14 ஜூன் 2014

சாதி மதம் நான்!

போலியா வாழ்றதை விட உண்மையா வாழ்றதுதான் அழகுன்னு நினைக்கிறேன். அது சாதியோ, மதமோ எதுவா இருந்தாலும், வெளிப்படையா இருந்தால் நல்லாருக்கும். சிலபேரு மனசுக்குள்ள ஒன்னு, வெளியில ஒன்னுன்னு நடிக்கிறாங்க. ஆனால் எதார்த்தத்தில், சாதி இல்லாம எல்.கே.ஜி கூட சேரமுடியாது. அரசாங்க வேலையும் சரி, அரசு சம்பந்தமான எல்லாவித பயன்பாடுகளுக்கும் சரி, சாதியும், சாதி சான்றிதழும் கட்டாயம் தேவைப்படுகின்றது. மேலும் சாதீய இடஒதுக்கீடும் இன்றும் நடைமுறையில் தானே இருக்கு. சாதி ரீதியான ஒதுக்கீடுகள் போன்ற ஏற்ற தாழ்வுகள் களையப்படும் வரை சாதி, மதம் பற்றி பேசாமல் இருக்கவும் முடியாது. மேலும், சாதி என்பது ஒருவரின் பாரம்பரிய அடையாளம். அந்த சாதியையே வைத்து பிரிவினை பார்ப்பதுதான் தவறு.

சாதியோ - மதமோ இதுபோன்ற பலவித அடையாளங்களை இழந்து எதையுமே பெற போவதில்லை. ஏனெனில், ஒட்டுமொத்த இந்தியாவின் அடையாளமே பாரம்பரியமும், கலாச்சாரமும் தான். இந்த மாதிரியான பழமை காக்க சாதியும் அவசியம். எதையுமே பேசி தெளிவடைதல் தான் நல்லது. பேசாமலே இருப்பதால் மட்டும் எல்லாம் சரியாகிவிட போவதில்லை. நான் எந்தவிதத்திலும் சாதியை வைத்து யாரையும் பிரிவினையாக பார்த்தது இல்லை. அதுக்காக எந்த இடத்திலும் என் சாதி, மத அடையாளத்தை மறைத்ததும் இல்லை. இதை சாதிவெறி - மதவெறி என்று சுருக்கிவிட முடியாது. இதுபோன்ற சாதி-மத கலாச்சார வேர்களை பலவீனப்படுத்தி விட்டு சமுதாய மரத்தை ஒருபோதும் பலப்படுத்தி விட முடியாது.

நமது தாத்தாக்களின் காலங்களில் ஒவ்வொருவரின் பெயருக்கு பின்னாலும் சாதி இருந்தது. யாரிடமும் சாதிவெறி இருந்தது இல்லை. ஆனால் இன்று, பெயருக்கு பின்னால் சாதி இல்லை; அளவுக்கு அதிகமான சாதி அமைப்புகளும், சாதி சங்கங்களும், சாதி கட்சிக்களும் உருவாகி விட்டன. முன்பை விட இன்று சாதி ஒரு மாபெரும் நிர்ணயசக்தியாக உருவெடுத்துள்ளது. ஆன்மீக விழாவிற்கு சென்றாலே, சாதிவெறியின் காரணமாக பெட்ரோல் குண்டு வீசியும், கற்களால் அடித்தும் அப்பாவிகளை கொலை செய்யும் காலமாக தமிழ்நாடு மாறிவிட்டது. இவற்றிற்கெல்லாம் எது/யார் காரணம்? சாதியை வைத்து பதவி சுகத்திற்காக மக்களை அந்நியப்படுத்திய திராவிட அரசியல்தானே. எனவே, முதலில் திராவிடம் ஒழிப்போம். பிறகு சாதீய ஏற்றதாழ்வுகளை ஒழிப்போம்!

- இரா.ச.இமலாதித்தன்

13 ஜூன் 2014

சீமானின் தமிழ்தேசியமும் சாதி ஒழிப்பும்!

திரு.சீமான் ஏன் ஈழத்து அகதி பெண்ணை திருமணம் செய்யப்போறேன்னு சொல்லிட்டு வசதியான வீட்டு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்? இது அவரது தனிப்பட்ட வாழ்க்கைன்னு சொல்லுவீங்க. சரி, திரு. சீமான் ஏன் ஜெயலலிதாவிற்கு ஜால்ரா அடிக்கின்றார்? தன் சாதி சார்ந்த தந்தி டிவிக்காக பகுதிநேர ஊழியர் போல செயல்படுகிறாரே, காரணம் என்ன? தனது சாதிக்காரரான ஆதித்தனார் உருவாக்கிய நாம்தமிழர் கட்சியின் பெயரை அப்படியே இவரும் எடுத்துகொண்டாரே ஏன்? தமிழில் சொல்லுக்கா பஞ்சம்? ஜெயலலிதாவை திரு.சீமான் எப்படி பார்க்கிறார்? தமிழராகவா? தமிழரல்லதவராகவா? இல்லை தன்னுடைய தலைவராகவா?

இந்த அதிமுக ஆட்சியில் திரு.சீமானின் எந்த வித தமிழர் சார்ந்த நடவடிக்கையும் சொல்லும்படியாகவே இல்லையே? ஏன்? இதையெல்லாம் கேட்கும் நான் தெலுங்கனோ கன்னடனோ மலையாளியோ அல்ல. இனத்தால் தமிழன் - சாதியால் தேவன் - பிரிவால் அகமுடையான். சாதி பிரிவை ஏன் சொன்னேன் என்றால், சட்டுன்னு வழக்கமா எல்லாரையும் சொல்ற மாதிரி என்னையும் தெலுங்கன்னு சொல்லுவீங்க. சீமானே சொல்லிருக்காரு, ஒருவனை தமிழன் என்பதை அறிந்து கொள்ள, முதலில் அவனுடைய சாதி பெயரை கேள் என்று! ஏனென்றால், சீமானும் சாதித்தமிழனே...

இதே சீமான், அரசியல் சார்ந்த அமைப்பு தொடங்கும் முன் உ.பி கிறிஸ்துவ தேவலாய பிரச்சனையின் போது, தமிழ்நாட்டிலுள்ள ஹிந்து பெண்களின் தாவணியை உருவ சொன்ன்னவர் தானே? அப்படிப்பட்ட சீமான் அடிப்படையில் மதவாதி, பிறகு சாதிய சார்பு வாதி. அதையெல்லாம் மறந்துவிட்டு சீமானை ஒட்டுமொத்த தமிழ்தேசியத்தின் அடையாளமாக பார்க்க முடியவில்லை. ஏனெனில் சீமான் வருங்கால முதல்வர் என்ற கனவோடு, வருங்காலபிரதமர் கனவில் இருந்த ஜெயலலிதாவோடு மறைமுக கூட்டணியில் இருக்கின்றார். தேர்தலில் பார்பனாரான ஜெயலலிதாவுக்கு களமாடுவதுதான் சீமானைன் தமிழ்தேசியத்தின் ஆரம்பநிலை கொள்கையென்றால், அதை கண்ட மொழிக்காரனும் விமர்சிக்கத்தான் செய்வான்.

முதலில், சீமான் தன்னுடைய (நாடார்)சாதி, (கிருஸ்துவ)மத அடையாள சார்புகளை விட்டு முழுமையாக வெளியாகட்டும். அதன்பிறகு கழுத்து நரம்பு தெறிக்க மேடையில் முழங்கட்டும். அண்ணன் பிரபாகரனோடு படம் எடுத்து கொண்டதை தவிர சீமான் சாதித்தது ஒன்றுமில்லை என்பதே எதார்த்தம். இந்த எதார்த்தத்தை புரியாமல் விசிலடிச்சான் குஞ்சுகள் போல இணையத்தில் உளறிக் கொட்டுபவர்கள் இனியாவது திருந்துவார்களென நம்புவோம்.

- இரா.ச.இமலாதித்தன்

12 ஜூன் 2014

ஜம்புதீவு பிரகடன நாள்!

”இதை ஏற்றுக்கொள்ளாதவன் வைத்திருக்கும் மீசை என்பது என்னுடைய அடி மயிருக்குச் சமமானது. இதனை ஏற்றுக்கொள்ளாதவனுடைய பிள்ளைகள் ஐரோப்பிய ஈனப்பிறவிகளுக்கு தன்னுடைய மனைவியைக்கூட்டிக் கொடுத்தவன் பெற்ற பிள்ளைகள் ஆவார்கள். எனவே உடம்பில் ஐரோப்பியனின் இரத்தம் ஓடாத அனைவரும் ஒன்று சேருங்கள்!” யென்று உலகிலேயே முதன்முதலாக ஆங்கிலேயனுக்கு எதிராக போர்பிரகடனம் செய்த வரலாற்று சிறப்புமிக்க நாள் (ஜூன் 12 1801) இன்று. அன்றைய தமிழகத்தில் இருந்த 72 பாளையத்து அரசுகளையும் #வீரசங்கம் என்ற அமைப்பின் மூலமாக ஒன்றிணைத்து, திருச்சி - திருவரங்கத்தில் ஐரோப்பிய ஈனர்களுக்கு எதிராக ஜம்புதீவு பிரகடனத்தை மாமன்னர் மருதுபாண்டியர் வெளியிட்ட வீரம்செறிந்த நினைவேந்தல் நாளில், அன்றைக்கே தமிழ் சிற்றரசர்களை ஒன்றிணைத்து இன்றைய தமிழ்தேசியத்திற்கு வித்திட்ட மாமன்னர் மருதுபாண்டியர்களின் ஆளுமைமிக்க வீரத்தை அனைவரும் போற்றுவோம்!

வாழ்க மருதரசர் புகழ்!

- இரா.ச.இமலாதித்தன்

11 ஜூன் 2014

வைகாசி விசாக திருநாள் வாழ்த்து!

தொல்காப்பியம் உள்பட ஆதிகால தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இரு வழிபாட்டு தெய்வங்கள், மாயோன் - செயோன் மட்டும்தான். (மாயோன் - வேங்கடமலைபெருமாள், சேயோன் - முருகபெருமான்) சேய் என்றால் குழந்தை, குமரன் என்று பொருள். மேலும் சிவப்பு நிறத்திற்கும், செவ்வாய் கிழமைக்கும், சேயோன் என்ற பெயருக்கும் மிகப்பெரும் தொடர்புண்டு. ஏனெனில் இந்த நான்குக்கும் முருகபெருமானுக்கும் சம்பந்தமுண்டு.

சேய் - செவ்வாய் - சிவப்பு - சேயோன்

வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தன்று அவதரித்த முருக பெருமானின் அவதார திருநாளான இன்று, அனைவருக்கும் வைகாசி விசாக திருநாள் நல்வாழ்த்துகள்!

சரவணபவ! அரோகரா! வெற்றிவேல்! வீரவேல்!

10 ஜூன் 2014

கல்யாண கலவரம்!

கல்யாணத்துக்கு முன்னாடியே நிச்சயதார்த்தம் முடிந்தவுடன் மொபைல் போனை மாப்ள வாங்கி கொடுத்து, கல்யாண பொண்ணுகிட்ட பேசுங்க மாப்ளன்னு பொண்ணுவீட்டு காராய்ங்க சொல்லுவாய்ங்க. நம்ம மாப்ளயும் தாலிக்கட்டுறதுக்கு முன்னாடியே எல்லாத்தையும் ஆர்வகோளாறுல நம்ம வருங்காலபொண்டாட்டி தானேன்னு அந்த பொண்ணுக்கிட்ட உளறி வச்சிடுவாய்ங்க. அதோட ரிசல்ட் கல்யாண மேடையிலேயே தெரியும். மாப்ள, பயந்து உட்கார்ந்திருப்பான்; மணப்பொண்ணு கெத்தா உட்கார்ந்திருக்கும். அப்பறம் என்ன? தாலிக்கட்டின அடுத்த நிமிடத்திலிருந்து அந்த பொண்ணுக்கு அடிமை ரெடி ஆய்ட்டான்னு அர்த்தம். என் நண்பர்களின் திருமணத்தில், மாப்பிள்ளை தோழனாக இருந்ததால தெரிஞ்சிக்கிட்ட விசயம் இது மட்டும்தான்!

எம்மோடு இருக்கின்றார் பிரபாகரன்!

அண்ணன் பிரபாகரன் இருக்கிறா? இல்லையா? என்பதை பற்றியெல்லாம் கவலையில்லை. மருதுபாண்டியரோ, நேதாஜியோ, பசும்பொன்தேவரோ இன்றைக்கும் எம்மோடு இருக்கும்போது ஏன் அண்ணன் பிரபாகரன் எம்மோடு இருக்க மாட்டார்? என்றைக்குமே நவீன காலத்து தமிழனின் ஒட்டுமொத்த அடையாளம் அண்ணன் பிரபாகரன் மட்டுமே. ஆதிகால சேவற்கொடிக்கு அடுத்து, இனிவருங்கால தமிழனுக்கு சிவப்பு மஞ்சள் நிற புலிக்கொடி மட்டுமே அங்கீகாரம் கொடுக்கும்.

தமிழ்தேசியத்திற்கு திராவிடம், பார்பனியமென எது இடையூறாக வந்தாலும் அதை அழித்தொழிக்க வேண்டிய கடமை, பள்ளர் - பறையர் - வன்னியர் - கவுண்டர் - தேவர் உள்ளிட்ட தமிழ்சாதிகளுக்கு தான் முழு உரிமை உண்டு. நமக்குள்ளாகவே இருபிரிவாக மோதிக்கொள்ளும் வரை, தமிழ்தேசியமும் மலராது. தமிழும் வளராது. தமிழ் சார்ந்த ஒவ்வொரு அடையாளமும் அழித்தொழிக்கப்படும். சொந்த நாட்டிற்குள்ளாகவே அகதிகளாக்கப்படுவோம். உயிர்பலி சோதனைக்கூடங்களாக தாய்த்தமிழ்நாடு மாற்றியமைக்கப்படும் சாத்தியக்கூறுகள் உருவாகும். எனவே அங்கு ஈழம் மலர, இங்குள்ள நமக்குள் ஈகோ மறையட்டும்.

தமிழர்களின் தாகம்! தமிழீழ தாயகம்!

- இரா.ச.இமலாதித்தன்

09 ஜூன் 2014

நினைவு பரிசு ;-)

09.06.2014 அன்று நடைபெற்ற, கருப்பம்புலம் செல்வம் ( Sns Selvam Naga ) பங்காளியின் திருமணத்தின் போது, நினைவு பரிசாக இதைத்தான் கொடுத்தேன்.