுகின்றனர். ஆர்.கே.நகரில் ரஜினியே நின்றாலும் அவ்வளவு எளிதாக வெல்ல முடியாது என்பதுதான் களநிலவரம். அரசியலில் என்றைக்கோ அடையாளமற்று போன ரஜினிக்காக தொலைக்காட்சிகள் அரசியல் விவாதம் செய்வது ரொம்பவே அசிங்கமாக இருக்கிறது.

21 மார்ச் 2017

ராயல்டி விசயத்தில், ராகங்கள் மட்டுமல்ல; ராஜாவும் புதிது தான்!




எஸ்.பி.பி Vs இளையராஜா என்பது போன்ற இசை சார்ந்த இணையப்போர் ஒருசில நாட்களாகவே நடந்து கொண்டிருக்கிறது. இந்த கலவரங்களையெல்லாம் கவனிக்கையில், 1985ம் ஆண்டு வெளிவந்த ஒரு பாடல் தான் நினைவுக்கு வருகிறது. ’இதய கோவில்’ என்ற படத்தில், ”இதயம் ஒரு கோவில்; அதில் உதயம் ஒரு பாடல்” என்ற ஒரு பாடலை ’இசை ஞானி’ இளையராஜாவே எழுதி, இசையமைத்து அவரே பாடியும் இருப்பார். அந்த பாடலிலுள்ள சில வரிகள், தற்போதைய சூழலில் உண்மைக்கு அருகில் இருப்பதாக தோன்றுகிறது.

”ஆத்ம ராகம் ஒன்றில்தான் ஆடும் உயிர்கள் என்றுமே
உயிரின் ஜீவ நாடிதான் நாதம் தாளம் ஆனதே
உயிரில் கலந்து பாடும்போது எதுவும் பாடலே
பாடல்கள் ஒரு கோடி எதுவும் புதிதில்லை
ராகங்கள் கோடி கோடி எதுவும் புதிதில்லை”

இது அந்த பாடலிள்ள முதல் சரணத்தில் வருகின்ற வரிகள். இந்த நான்கு வரிகளிலேயே இசையின் எதார்த்தம் அப்படியே பட்டவர்த்தனமாக வெளிப்பட்டிருக்கிறது. கர்நாடக இசையின் மும்மூர்த்திகளான தியாகராஜர், சியாமா சாஸ்திரிகள், முத்துச்சாமி தீட்சிதர் என்ற இம்மூவரின் கீர்த்தனைகளையோ அல்லது இவர்களுக்கெல்லாம் முன்னோடியாக இருந்த தமிழிசை மும்மூர்த்திகளான, அருணாசலக் கவிராயர், முத்துத் தாண்டவர், மாரிமுத்தாப்பிள்ளை போன்றோரின் கீர்த்தனைகளையோ, பின்னாட்களில் தமிழிசை நால்வராக இணைக்கப்பட்ட பாபநாசம் சிவன் போன்றோரின் கீர்த்தனைகளையோ பயன்படுத்தாமல், இத்தனை பாடல்களை இளையராஜாவால் இசையமைத்திருக்க முடியுமா? என்பது அவருக்கே வெளிச்சம்.

”ராம நாமம் மீதிலே நாதத் தியாகராஜரும்
ஊனை உருக்கி உயிரில் விளக்கு ஏறினாரம்மா
அவர் பாடலின் ஜீவன் அதுவே அவரானார்
என் பாடலின் ஜீவன் எதுவோ அது நீயே
நீயும் நானும் ஒன்று தான் எங்கே பிரிவது”

இதுவும், அதே பாடலிலுள்ள இரண்டாவது சரணத்தின் வரிகள். இந்த பாடலில் கூட கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜரை, இளையராஜா சுட்டிக்காட்டிருப்பார். இப்படியான இசையின் எதார்த்தத்தை 80களிலேயே நன்றாக புரிந்து வைத்திருந்த இளையராஜா, இன்றைய இசையமைப்பாளர்கள் போல வெளிப்படையாகவே காப்பியடிக்காமல் கீர்த்தனைகளில் காப்பியடிப்பதெல்லாம் ராயல்டியில் வருமா? வரதா? என்பதை அவரது மனசாட்சி தான் பதில் சொல்ல வேண்டும். மேலும், கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், டி.கே.ராமமூர்த்தி போன்ற மூத்த இசையமைப்பாளர்களால் உருவாக்கப்பட்ட பாடல்களை காப்பியடித்த பாடல்களும் இளையராஜாவின் ஹிட்லிஸ்டில் இன்றளவும் இருக்கிறது என்பதை இளையராஜா உணராதவர் கிடையாது; அதை ஒருசில மேடைகளில் அவரே சொல்லியும் இருக்கிறார். அப்படிப்பட்ட இளையராஜா இப்போது சமீப காலமாக ராயல்டி விசயத்தில் மல்லுக்கட்டுவது தேவையில்லாத ஒன்றாகத்தான் தெரிகிறது. இந்த ராயல்டி விசயத்தில் இளையராஜாவை எதிர்த்தால், ”ரஹ்மான் மட்டும் யோக்கியரா? அவரை மட்டும் ஏன் யாரும் குறை சொல்லவில்லை? விளிம்பு நிலை சமூகத்தில் பிறந்த இளையராஜவை தான் இச்சமூகம் வஞ்சிக்கிறது!” என சிலர் வகுப்பெடுத்து கொண்டிருக்கின்றனர். இசைக்கு சாதியுமில்லை; மதமுமில்லை; அது மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் ஒரு கருவியாகவும், கலையாகவும் தான் ஆதிகாலம் தொட்டே விளங்கி வருகிறது.

இளையராஜாவின் பாடல்கள் தான் மக்களிசை; மண்ணின் இசை. அதனால் தான் பெரும்பாலான சாமானிய மக்களிடம் சென்று சேர்ந்திருக்கிறது. ரஹ்மானின் பாடல்கள் அப்படியல்ல; இன்றைய லெக்கின்ஸ், ஜூன்ஸ் போல, அது மேற்கத்திய இறக்குமதியின் கலவை. ஆனால் இளையராஜாவின் இசையோ வேட்டி, புடவை போல; இம்மக்களின் மனதோடு நெருக்கமானதாக இன்றளவும் அவர்களுக்குள் இணைந்திருக்கிறது. தொலைத்தொடர்பு வளர்ச்சியில் உச்சம் தொட்டுவிட்ட இக்காலத்தில், செல்போன் இல்லாதவர்களே அநேகமாக இருக்க முடியாதென்ற நிலையில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கிராமம், நகரம் என எவ்வித பாகுபாடுமின்றி செல்போன்களும், அதன் வழியாக இசையும் இங்கே முழுவதுமாக பரவிக்கிடக்கிறது. திரையிசை சம்பந்தமாக இங்கேவொரு கணக்கெடுப்பு நடத்தினால், இளையராஜாவின் பாடல்கள் சேமிக்கப்படாத செல்போன்களோ, மெமரி கார்டுகளோ இருக்கவே முடியாதென்ற எதார்த்தத்தை புரிந்து கொள்ள முடியும்.

சமூகத்திலுள்ள அனைத்து நிலை மக்களின் மனதோடும் நெருங்கிப்போன இசைக்கு யாரிடம் ராயல்டி கேட்க முடியும்? சமீபமாக பழைய பாடல்களை ரீமிக்ஸ் செய்யும் இசையமைப்பாளர்களே, உரியவரிடம் அனுமதி வாங்குவதில்லை. இன்னும் சில ரீமிக்ஸ் பாடல்களுக்கு நீதிமன்றம் அளவுக்கு பிரச்சனை வந்தபோதும் கூட, அதையெல்லாம் வெகு எளிதாக தயாரிப்பாளர்களே சரி செய்து விடுகின்றனர். ”பொதுவாக இசையமைப்பாளர்கள் அனைவருமே, யாரோவொரு தயாரிப்பாளரிடம் பணம் வாங்கிக்கொண்டு தானே, குறிப்பிட்ட படத்திற்கு இசையமைத்து கொடுக்கிறார்கள்; அப்படியென்றால் அந்த இசைக்கான ராயல்டி, அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு தானே சென்றடைய வேண்டும். இடையில் ஏன் இசையமைப்பாளர்கள் உரிமை கோருகிறார்கள்?” என கேட்கும் சாமானியனின் கேள்விகளுக்கு அவ்வளவு எளிதாக யாரும் பதில் சொல்லிவிட முடியாது.

சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பாக, தன் அண்ணன் பாவலரோடு பொதுவுடைமை கொள்கைகளை தெருமுனை பிரச்சார பாடல்களாக உருவாக்கியும், அதை வெகுஜன மக்களிடம் கொண்டு சேர்த்தும் தானே, பின்னாட்களில் இளையராஜாவாக உருவெடுத்தார். அந்த தெருமுனை பரப்புரை பாடல்களின், மூலஇசை யாருடையது? அன்றைக்கு பிரபலமான கே.வி.எம்., எம்.எஸ்.வி., போன்ற இசையமைப்பாளர்களால் உருவாக்கப்பட்ட திரையிசைப்பாடல்களின் வரிகளை மாற்றியமைத்து தானே, தன் இசையாளுமையை அதே மெட்டுகளோடு மக்களிடம் கொண்டு சேர்த்தனர். அன்றைக்கு தங்களது பொருளாதாரச்சூழலுக்கு கைக்கொடுத்த கே.வி.எம்., எம்.எஸ்.வி. போன்றோரின் இசைக்கு, அவர்கள் என்றாவது பாவலர் & கோ விடம் ராயல்டி கேட்டிருந்தால் நிலைமை என்னவாகிருக்கும் என்பதையும் இசைஞானி இளையராஜா சிந்தித்திருக்கலாம் என்பதே பலரது மனநெருடல்களாக இருக்கிறது.”இதற்கு மேலுமா அவர் சம்பாரிக்க வேண்டும்? அவரிடம் காசே இல்லையா? அவருக்கு ஏன் இந்த விபரீத ஆசை? அவரால் நாலுபேர் வாழ்ந்துட்டு போகட்டுமே” என்றெல்லாம் கேட்கும் எளியவர்களுக்கு, ராயல்டி பற்றிய உள்ளார்ந்த விசயங்கள் விளங்காமல் இருக்கலாம். ஆனால் இந்த ராயல்டி பிரச்சனையால், இளையராஜா பேசுபொருளாகி இருக்கிறார். பலரது ஏசுபொருளாகவும் மாறியிருக்கிறார். புகழின் உச்சத்தை என்றைக்கோ தொட்டுவிட்டு, இரண்டு தலைமுறைகளுக்கும் மேலாக உச்சாணிக்கொம்பில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் இசைஞானி இளையராஜா, இந்த ராயல்டி விசயத்திலும் இன்னும் கொஞ்சம் பெருந்தன்மையாக இருந்திருக்கலாமோ என தோன்றுகிறது.

நகரமயமாக்கப்பட்ட போதும் கூட, அங்கே வசிக்கும் பெரும்பான்மையினரின் பூர்வீகம் ஏதோவொரு கிராமமாகத்தான் இருக்கிறது. அப்படிப்பட்ட கிராமங்களில் நடைபெறும் ஒவ்வொரு வருட திருவிழாவிலும் அரிச்சந்திர நாடகமோ, வள்ளித்திருமண நாடகமோ கூட இப்போது அரங்கேற்றுவது குறைந்து கொண்டிருக்கிறது. ஆனால், ஆடலும் பாடலும், ஆர்க்கெஸ்ட்ரா என இசை நிகழ்ச்சி இல்லாமல் எந்தவொரு கிராமத்தின் திருவிழாக்களும் முழுமையடைவதில்லை. சாமானிய இசை ரசிகர்களாக, எவ்வித பொருளாதார பின்னணியும் இல்லாமல் எத்தனையோ ஆர்கெஸ்ட்ரா குழுக்களிலுள்ள எளியவர்கள் அன்றைய இளையராஜாவின் பாடல்களால் தான் இன்றைக்கும் தங்களது பிழைப்பை நடத்தி கொண்டிருக்கிறார்கள். இது தான் எதார்த்தம். அவர்களுக்கெல்லாம் இளையராஜா என்பவர் இசைஞானி மட்டுமல்ல, ”ஓர் தேவ தூதன்”, ”பிழைப்பை கொடுக்கும் கடவுள்”; அப்படியாகத்தான் நினைத்திருக்கிறார்கள். இப்படி எத்தனையோ பேர், இளையராஜா என்ற ஒற்றை மனிதரால் நாள்தோறும், திருமண விழா, ஊர்த்திருவிழா, சிறப்பு நிகழ்ச்சிகள் என பல வடிவங்களில் பலன்பெற்று வருகிறார்கள். அவர்களுக்காகவது இசைஞானி, கெடுபிடிகளை தளர்த்தி இன்னும் கொஞ்சம் விட்டுக்கொடுக்கலாம். இதன் மூலம் பணம் வேண்டுமென்றால் கிடைக்காமல் போகலாம்; ஆனால் முகம் தெரியாத எத்தனையோ பேரின் அழ்மனதிலிருந்து வெளியெழும் அன்பு கிடைக்குமே?! அதற்கு நிகராக வேறேதும் உண்டா இவ்வுலகில்? இந்த ராயல்டி விசயத்தில் இசைஞானியின் இசைவுக்காக தான் காத்திருக்கிறது, ஒட்டுமொத்த இசைப்பிரியர்களின் மனங்களும்!

- இரா.ச.இமலாதித்தன்

18 மார்ச் 2017

அரசியலில் ஆன்மிகமும் - அரசாங்கத்தில் ஊழலும்!


# அரசுத்துறை தேர்வுகளில் உள்ள ஊழல்:

டி.என்.பி.எஸ்.சி என்ற தமிழ்நாடு பொதுத்தேர்வு ஆணைய தேர்வுக்குழுவை நிர்ணயம் செய்ததில் சட்டவிதிமீறல் இருப்பதாக கூறி, அந்த குழுவே ஓரிரு மாதங்களுக்கு முன்பாக கலைக்கப்பட்டது. ஆனால், மத்திய தேர்வுக்குழுவில் உள்ள ஊழலை யார் களையெடுப்பது? ஆர்.ஆர்.பி. என்ற ரயில்வே துறை தேர்விலும், தென்னக ரயில்வே வேலைவாய்ப்பிலும் வடக்கத்தியர்கள் தான் தொடர்ச்சியாக வெற்றிப்பெற்றதாக அறிவிப்பு வருகிறது. அதுபோலவே மத்திய தபால்துறை தேர்விலும் தமிழை மொழிப்பாடமாக எடுத்து தேர்வெழுதியதிலும் கூட வடக்கத்தியர்கள் தான் அதிகளவில் தேர்ச்சிப்பெற்றிருப்பதாக சமீபத்தில் ரிசல்ட் வெளியிடப்பட்டிருக்கிறது. இதையெல்லாம் யார் கேட்பது? இந்த சதியின் பின்னணியிலுள்ள ஊழலை யார் வெளிக்கொண்டு வருவது? சமுதாய பிரச்சனையை வெட்டவெளிச்சம் போட்டு தட்டிக்கேட்க வேண்டிய ஊடகங்களெல்லாம் ஊமையாகி போய்விட, ஆட்சி அதிகாரமோ ஊனமாகி போய்விட்டது. :(  ஏமாளிகள் தமிழர்கள் தான்!


 # உத்ரபிரதேச முதல்வர் தொகுதியின் பின்புலம்:


உ.பி.முதல்வர் யோகி ஆதித்யாநாத்திற்கும், நாகப்பட்டினத்திற்கும் ஏதோவொரு வகையில் தொடர்பிருக்கிறது. அவர் தொடர்ச்சியாக ஐந்து முறை கோரக்பூரில் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இந்த கோரக்பூரில் தான் பதினெண் சித்தர்களில் ஒருவரான கோரக்கரின் ஜீவசமாதியும் இருப்பதாக நம்பப்படுகிறது. கோரக்கரின் ஜீவசமாதியுள்ள அந்த மடத்தை தான், யோகி ஆதித்யாநாத் நிர்வகிக்கிறார். காகபுஜண்டரின் சீடரான கோரக்கர், கார்த்திகை மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர். சித்தர்களின் ஜீவசமாதி பல இடங்களில் உண்டு. அதுபோலவே, ஒரே சித்தர் பல இடங்களில் ஜீவசமாதி ஆகியிருப்பதும் உண்டு. அப்படியாக, சித்த மருத்துவ ரகசியத்தை மறைபொருள் ஏதுமின்றி மிகவும் எளிமையாக தன் நூல்களில் வெளிக்கொண்டு வந்த கோரக்க சித்தரின் ஜீவசமாதி நாகையிலிருந்து ஆறு மைல் தொலைவிலுள்ள வடக்கு பொய்கை நல்லூரில் இருக்கிறது. இவர் எழுதிய பல நூல்களில் சந்திர ரேகை என்ற நூல் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்று.

கோரக்க சித்தர் ஜீவசமாதிகள்:

1. பொதிய மலை
2. ஆனை மலை
3. கோரக் நாத்திடல் (மானாமதுரை)
4. வடக்கு பொய்கை நல்லூர் (நாகை)
5. பரூரப்பட்டி (தென் ஆற்காடு)
6. கோரக்கர் குண்டா (சதுரகிரி)
7. பத்மாசுரன் மலை (கர்நாடகம்)
8. கோரக்பூர் (உ.பி)

மதம் எனும் வெறி!


பகுத்தறிவு என்ற கொள்கைக்காக கடவுளே இல்லையென்று யார் பேசினாலும் எதிர்ப்பு மட்டுமே வரும். ஆனால் ஓர் இசுலாமியன் அதே கடவுள் மறுப்பை பேசினால் கொலையே விழும். இதுதான் அமைதி மார்க்கமா? இசுலாமியர்கள் அல்லாதவர்கள் வணங்கும் அனைத்து கடவுளையும் எப்படி வேண்டுமானாலும் அனைவரும் விமர்சிக்கலாம்; அந்த கடவுளெல்லாம் இல்லவே இல்லையென வாய்கிழியவும் பேசலாம்; ஆனால் இதுபோல் பலரது நம்பிக்கைக்கு எதிராக பேசினாலும் கூட பெரும்பான்மையாக உள்ளவர்கள், வாய் உள்பட அனைத்தையும் மூடிக்கொண்டு வேடிக்கை மட்டும் பார்க்க வேண்டும். அதையே ஓர் இசுலாமியன், கடவுள் மறுப்பு கொள்கையை பொதுவெளியில் பேசினால், அவர் சார்ந்த மதவெறியர்களாலேயே வெட்டிக் கொல்லப்படுவார். அதை எதிர்த்து எந்த மாட்டுக்கறி கும்பலோ, தாலியறுக்கும் கழகமோ, பிரியாணி பிரியர்களோ வாய் திறக்க மாட்டார்கள். காரணம், சிறுபான்மை அரசியல்; போலி நடுநிலைவாத அரசியல். த்தூ... இசுலாமிய மதவெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட தோழர் பாரூக் அவர்களின் ஆன்மா இளைப்பாறட்டும். பாரூக்கை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு அவர் சார்ந்த அமைப்பு உறுதுணையாக இருக்கட்டும்.

16 மார்ச் 2017

உளவியல் கொலைக்கு உள்ளான தமிழன்!

சேலத்திலுள்ள அரிசிபாளையத்தை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் என்ற (ஜெ.என்.யூ) தமிழ் மாணவர், டெல்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாகத்திலேயே தூக்கிட்டு சாகடிக்கப்பட்டிருக்கிறார். மூன்று முறை முயற்சித்து, நுழைவுத்தேர்வு மூலமாக ஆய்வு மாணவனாக சென்றவரின் உடலே இன்று உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது என்பது எத்தனை கொடுமையான விசயம். எளிய குடும்பத்தில் பிறந்த போதும் இத்தனை துன்பங்களையெல்லாம் கடந்து டெல்லி சென்றது, இளம் வயதிலேயே இறப்பதற்காகவா?யென அவரை சார்ந்தோரும், அவரை போன்றோரும் கொதித்தெழுவது இயல்பு தான்.
இன்னும் சொல்லப்போனால் பட்டியல் சாதியை சேர்ந்தவரென்பதால் தானே, முத்துக்கிருஷ்ணன் கொல்லப்பட்டிருக்கிறார்; அதற்கான எதிர்வினையாகத்தான் சாலமனின் செருப்பும் இருந்திருக்கிறது. பொன்.ராதாகிருஷ்ணன் மீது செருப்பு வீசப்பட்ட இச்செயலை கண்டிக்கும் யாருமே, இறந்த முத்துக்கிருஷ்ணனின் உயிரை பற்றி கவலை கொள்ளவே இல்லை. இணையதள ஆதரவாளர்களான இவர்களெல்லாம் தாங்கள் தான் ஹிந்தியாவையே ஆட்சி செய்வது போல, என்னென்னமோ சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். மனசாட்சிப்படி பார்த்தால், மேல் வகுப்பென அறியப்படும் அந்த சிறுபான்மை சாதியவாதிகளின் உளவியல் தாக்குதலால் கொல்லப்பட்ட முத்துக்கிருஷ்ணனின் உயிரை விட, சாலமனால் வீசப்பட்ட ஒற்றை செருப்பு ஒரு விசயமே அல்ல.

14 மார்ச் 2017

இனக்குழுவின் மூத்தோருக்கு வீர வணக்கம்!


மார்ச் - 13: மாமன்னர் மருதுபாண்டியர் மக்கள் இயக்கத்தின் நிறுவனர் மேதகு இராச.பாஸ்கர் ஐயாவின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல்.


மார்ச் - 14: தனித்தமிழர் சேனையின் நிறுவனர் மேதகு க.நகைமுகன் ஐயாவின் முதலாமாண்டு நினைவேந்தல்.




மார்ச் - 15: லெனின் கம்யூனிஸ்ட் நிறுவனர் மேதகு கூத்தக்குடி ச.சண்முகம் ஐயாவின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல்.



அகமுடையார் பேரினத்தின் போற்றுதலுக்குரிய அடையாளமாய் திகழ்ந்த தமிழுணர்வுமிக்க இம்மூன்று மாபெரும் தலைவர்களையும் ஒரே மாதத்தில் இழந்தோம் என்பது சோக வரலாறாகி போனாலும் கூட, தமிழ் இனக்குழுக்களின் ஒற்றுமைக்காக சமுதாய பணியாற்றிய இம்மூத்தோரின் வழித்தடத்திலேயே நாங்களும் பயணிக்கிறோம்.


வீர வணக்கம்!

கமலின் அரசியல்!


தமிழ்நாட்டில் அரசியல் செய்ய ஜெயலலிதாவிடம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு விசயம் இருக்கிறது. அது, தனக்கு இணையான எதிரிகளை மட்டும் தேர்ந்தெடுத்துக்கொண்டு அவர்களை மட்டுமே எதிர்த்து அரசியல் செய்வது; மற்ற யாரும், ஜெயலலிதாவை நேரடியாக தாக்கி பேசியோ, அறிக்கை விட்டோ விமர்சனம் செய்தால் கூட அவர்களுக்கெல்லாம் பதில் சொல்லாமல் கடந்து விடுவது; வேண்டுமென்றால், தன் கட்சியிலுள்ள இரண்டாம் கட்ட தலைவர்களை வைத்து, பதிலடி கொடுப்பது; அந்த முறையில், கடைசி வரை ஜெயலலிதா எதிர்த்தது கருணாநிதியை மட்டும் தான்.

இதையெல்லாம் கவனிக்க தெரியாமல், ஜெயலலிதாவிற்கு மாற்றாக முதலமைச்சர் பதவியை வகிக்கும் எடப்பாடி பழனிச்சாமியோ, கமல்ஹாசனுக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருக்கின்றார். நடப்பதை பார்க்கும் போது, சிவாஜி படத்தில் வரும் "சும்மா இருந்தவனை சூப்பர் ஸ்டார் ஆக்கி விட்டுட்டோம்" என்ற வசனம் தான் நினைவுக்கு வருகிறது. என் கணிப்பு சரியாக இருக்குமெனில், ஒருவேளை கமல்ஹாசன் நேரடி அரசியலுக்கு வந்தால், பல பேரின் அரசியல் கனவு சுக்குநூறாகும் அளவுக்கு, தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக கமல் இருப்பார்.

அன்று, ஜெயலலிதாவிற்காக தான் பேசாமல் இருந்தாராயென தெரியவில்லை; ஆனால், இன்று பேசுவதற்கு காரணம், கெளதமி தான்; வாழ்த்துகள்!