14 நவம்பர் 2014

பதவியேற்பு வாழ்த்துகள்!

தமிழக பா.ஜ.க.வின் மாநில துணைத்தலைவராக பொறுப்பேற்கும் திரு. கருப்பு முருகானந்தம் அவர்களின் பணி சிறக்க எம்பெருமான் திருமுருகன் அருள் புரியட்டும்! டெல்டாவிலிருந்து தேசியக்கட்சியின் மாநிலத்துணை தலைவரென்ற பெரிய பதவியை அலங்கரிக்கும் உங்களுக்கு உறவுக்காரனாக என் மனம் நிறைந்த வாழ்த்துகள்!

- இரா.ச.இமலாதித்தன்

நேரு மாமாவும் மவுண்ட் பேட்டனும்!

ஆங்கில ஆட்சியின் போது ஆங்கிலேயர்களுக்கும், காங்கிரஸ் அரசுக்கும் பெரும் தலைவலியாக இருந்தவர்கள் நேதாஜியும் தேவரும். அதன் பிறகு, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக நேரு பொறுப்பேற்றவுடன், அவரை ’ஆசிய ஜோதி’ என்று புகழ்ந்து உலகில் மாமனிதர்கள் பலரும் நேருவை சந்திக்க விரும்பினர். ஆனால் நேருவோ "நான் ஃபார்வர்டு பிளாக் தலைவர் முத்துராமலிங்கத் தேவரை சந்தித்து, அவருடன் கை குலுக்க விரும்புகிறேன்" என்றார்.

ஆனால் பசும்பொன் தேவரோ, "என் தலைவர் நேதாஜியைக் காட்டிக் கொடுத்தக் கையோடு நான் குலுக்க மாட்டேன்” என்று கூறி நேருவின் கையைத் தட்டி விட்டு சென்றார். என்பது கடந்தகால அரசியல் வரலாறு!

”இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி!” என அண்ணன் வே. பிரபாகரன் சொல்லியது போல, வரலாறு தான் நமக்கு வழிகாட்டியே. அப்படிப்பட்ட துரோக வரலாறுகளுக்கு சொந்தக்காரர் நம்ம நேரு மாமா.


மேலும், மவுண்ட்பேட்டன் மனைவியின் மனம் கவர்ந்த நம்ம நேரு மாமா தின வாழ்த்துகள்!

- இரா.ச.இமலாதித்தன்

நேருவும் - தேவரும்!


1955 ஆம் ஆண்டு வாக்கில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் பொது செயலாளராக இருந்த சீலபத்ரயாஜி என்பவரை, நேரு தேவரிடம் தூது அனுப்பினார். பார்வர்ட் பிளாக் கட்சியை காங்கிரசோடு இணைத்து விட வேண்டும் என்றும் அதற்கு கைமாறாக தேவர் விரும்பும் எந்த பதவியையும் மத்தியிலோ - மாநிலத்திலோ வகிக்கலாம் என்றும், சீலபத்ரயாஜி தேவரை அவரது பசும்பொன் கிராமத்தில் வந்து சந்தித்து கூறினார் .

சீலபத்ரயாஜி கூறிய கருத்துக்கு தேவர் இணங்கவில்லை. மாறாக சீலபத்ரயாஜியை இம்மாதிரியான வேலைகளில் ஈடுபட வேண்டாம் என்று கண்டித்தார். உடனே சீலபத்ரயாஜி டில்லிக்கு சென்று நேருவிடம் தேவர் ஒத்துக்கொள்ளவில்லை என்ற விவரத்தை கூறினார்.அன்று அகில இந்திய பார்வர்ட் பிளாக் தலைவராக இருந்த கேப்டன் மோகன்சிங் என்பவரை நேரு அழைத்து பேசி, அகில இந்திய பார்வர்ட் பிளாக் காங்கிரசுடன் இணைந்தது என்று அறிக்கை விடச் செய்தார்.

கேப்டன் மோகன் சிங் அறிக்கைக்கு உடனே மறுப்பு அறிக்கை தேவர் கொடுத்தார். அதில், பார்வர்ட் பிளாக் கட்சி காங்கிரசில் இணையவில்லை என்றும், எப்போதும் போல் பார்வர்ட் பிளாக் தனித்து இயங்குகிறது என்றும், கேப்டன் மோகன்சிங் அவரோடு சேர்ந்த சில விரல்விட்டு எண்ணக்கூடிய நபர்கள்தான் காங்கிரசில் சேர்ந்தார்களே தவிர, பார்வர்ட் பிளாக் கட்சியானது காங்கிரசோடு இணையவில்லை என்பதை தெளிவாக விளக்கி இருந்தார்.

டில்லிக்கு சென்று மத்தியக் கமிட்டியைக் கூட்டி, அன்றைக்கு அகில இந்திய துணைத் தலைவராக இருந்த ஹேமந்தகுமார் பாசுவே தலைவராக இருக்க வேண்டும் என வற்புறுத்தி, தான் துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால் போதும் என்று கூறி, துணைத்தலைவர் ஆனார் தேவர். தேவரின் விருப்பத்திற்கு இணங்க ஹேமந்தகுமார்பாசு தலைவர் ஆனார்.

காங்கிரசோடு பார்வர்ட் பிளாக் கட்சியை இணைத்து விடவேண்டுமென்று நேரு செய்த முயற்சியை முறியடித்து, அன்று பார்வர்ட் பிளாக் கட்சியின் தனித்தன்மையை காப்பாற்றி, நேதாஜியால் உருவாக்கப்பட்ட இயக்கத்தை அழியவிடாமல் பாதுகாத்தார் தேவர்.

- இரா.ச.இமலாதித்தன்

(இன்னைக்கு தான் அந்த மாமாவோட பிறந்தநாள்!)

13 நவம்பர் 2014

சுய பெருமைக்கு பின்னாலுள்ள கோபம்!

தொலைக்காட்சி பிரபலம் ஒருவரின் கவிதை புத்தகத்தை படித்த போது தான் தெரிஞ்சது, அவரை விட என் எழுத்துகள் பன்மடங்கு மேம்பட்டதென்று. நானும் 2009 லிருந்து கவிதைங்கிற பேருலயும், கட்டுரைங்கிற பேருலயும் கண்டதையும் கிறுக்கி வச்சிருக்கேன். புகழ் போதைக்கு இங்கே பலரும் அடிமை என்றாலும் புகழுக்காக இல்லாவிட்டாலும், குறைந்த பட்சம் ஓர் அங்கீகாரத்திற்காகவாது என்னுடைய நூறுக்கும் மேற்பட்ட கிறுக்கல்களை தொகுத்து ஒரு கவிதை நூலை வெளியிட வேண்டுமென்பது நெடுநாளைய ஆசை. அதற்கான வாய்ப்பு தான் இதுவரையிலும் உருவாகவில்லை. அடுத்து பாரபட்சமில்லாத ஒரு நேர்மையான வரலாற்று நாவல் எழுத வேண்டுமென்பதும் இன்றைய நாள் வரை வெறும் கனவாகவே இருந்து வருகின்றது. இறைருள் இனியாவது கிடைக்குமென நம்பிக்கையோடும், ஆறுமுகனின் அருளோடும் ஆறாவது ஆண்டில் நுழைகின்றேன். வாண்ட்டடா வண்டியில ஏறுற என்னைய நம்புங்கய்யா, சத்தியமா நானும் கவிஞன் தான், எழுத்தாளன் தான்!


இன்னைக்கு ஆண்ட்ராய்ட் மொபைல் வந்ததும் நெட் கார்டு ரீசார்ஜ் செய்து கொண்டு வீரவசனம் பேசும் பலருக்கும், ஆறெழு வருடங்களுக்கு முன்பு நடந்த பல ப்ளாஸ்பேக் தெரிய வாய்ப்பில்லை. அன்றைக்கு ஆக்டிவா இருந்த பல பேரு இன்னைக்கு பொண்டாட்டி பிள்ளைன்னு தடம் மாறி விட்டார்கள். இன்னும் சில வருடங்கள் கழித்து இதே நிலைதான், இன்றைக்குள்ள வீரவசனங்களுக்கும் உருவாகும். அது தெரியாமல் ஒட்டு மொத்த இனத்தையே தன் கைகளுக்குள் கொண்டு வந்து விட்டதாய் பிரம்மை பிடித்து நிற்பதை பார்க்கையில் பரிதாபமாகத்தான் இருக்கின்றது. நிலையில்லா இவ்வுலகில் நிலைத்து நிற்பார் யாருமில்லை!

இன்னைக்கு தேவர் தளம் என்ற இணையதளம் இருக்கிறதென்றால் அதில் என்பங்கும் கணிசமாக உண்டு. www.thevarthalam.blogspot.com என்ற வலைப்பதிவிலுள்ள பதிவுகளைத்தான் thevarthalam@mail.com என்ற மெயில் ஐடி உருவாக்கி பிறகு காப்பியெடுத்து அதை பின்னாட்களில் www.thevarthalam.com க்கு அப்லோட் செய்தோம். பண உதவி ஒரு பைசா கூட என்னுடையது இல்லையென்றாலும் லோகோ, இணையதள பெயர், டெம்ப்ளேட் டிசைன், பேஜ்/டேப் தலைப்புகளென அனைத்திலும் அடியேனுக்கும் பங்குண்டு என்பதை சொல்வது காலத்தின் தேவையாகிறது.

#‎
சுய_பெருமை‬
!ன்னு கூட வச்சிக்கலாம்.

கட்டற்ற கலைக்களஞ்சியமான தமிழ் விக்கிப்பீடியாவில் முக்குலத்தோரான கள்ளருக்கும், மறவருக்கும் தனித்தனி பக்கங்கள் இருந்தாலும், அகமுடையாருக்கு என்ற தனிப்பக்கம் ஏதுமில்லாமல் இருந்த போது, 25 டிசம்பர் 2010ம் ஆண்டு அந்த குறையை போக்கி, அகமுடையாருக்கென தனி பக்கத்தை அடியேன் தான் உருவாக்கினேன்.

இதை ‪#‎சுய_பெருமை‬!ன்னு கூட வச்சிக்கலாம்.

http://ta.wikipedia.org/w/index.php…



நாளைக்கே ஒரு லெட்டர் பேடு கட்சி உருவாக்கி மாநில தலைவராக கூட வரலாம். குறைந்த பட்சம் ஆளில்லா டீக்கடை போன்றதொரு அமைப்பில் வட்ட செயலாளராக கூட வரலாம். ஆனால், ஒருநாளும் வார்டு கவுன்சிலர் கூட ஆக முடியாது. அது தான் டிசைன்.

 - இரா.ச.இமலாதித்தன்

12 நவம்பர் 2014

இந்த வார தமிழக அரசியல்!

-001-

அரசியலில் நுழைவதை வெளிக்காட்டி கொள்ளாத கமலஹாசனுக்கு க்ளீன் இந்தியாவில் பொறுப்பும், தன் படம் வரும்போதெல்லாம் அரசியலில் நுழைவதை பற்றி ஊடகங்களை பேசவைக்கும் ரஜினிகாந்துக்கு திரையுலக பிரமுகர் விருதும் கொடுக்கும், ஆளும் பா.ஜ.க. சர்க்காரின் நகர்வை பார்க்கும் போது தமிழ்நாடு தான் அடுத்த இலக்கு போல. தமிழகத்திலும் தாமரை மலரட்டும்!

-002-

கேரளாவை தொடர்ந்து கர்நாடகாவும் புதுப்புது தடுப்பணைகளை கட்ட போகிறார்களாம். அன்று, சோழநாட்டின் விவசாயம் பாதிக்கப்படுவதை எண்ணி கர்நாடகத்தில் போர் தொடுத்து, அங்குள்ள அணையை தரைமட்டமாக்கி விட்டு திருச்சியிலே கல்லணையை கட்டியெழுப்பிய முற்கால சோழமன்னன் இளஞ்செட்சென்னியின் மகனான கரிகாலசோழ பெருவளத்தான் போலொருவன் மீண்டுமிங்கே பிறப்பெடுத்தால் ஒழிய, விவசாயிகளுக்கு அதிசயம் ஒன்றும் நடந்துவிட போவதில்லை.

- இரா.ச.இமலாதித்தன்

11 நவம்பர் 2014

இணைய பிரபலம் என்ற அற்பத்தனம்!

மனசுல உள்ளதை மறைக்காமல் நேர்மையான பதிவை தரும் பதிவர்கள் சமூக ஊடகங்களில் ஒன்றான ஃபேஸ்புக்கில் மிக குறைவு. தனிப்பட்ட செயல்பாட்டுக்கும், ஃபேஸ்புக்கிற்கும் சம்பந்தமே இல்லாமல் பதிவிடும் நபர்களின் போலி பிம்பம் அருகிலுள்ளவர்களுக்கு மட்டுமே தெரியும். மனசுல ஒன்னு; செயல்ல ஒன்னு; பேச்சுல ஒன்னு; எழுத்துல ஒன்னு; இப்படி பல முகங்களில் முகமூடியிட்டு போலியாக பதிவிடும் நபர்களே இங்கே அதிகம். இதுல ஏன் பிரபலம் என்ற பிதற்றல்? இங்கே வழங்கப்படும் லைக்குகளை வைத்து பக்கத்து வீட்டுக்காரன் கிட்ட கடன் கூட வாங்க முடியாது. இது தான் எதார்த்தம். அதை விட்டுவிட்டு பிரபலம் - லைக் போன்ற அற்பதனத்துக்காக அக்கப்போர் தேவையில்லாதது. பிரபலமான பதிவர்கள், அந்த பிரபலத்தை பயன்படுத்தி திரைத்துறையிலோ - எழுத்துத்துறையிலோ, டிவி/பத்திரிகை போன்றதோர் ஊடகத்திலோ தனக்கானதொரு முத்திரையை பதித்தால் மகிழ்ச்சி. மற்றபடி இந்த லைக்குகளெல்லாம் வெறும் போலி பெருமை பட்டியலில் தான் சேரும். ஒரு பிரபலமான பதிவர் ஓரிரு மாதம் பதிவிடாமல் இருந்துவிட்டால், அதன் பிறகு அந்த பிரபல பதிவரை சீண்ட கூட ஆளிருக்காது. இதை சொல்வதனால், ச்சீ ச்சீ இந்த பழம் புளிக்கும் என்ற இயலாநிலையில் நானில்லை. எதார்த்தம் இது தான்.

- இரா.ச.இமலாதித்தன்

08 நவம்பர் 2014

வண்ணங்களும் வணக்கத்துக்குரியவையே!

அனைத்து வண்ணங்களிலும் ஓர் அழகு ஒளிந்திருந்தாலும், பசுமைக்கு நிகரான அழகு வேறேதுமில்லை. என் சிறு வயது முதலே மிகவும் பிடித்து போன நீலம், பச்சைக்கு பிறகு சிவப்பும் பிடித்துப்போய் விட்டது. RGB என்ற இந்த மூவண்ணங்கள் தான் மற்ற அனைத்து விதமான வண்ணங்களுக்கும் மூலாதாரமாக இருக்கின்றதென்றாலும், இந்த மூன்று வண்ணங்களுக்கு பின்னால் பல அறிவியலும் ஆன்மீகமும் கூட நிறைந்திருக்கின்றன. உதாரணமாக பச்சையை பெருமாளுக்கும், கருநீலத்தை இராமனுக்கும், சிவப்பை சிவன் மற்றும் எம்பெருமான் திருமுருகனுக்கும் உரிய நிறமாக சொல்வார்கள். மேலும், நவக்கிரங்களான புதனுக்கு பச்சையையும், சனிக்கு - நீலத்தையும், செவ்வாய்க்கு - சிவப்பையும் வஸ்திரங்களாக அணுவித்தும் வணங்குவார்கள். இது ஆன்மீகம். அதன் தொடர்ச்சியாக, குளோரினுக்கு - பச்சை, நைட்ரஜனுக்கு - நீலம், ஆக்சிஜனுக்கு - சிவப்பு என்றும், மேலும் எலக்ட்ரான் - புரோட்டான் - நியூட்ரான் போன்ற அணுக்களுக்குள்ளும் இந்த பச்சை - நீலம் - சிவப்பு வண்ணக்குறியீடுகள் மூலமும் அறிவியலிலும் விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர். நிச்சயம் ஒருநாள், விஞ்ஞானமும் மெய்ஞானமும் ஒற்றைப்புள்ளியில் சங்கமித்து, அறிவியலும் ஆன்மீகத்தோடு இணையும். அதன் பெயர் தான் இறைவன் என்று அப்போது புரியும்.

- இரா.ச.இமலாதித்தன்

கொசுறு:

சேனைக்கிழங்கு - நாக்கை அறிக்கும்; வள்ளிக்கிழங்கு - நாக்கில் இனிக்கும். இதுல இருந்து என்ன புரியுது? முதல்ல இருக்கிறத விட இரண்டாவதா வரதுதான் இனிக்கும். அதுனால தான் தெய்வசேனை இருக்கும்போதே வள்ளி மீதும் எம்பெருமான் திருமுருகன் காதல் வசப்பட்டுட்டாரு போல.