
தமிழ்நாட்டில் அரசியல் செய்ய ஜெயலலிதாவிடம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு விசயம் இருக்கிறது. அது, தனக்கு இணையான எதிரிகளை மட்டும் தேர்ந்தெடுத்துக்கொண்டு அவர்களை மட்டுமே எதிர்த்து அரசியல் செய்வது; மற்ற யாரும், ஜெயலலிதாவை நேரடியாக தாக்கி பேசியோ, அறிக்கை விட்டோ விமர்சனம் செய்தால் கூட அவர்களுக்கெல்லாம் பதில் சொல்லாமல் கடந்து விடுவது; வேண்டுமென்றால், தன் கட்சியிலுள்ள இரண்டாம் கட்ட தலைவர்களை வைத்து, பதிலடி கொடுப்பது; அந்த முறையில், கடைசி வரை ஜெயலலிதா எதிர்த்தது கருணாநிதியை மட்டும் தான்.
இதையெல்லாம் கவனிக்க தெரியாமல், ஜெயலலிதாவிற்கு மாற்றாக முதலமைச்சர் பதவியை வகிக்கும் எடப்பாடி பழனிச்சாமியோ, கமல்ஹாசனுக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டிருக்கின்றார். நடப்பதை பார்க்கும் போது, சிவாஜி படத்தில் வரும் "சும்மா இருந்தவனை சூப்பர் ஸ்டார் ஆக்கி விட்டுட்டோம்" என்ற வசனம் தான் நினைவுக்கு வருகிறது. என் கணிப்பு சரியாக இருக்குமெனில், ஒருவேளை கமல்ஹாசன் நேரடி அரசியலுக்கு வந்தால், பல பேரின் அரசியல் கனவு சுக்குநூறாகும் அளவுக்கு, தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தியாக கமல் இருப்பார்.
அன்று, ஜெயலலிதாவிற்காக தான் பேசாமல் இருந்தாராயென தெரியவில்லை; ஆனால், இன்று பேசுவதற்கு காரணம், கெளதமி தான்; வாழ்த்துகள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக