07 நவம்பர் 2014

06 நவம்பர் 2014

குறைகளை சுட்டிக்காட்டுவதில் தவறில்லை!

பெரும்பான்மை சாதியை சார்ந்தவன் என்ற முறையில் தானே தைரியமாக ஒரு சாதிக்கட்சியை உருவாக்கின்றனர். அந்த பெரும்பான்மை சாதியின் ஓட்டுகளுக்காக தானே திராவிட கட்சிகளும் ஒட்டுமொத்த 234 தொகுதிகளில் யாசகம் போல ஓரிரு தொகுதிகளை ஒதுக்குகின்றன. அந்த சாதிக்கட்சியை யாரை நம்பி, யார் பெயரை சொல்லி, யாருடைய படத்தை போட்டு, எந்த கொள்கைக்காக உருவாக்கினார்களோ, அதையெல்லாம் வெகு எளிதாக மறந்துவிட்டு தனிப்பட்ட பொருளாதார பிரச்சனைக்காக எதிரியிடம் சரணாகதி அடையும் சுயநலவாதிகளின் கீழ்த்தரமான போக்கை, அந்த சாதியை சார்ந்தவன் என்ற முறையில் சுட்டிக்காட்டுவது சரியான முறையே. அதற்காக நீ அந்த அமைப்பில் இருக்கிறாயா? இல்லை நீ எந்த சாதிக்கட்சியில் இருக்கின்றாய்? நீ ஏதாவது கட்சியை நடத்தி பார்த்திருக்கியா? என்று சொல்வதெல்லாம் ஏற்க முடியாத ஒன்று. அப்படி பார்த்தாலும், ஒரு சாதி அமைப்பில் உள்ளவன், அடுத்த அமைப்பை விமர்சிப்பதும் தவறு தானே? தன் சுயநலத்திற்காகவும் - புகழுக்காகவும் - பணத்திற்காகவும் ஒட்டுமொத்த சாதியையும் அடகு வைக்கும் நபர்களை, அந்த சாதியை சார்ந்தவனே சுட்டிக்காட்ட கடமைப்பட்டவனாகிறான். மாறணும்!

- இரா.ச.இமலாதித்தன்

05 நவம்பர் 2014

மூழ்கும் கப்பலில் கார்த்திக்!

காங்கிரஸ் இல்லாத பாரதத்தை உருவாக்கவே நேதாஜி தலைமையில் ’அகில இந்திய பார்வார்ட் ப்ளாக் கட்சி’ உருவாக்கப்பட்டது. அந்த கட்சியின் மூலமாகவே தமிழக அரசியலில் கால் பதித்த நடிகர் மு.கார்த்திக், பல்வேறு அரசியல் சூழ்நிலைகளால் அதிலிருந்து விலகி ’அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி’யை உருவாக்கினார். அதுவும் காலப்போக்கில் நாடாளும் மக்கள் கட்சியாக, பெயரளவிலும் - செல்வாக்கிலும் தேய்ந்து போனது.

இனிவரும் காலங்களில் சாதிக்கட்சியை நடத்த யார் விரும்பினாலும், அவர்கள் மருத்துவர் ச.ராமதாசிடமும் - தொல்.திருமாவளவனிடமும் தான் படிப்பினையை கற்க வேண்டும். ஒரு நடிகர் தனிக்கட்சியை தொடங்க விஜயகாந்தையும், அதே நடிகர் சாதிக்கட்சியை உருவாக்க சரத்குமாரிடமும் தான் கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் மு.கார்த்திக்குடைய சாதி அரசியலானது, காங்கிரசில் சரணடைந்தது தான் வேதனையின்ம் உச்சம். 

அடுத்த பிறவியில் தமிழனாக பிறக்க ஆசைப்படுகிறேனென நேதாஜி சொல்லக் காரணமாக இருந்த, பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவருடைய சமூகத்தை சார்ந்தவர் என்ற ஒரே காரணத்திற்காகவே, அகில இந்திய பார்வார்ட் ப்ளாக் கட்சியின் தமிழ் மாநில தலைமை பதவியை வழங்கிய கெளரவித்தனர். ஆனால் இன்றைக்கு அதையெல்லாம் எட்டி உதைத்து உதாசினப்படுத்திருக்கும் மு.கார்த்திக் உடைய நிலைப்பாட்டை, நேதாஜி-தேவர் கொள்கைகளை கடைபிடிக்கும் யாராலும் ஏற்க முடியாது. ஆழ்ந்த அனுதாபங்கள்!

- இரா.ச.இமலாதித்தன்

02 நவம்பர் 2014

ராஜராஜசோழனின் சதயவிழா!



அருண்மொழித்தேவன் என்கிற உடையார் ஸ்ரீ ராஜராஜ தேவரின் 1029வது சதயவிழா வாழ்த்துகள்!

ஸ்வஸ்தி ஸ்ரீ
திருமகள் போலப் பெருநிலச் செல்வியும்
தனக்கே உரிமை பூண்டமை மனக்கொளக்
காந்தளூர்ச் சாலை கலமறுத் தருளி
வேங்கை நாடும் கங்க பாடியும்
நுளம்ப பாடியும் தடிகை பாடியும்
குடமலை நாடும் கொல்லமும் கலிங்கமும்
முரட்டொழில் சிங்களை ஈழமண்டலமும்
இரட்ட பாடி ஏழரை இலக்கமும்
முந்நீர் பழந்தீவு பன்னீரா யிரமும்
திண்திறல் வென்றித் தண்டாற் கொண்ட தன்
எழில்வளர் ஊழியுள் எல்லா யாண்டும்
தொழுதகை விளங்கும் யாண்டே
செழியரைத் தேசுகொள் ஸ்ரீ கோவி ராஜ கேசரி வன்ம ரான
ஸ்ரீ இராசராச தேவர்க்கு யாண்டு!


- இராஜராஜ சோழனின் மெய்க்கீர்த்தி.

01 நவம்பர் 2014

யுவனுக்கு தாய் மதத்தானின் வாழ்த்துகள்!



மதம் மாறினால் பேரும் மாத்திருப்பாய்ங்க. புதுப்பேரு என்னன்னு தெரியல. அதுவரையில் யுவன் சங்கர் ராஜா என்ற பெயரில் அறியப்பட்ட யுவனுக்கு மூன்றாம் திருமணநாள் வாழ்த்துகள்! சீனா - மலேசியா - இலங்கை ன்னு உலகம் முழுவதும் சுற்றும் போது அங்குள்ள பெண்ணின் மீது காதல் கொண்டு, பெளத்தனாக மதம் மாறாமல் இருந்தால் மகிழ்ச்சி. தாய் மதத்திலிருந்து என் வாழ்த்துகளும், எம்பெருமான் முருகனின் அருளும் உங்களுக்கு எப்போதும் இருக்கும்!

- இரா.ச.இமலாதித்தன்

நாகை மைந்தர் தான் தென்னிந்தியாவின் முதல் சூப்பர்ஸ்டார்!



எம்.கே.தியாகராஜ பாகவதர் நடிப்பில் 1944ம் ஆண்டு வெளிவந்த ‘ஹரிதாஸ்’ திரைப்படம் தொடர்ச்சியாக மூன்று வருடஙகள் ஓடியது. இந்த சாதனையை இதுவரை யாரும் முறியடித்ததில்லை. மேலும், திரையுலகில் 1934ம் ஆண்டு நுழைந்ததிலிருந்து மொத்தமாகவே 14 படங்களில் மட்டுமே நடித்த எம்.கே.பாகவதரின் பெரும்பாலான படங்கள் வருடகணக்கில் ஓடி தொடர் சாதனைகளை படைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. தென்னிந்தியாவின் முதல் சூப்பர் ஸ்டாரும் - எங்க நாகப்பட்டின மாவட்டத்து காரருமான எம்.கே. தியாகராஜ பாகவதர் (Mayavaram Krishnamurthy Thyagaraja Bhagavathar) நினைவு நாளான (01 நவம்பர் 1959) இன்று, நாகப்பட்டினத்து காரனாய் பெருமையோடு அவரை நினைவுகூறுகிறேன்.

- இரா.ச.இமலாதித்தன்

தமிழ் பொறுக்கீஸ்!

எனக்கென்னமோ, இந்த ஐந்து மீனவர்கள் மீதான சிங்களவாத இலங்கை நீதிமன்றம் கொடுத்த மரணதண்டனை தீர்ப்பிற்கு பின்னால், சுப்ரமணிய சுவாமிதான் இருப்பாரென தோணுது. ”பாத்தீங்களா, டமில் டமின்னு பேசினவா யாராலயும் இந்த தூக்குதண்டனையை தடுக்க முடியல. நான் தான் அந்த டெத் பெனாலிட்டிய ஸ்டாப் பண்னேன். நான் ராஜபக்சா கிட்ட சொல்லலைன்னா, இந்நேரம் இவா அஞ்சு பேரும் செத்து போயிருப்பா... ” நாளடைவில் இப்படி ஒரு கெத்தான பேட்டியை கொடுக்கவே சு.சுவாமி இதை செய்திருக்க கூடும். ராஜபக்சேவுக்கு ’பாரதரத்னா’ விருது கொடுக்க சொன்னதும் கூட, இது மாதிரியான ஓர் அரசியலுக்காகத்தான் இருக்கும்.

இப்படிக்கு,
தமிழ் பொறுக்கி
இரா.ச.இமலாதித்தன்