14 அக்டோபர் 2014

தீபாவளிக்கு ரிலீஸ்? கத்தி!

’தமிழக வாழ்வுரிமை கட்சி’ என்ற பெயரில் லெட்டர்பேடு அமைப்பு வைத்திருக்கும் திரு தி.வேல்முருகனெல்லாம், ’கத்தி’ திரைப்படம் வெளியே வந்தால், ”திரையை கிழிப்போம்!, அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறுவோம்!” என்றெல்லாம் வீராப்பு காட்டுற மாதிரியான நிலை தமிழ்நாட்டுக்கு வந்துடுச்சேன்னு நினைக்கும் போதுதான் காமெடி கலந்த கவலை வருது. எதார்த்தம் என்னன்னு பார்த்தால், 200 ரூபாய் கொடுத்து முதல்நாள் படம் பார்க்க வருகின்ற சாமானிய ரசிகன் முன்னாடி, ’திரையை கிழிப்பேன்!ன்’னு சொன்னாலேயே, அவன் இவிய்ங்க முகரக்கட்டையெல்லாம் கிழிச்சிட மாட்டானா? 200 ரூபாய்க்காக 5 வருட ஆட்சியையே அரசியல்வாதிக்கிட்ட தரும் சாமானியனிடம் வெற்று சவடால் விடும் ஆசாமிகளெல்லாம் இப்படி தியேட்டர் வாசலில் கிழிபட்டால் தான் இதற்கெல்லாம் ஒரு முடிவு வரும்.

- இரா.ச.இமலாதித்தன்

13 அக்டோபர் 2014

கல்யாணம் என்னும் கடல் தேடி!

ஒரு பைசாவுக்கு ப்ரோயசனம் இல்லாம ஊர்ல உரண்ட இழுத்து, பஞ்சாயத்தை கூட்டி வீட்டுக்கு செலவை வச்சிக்கிட்டு திரிஞ்ச பயலுகயெல்லாம், பொண்டாட்டி புள்ளைங்களோட பைக்ல ட்ரிபிள்ஸ் போய்கிட்டே "அண்ணே எப்போ கல்யாணம்?"ன்னு நக்கலா கேட்டுகுறாய்ங்க. பின்னாடி உள்ள அவன் பொண்டாட்டி யாருன்னு பார்த்தா, பக்கத்து ஊர்ல மூக்கு ஒழுகிக்கிட்டு கிடந்த வண்டு சிண்டா இருக்குது. இவன் இப்படி கேட்ட உடனே அது கூட நம்மள பார்த்து நக்கலா சிரிக்குது. முருகா! என்னடா இது உன் பக்தனுக்கு வந்த சோதனை?

கொஞ்ச நேரம் ஓவர்டைம் ஒர்க் பண்ணினாலேயே, "உங்களுக்கு என்ன ஜி குடும்பமா? குட்டியா? நைட் ஃபுல்லா இங்கயே கிடக்கலாம். நாங்களாம் அப்படியா? இருட்டுறதுக்குள்ள வீட்டுல போய் அடைஞ்சிடணும்"ன்னு நக்கல் பண்றாய்ங்க! என்னய்யா இது, கல்யாணம் ஆனாத்தான் குடும்பமா? கல்யாணமாகாத எங்களுக்கும் ஒரு குடும்பம் இருக்குய்யா... முருகா! இதுக்கெல்லாம் காரணம் நீ தான்.

 - இரா.ச.இமலாதித்தன்

12 அக்டோபர் 2014

ஆணாதிக்கமா?

# இந்தியாவுல கருத்துரிமை கூடவா இந்த ஆம்பளைங்களுக்கு கிடையாது? ஜேசுதாஸ் சொன்னதுல ஒரு தப்புமில்ல. கண்டவனுக்கும் கண்டதெல்லாம் தெரியிற மாதிரி கண்டமாதிரி ட்ரஸ் போடுவீங்க; அதை கண்டுக்காமலே இருக்கணுமாக்கும். அப்பறமா கண்டவனும் கண்ட இடத்துல கைய வச்சிட்டான், கால வச்சிட்டான்னு சொல்லி புலம்பும் போதும் அதை கண்டுக்கிறதும் இந்த ஆம்பிளங்கதாம்மா!

# லெக்கின்ஸ் போட்ட பொண்டாட்டியை கூட்டிக்கிட்டு வெளியே வர புருசனெல்லாம் அம்மணமாவே கூட வரலாம். மானங்கெட்டவய்ங்க!

# ஏம்மா மகளிரணிகளே, நீங்க என்ன கருமத்தை வேணும்ன்னாலும் ஃபேஷன் என்ற மோகத்தில் உடுத்திக்கொள்ளுங்கள். மேலும், உடுத்துவதும் - உடுத்தாமல் இருப்பதும் கூட உங்க தனிப்பட்ட விருப்பம் தான். அதில் யாரும் தலையிட வேண்டிய அவசியமுமில்லை. ஆனால், கையை புடிச்சிட்டான், கற்பழிச்சிட்டான், ஈவ்டீசிங் பண்ணிட்டான்னு இனிமே மகளிர்காவல் நிலையத்துல கம்ப்ளெயிண்ட் கொடுக்காம மட்டும் இருங்க; அது போதும்.

11 அக்டோபர் 2014

மு..க. - ஜெ. - ஓ.பி..எஸ்.

# அனைத்திந்திய அ.தி.மு.கட்சி முதல் நேற்று தொடங்கிய லெட்டர்பேடு கட்சி வரைக்கும், செல்வி ஜெ.ஜெயலலிதாவுக்கு (ஆதாயத்திற்காக) ஆதரவாக இன்னைக்கு தமிழ்நாடெங்கும் உண்ணாவிரதம் இருக்காய்ங்க. இவிய்ங்க எவ்ளோதான் பண்ணினாலும், தமிழீழ தனிநாட்டு விடுதலைக்காக திரு மு.கருணாநிதியின் மூனு மணி நேர உண்ணாவிரத ரெக்கார்டை எந்த கொம்பனாலயும் உடைக்கவே முடியாது.

# இந்த ’மக்கள் முதல்வர்’ என்ற பட்டத்தையெல்லாம் ரெண்டு மூனு வருசத்துக்கு முன்னாடியே புதுச்சேரியில திரு.என்.ரெங்கசாமி தனிக்கட்சி ஆரம்பிக்கும் போதே பார்த்தாச்சு. புதுசா ஏதாவது சொல்லிருக்கலாம்.

# இறைவா, எதிரிகளை நான் பார்த்து கொள்கிறேன்; நண்பர்களை நீ பார்த்து கொள்! - இது ரஜினியோட பஞ்ச் டயலாக். இப்போது செல்வி. ஜெயலலிதாவுக்கும் இது பொருந்துகிறது. சொந்த கட்சி காரய்ங்களே ஆர்வ கோளாறுல கவுத்து விட்டுருவாய்ங்க போலிருக்கு.

# தகுதி இல்லாதவரிடம் மிகப்பெரிய பதவி வந்தால், அந்த பதவியின் தகுதியும் ஏளனமாக்கப்படும் என்பதற்கு ஓ.பி.எஸ். உதாரணமாகிவிட கூடாது. மேலும், ஓ.பி.எஸ். வேண்டுமென்றால் அதிமுக தலைமைக்கு அடிமையாக இருக்கலாம். ஆனால், இன்று ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் தலைவரென்ற பொறுப்பில் இருக்கின்றார். பொறுமையாவே இருக்காமல் கொஞ்சமாவது முதல்வர் என்ற பொறுப்போடு இருக்கலாம்.

# போற போக்கை பார்த்தால் ஜெயா ப்ளஸ் சேனல் கூட செல்வி.ஜெயலலிதாவை மறுந்துடும் போலிருக்கு! திரு.ராமதாஸ், திரு.கருணாநிதி பற்றிய செய்திகள் தான் அதிகமா வருது.

# இலங்கையிலிருந்து இன்று விடுவிக்கப்பட்ட எங்க நாகை மாவட்ட மீனவர்கள் ஐந்து பேரும், "மக்கள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவிற்கு நன்றி!ன்னு சொன்னதாக ஜெயாடிவில சொல்றாய்ங்க. ”ஒருத்தனுக்கு எழுந்திருச்சு நிக்கவே முடியலையாம்; அவனுக்கு ஒன்பது பொண்டாட்டியாம்!”ன்னு சொல்ற சந்திரமுகி படத்துல வர வடிவேலு வசனம் தான் ஞாபகத்துக்கு வருது.

# தற்போது திரு. ஓ.பி.எஸ் தலைமையிலான தமிழக அரசின் சார்பில் வெளிவரும் வாழ்த்து / கண்டன அறிக்கைகளுக்கும், செல்வி ஜெ.ஜெயலலிதாவின் சார்பில் முன்பு வெளிவந்த வாழ்த்து / கண்டன அறிக்கைகளுக்கும் எந்தவித மாற்றமும் இல்லை. அந்த 11 பேர் கொண்ட குழுக்கு வாழ்த்துகள்!

# உண்ணாவிரதம் இருக்குறதுக்கே, கையில பணம் கொடுத்து, வயித்துக்கு குவார்ட்டரும் - பிரியாணியும் கொடுக்குறாய்ங்க. இதுல எப்படி சுத்த பத்தமா விரதம் இருக்க முடியுமாக்கும்?

# இதுவரை திரு. மு.கருணாநிதியின் வயதை காரணம் காட்டி முதுமையை விமர்சித்து வந்த அ.இ.அ.தி.மு.க.வினர், இப்போது உச்சநீதிமன்றத்தில் வயதை காரணம் காட்டி ஜாமீன் கேட்டு காத்திருக்கும் செல்வி. ஜெ.ஜெயலலிதாவையும் விமர்சிக்க தி.மு.க.வினருக்கு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்திருக்கின்றனர் என்பதுதானே உண்மை.

# திரு. மு.கருணாநிதியை விமர்சிக்கும் போதுதான் முறுக்கிய நரம்புகளோடு தெறிக்கும் பேச்செல்லாம் திரு. சீமானுக்கு வரும் போல! ஜாமீனுக்கு ஜால்ரா அடித்தால் தான் திரு. வைகுண்டராஜனுக்கு பிடிக்கும் என்பதால், அநேகமாக 2016 தேர்தலின் போதுதான் இனி களமாடுதல் இருக்கும்ன்னு நினைக்கிறேன். வருங்கால முதலமைச்சர் என்ற கனவில் இருப்பவருக்கே இந்த நிலைமையா?

- இரா.ச.இமலாதித்தன்

09 அக்டோபர் 2014

அதிமுகவும் - தேவர் குருபூஜையும்!



சென்ற வருடம், தேவர் ஜெயந்திக்கு 144 தடை போட்டாங்க; தீடீரென்று ஒருநாள், "மண்-பெண்-பொன்" மீது பற்றற்ற பசும்பொன் தேவருக்கு அ.இ.அ.தி.மு.க. சார்பில் தங்க கவசம் சாத்தினாங்க. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இராமநாதபுரம் தொகுதியில் வெற்றி பெறவும் - வெற்றி பெற்ற பின்னும், இசுலாமியரான திரு.அன்வர்ராஜா இருமுறை பசும்பொன்னுக்கு வந்து பிராத்தனையும் செய்து விட்டு போனார். இப்போது செல்வி ஜெயலலிதாவின் விடுதலைக்காக பசும்பொன் தேவருக்கு அ.இ.அ.தி.மு.க. சார்பாக சிறப்பு பூஜை கூட பண்றாங்க. ஆனால், போன வருடம் தடை போட்ட போது நடுத்தர மற்றும் வயது முதிர்ந்த பெண்களெல்லாம் அக்டோபர் 30ம் தேதியன்று பசும்பொன் சன்னதியில் ஒப்பாரி வைத்து "தேவர் கூலி கொடுப்பாரு!"ன்னு இது மாதிரி நிறையா சாபங்களை செல்வி ஜெயலலிதாவிற்குகொடுத்தார்கள். அது இப்போது இன்னமும் சப்தமாக என் காதில் ஒலித்து கொண்டு இருக்கின்றது. வினை விதைத்தால் வினையைத்தானே அறுக்க வேண்டும்? அதுதான் விதி!

- இரா.ச.இமலாதித்தன்

02 அக்டோபர் 2014

ஜீவா - நேர்மையான படம்!

'ஜீவா' படத்தை இன்னைக்கு தான் பார்த்தேன். படம் சூப்பர். இத்தனை வருடங்களாக இந்திய கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தும் பார்பனியத்தை தோலுரித்து காட்டிருக்கும் இயக்குனர் சுசீந்திரன் மிகச்சிறந்த கதாசிரியர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கின்றார். காதலும் - நட்பும் - கிரிக்கெட்டும் - கூடவே ஆழமான கருத்தையும் கதையோடு இணைத்திருக்கும் விதம் அருமை. வாய்ப்பு கிடைக்காமலேயே தோற்று போவது இந்தியாவில் மட்டும் தான்! என்பதை க்ளைமேக்ஸ் வசனத்தில் பஞ்ச் வைத்திருக்கின்றார். படத்தில் தமிழ்நாட்டு கிரிக்கெட் கிளப்பின் தலைவராக வரும் பார்த்தசாரதியை பார்க்கும் போது இந்தியா சிமெண்ட் சீனிவாசன் மட்டும் தான் நினைவுக்கு வருகின்றார். மேலும் பார்த்தசாரதி & சகாக்கள் அனைவரும் நெற்றியில் நாமத்தோடு காட்சிப்படுத்தப்பட்டு இருப்பதும், ’உங்க ஆளுக’ என பார்பனரை குறிவைத்து சொல்லும் வசனங்களிலும், ஸ்ரீராம்-சேஷபாலன் என பல கிரிக்கெட் வீரர்களின் பெயர்களிலும் சில விசயத்தை நமக்கு புரிய வைத்திருக்கின்றார் சுசீந்திரன். இந்த படத்திற்கு பிறகு ஐ.பி.எல் மீதும், ஐ.பி.எல்.லுக்கு முன்னோடியான ஐ.சி.எல்.லை உருவாக்கிய கபில்தேவ் மீதும் ஒருபடி மரியாதை என்னுள் கூடி இருகின்றது. குறிப்பாக, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் பற்றியும், இந்திய கிரிகெட் அணி தேர்வாளர்களின் பார்பன வெறி பற்றியும் உண்மையை மிக தைரியமாக சொல்லியுள்ள ஒரு தரமான படம் இந்த ’ஜீவா’! கண்டிப்பா பாருங்க; உங்க மனசையும் தொடும்.

- இரா.ச.இமலாதித்தன்

நேதாஜியின் ஆயுதமும்! காந்தியின் சுதந்திரமும்!

ஆயுதத்தின் மீது நம்பிக்கையில்லாத மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி பிறந்தநாள் அன்னைக்கு, இந்த ஆயுத பூஜை வந்திருப்பது கொஞ்சம் விசித்திரமாகத்தான் இருக்கு. அர்ஜீனன் உள்பட பாண்டவர்கள் அனைவரும் காட்டில் வசிக்கும் கடைசி ஒரு வருடகாலம் தங்களது ஆயுதங்களை வன்னி மரத்தடியில் ஒளித்து வைத்து விட்டு, ஒரு வருடம் கழித்து இந்த புரட்டாசி மாதத்தில் திரும்ப எடுத்து பூஜை செய்த நாளை ஆயுதபூஜையாகவும், அதனை தொடர்ந்து போரில் வெற்றி பெற்ற நாளை விஜயதசமியாகவும் நாம் கொண்டாடி வருகின்றோம்.

ஆனால், காந்தியோ 1939ல் காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட நேதாஜியின் செல்வாக்கு உயர்ந்து வருவதை அறிந்து, அவருக்கு எதிராக ராஜேந்திரப் பிரசாத்தையும், நேருவையும் போட்டியிடுமாறு வற்புறுத்தினார். அவர்கள் மறுக்கவே, பட்டாபி சீதா ராமையாவை நிறுத்தியும் நேதாஜியிடம் தோல்வியடைந்தார். இதனால், சீதா ராமையாவின் தோல்வி தனக்குப் பெரிய இழப்பு என்று பகிரங்கமாகவே காந்தி தெரிவித்து உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினார். அதனால், அவரைச் சமாதானப்படுத்த நேதாஜி காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக்கப்பட்டார். அப்போது அவர் ஆரம்பித்தது தான் `ஃபார்வர்டு பிளாக்’ கட்சி.

அதன் பிறகு நேதாஜியின் ஆயுத போரட்டத்தால் மிகப்பெரிய சரிவை ஆங்கில ஏகாதிபத்தியம் அடைய நேரிட்டது. இந்திய தேசிய இராணுவத்தை உருவாக்கி இந்தியர்களின் வீரத்தை வெளி உலகக்கு வெளிப்படுத்திய ஆயுதமேந்திய நேதாஜியை தீவிரவாதி என்று காட்டி கொடுத்தது காந்தி & கோ. இதற்கு மேல் இந்தியாவில் சுரண்ட எதுவுமில்லை; மக்கள் அனைவரும் நேதாஜி வழி ஆயுத போரட்ட எழுச்சிக்கு தயாராகி விட்டார்கள் என்பதை உணர்ந்த வெள்ளையன், யாசகமாக கொடுத்த சுதந்திரத்தை தானே அடைந்தது போல் காட்டி கொண்டனர் காந்தி & கோ. மேலும், தலைமறைவாக இருந்த நேதாஜியை காட்டி கொடுத்தது மட்டுமில்லாமல் கைது செய்து பிடித்து உங்களிடம் ஒப்படைப்போம் என்று ஆங்கிலேயனிடம் உத்திரவாதமும் கொடுத்த இந்த காந்தி - மகாத்மாவாம், தேசத்தந்தையாம்!

இந்த ஒட்டுமொத்த தேசத்திற்கும் தந்தை என்ற பட்டத்தை  யார் கொடுத்தது? எதனால் கொடுத்தார்கள்? எப்போது கொடுத்தார்கள்? என்ற கேள்வியை உத்திர பிரதேசத்தை சேர்ந்த ஐஸ்வர்யா பரஷ்ஹார் என்ற பத்து வயது மாணவி, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக  2011ம் ஆண்டு கேட்டபோது,  ”காந்திக்கு தேசத்தந்தை என்ற அடைமொழியானது எங்கு எப்போது வழங்கப்பட்டது என்பது குறித்த தகவல் இதுவரை கிடைக்கவில்லை.” என்றே பதில் வந்தது. இது தான் காந்தி. இவ்ளோ தான் காந்தி. பார்பனிய சிந்தனைக்கும் - பாகிஸ்தான் பிரிவினைக்கும் சொந்தகாரரான காந்தி, ஒருபோதும் மகாத்மாவும் கிடையாது; தேசத்தந்தையும் கிடையாது. ஒவ்வொரு இந்தியனுக்குள்ளும் வீரத்தை தட்டியெழுப்பி ஆயுதமேந்த வைத்து ஒட்டுமொத்த இந்தியர்களை தலை நிமிர வைத்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தான் எங்களுக்கு எப்போதுமே தேசத்தந்தை!

வீரமிக்க அனைத்து உறவுகளுக்கும் ஆயுதபூஜை வாழ்த்துகள்!

- இரா.ச.இமலாதித்தன்