26 ஜனவரி 2016

தமிழ் தேசியவாதிகள் பின்னுள்ள சில குழப்பங்கள்!

நான் தமிழ் தேசியத்தின் மீது தீவிர நம்பிக்கை உள்ளவன். நான் தமிழனென அடையாளப்பட, என் சாதியான அகமுடையார் என்பது தான் முதன்மையாகிறது; ஆனாலும் நான் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் வருவதால் ஓ.பி.சி. என்ற பிரிவாலும் ஹிந்திய அரசியலால் அடையாளப்படுகிறேன். ஆனால், நான் ஒருபோதும் தமிழல்லாத மற்ற மொழி பேசும் ஓ.பி.சி.யினருக்கு ஆதரவாக பொங்குவதில்லை. ஆனால் தமிழ் தேசியம் பேசிக்கொண்டே ஹிந்திய அரசியலால் எஸ்.சி/எஸ்.டி என அடையாளப்படும் தமிழ் சாதிகளான பள்ளர்களும் - பறையர்களும் பல இடங்களில் தமிழ் தேசியத்தை விட்டு விலகி தடம் மாறுவதாக உணர்கிறேன்.

தமிழ் தேசியம் என மூச்சு தம் கட்டி பேசுன பெரும்பாலான ஆட்கள், தெலுங்கு மாணவனின் தற்கொலைக்காக பக்கம் பக்கமாக பல நாட்கள் இங்கே கண்ணீர் வடித்தார்கள். காரணம் "குறிப்பட்ட ஒரு சாதியை சார்ந்தவர் என்பதால் தான், அந்த தெலுங்கு மாணவனுக்காக தமிழ் தேசிய வாதிகளான இவர்கள் பொங்குகிறார்கள்" என மாற்று கருத்துடையோர் அனைவரும் சொன்னார்கள்; அது உண்மையெனவே இப்போது தோன்றுகிறது. ஏனெனில், விழுப்புரத்தில் மூன்று மாணவிகள் தற்கொலை செய்யப்பட்டதை கண்டும் காணாமல் அனைத்து துவாரங்களையும் பொத்திக்கொண்டு வேடிக்கை பார்க்கும் போது தான் தோன்றுகிறது; இங்குள்ள தமிழ் தேசியவாதிகளுக்கு, தன் சுயசாதிப்பற்றுக்காக தமிழ் சாதிகளின் ஒற்றுமையை கடந்தும் ஹிந்திய தேசிய அடையாளத்துடனும் தான் பயணிக்க விரும்புகிறார்கள் என...
தங்களை தலித் என சொல்லக்கூடாது என சொல்லிக்கொண்டே தமிழ் தேசியம் பேசும் தமிழ்சாதியினரின் கொள்கை என்பது ஹிந்திய எஸ்சி/எஸ்டி பாசத்தால் குழம்பி போவதாக உணர்கிறேன். ஒரே சமயத்தில் ஹிந்திய தேசியத்திலும் + தமிழ்தேசியத்திலும் பயணித்து மற்ற தமிழ் சாதிகளை குழப்பாதீர்கள்.

- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக