பழந்தமிழர்
வாழ்வியலில் அகமும் புறமும் ஒருசேர இணைந்தே இருந்திருக்கிறது; அகத்தில்
காதலும், புறத்தில் வீரமும் தான் அங்கே முதன்மைபடுத்த பட்டது என்பதையும்
தமிழ் இலக்கியங்கியங்களின் ஊடாக அறிந்து கொள்ளவும் முடிகிறது. அப்படிப்பட்ட
தமிழ்சமூகம் இன்றைய காதலை மேற்க்கத்திய கலாச்சரத்தோடு பிண்ணிக்கொண்டு
சிதைக்கப்பட்டு வருகிறது என்பதே எதார்த்தம் கலந்த உண்மை. ஆதிகாலம் தொட்டு
தமிழரின் வீரமும் சரி, காதலும் சரி, மற்ற
எந்த கலாச்சாரத்தோடும் ஒப்பிட முடியாத அளவிற்கு உயர்வான ஒன்று.
அப்படிப்பட்ட வீரம் செறிந்த தமிழ் கூட்டத்திற்கு, காதல் எப்போதும் எதிரியாக
இருந்ததில்லை. ஆனால், சில சந்தர்ப்பவாதிகளால் இன்றைய சூழலில் காதல் என்பதே
காமத்தை மட்டுமே குறிக்கோளாக திசைதிருப்பிவிடப்பட்டது என்பது வேதனையான
விசயமே. அதற்கு சினிமா மோகமும் - சாதி அரசியலும் கூட முழுமுதற் காரணமாக
இருக்கலாம்.
அறம் - பொருள் - இன்பம் - வீடுபேறு; இதுதான் பழந்தமிழரின் வாழ்வியல் கோட்பாடு. முழுமையான மனிதனின் படிநிலை என்பதே, தீமைக்கும் அறம் செய்து, நேர்வழியில் பொருள் ஈட்டி, காதல் மணம் கொண்டு, இறைவனைத்தேடி வீடு பேறு அடைவதே ஆகும். அதைத்தான், வள்ளுவனும் அறத்துப்பால் - பொருட்பால் - காமத்துபால் என்று மூன்றையும் கலந்து 1330 குறளில் எளிதாக சொல்லி வைத்தான். ஒவ்வோரு வீரனுக்குள்ளும் காதல் நிச்சயம் உண்டு; அதுபோல, ஒவ்வொரு காதலுக்குள்ளும் வீரம் நிச்சயம் உண்டு. காதல் தவறென்று சொல்ல யாருக்கும் இங்கே உரிமையில்லை. ஆனால், கேடுக்கெட்ட அரசியல்வியாபரிகளின் தவறான வழிகாட்டுதலால், மேன்மை பொருந்திய காதலை கொச்சைப்படுத்தும் இழிபிறவிகளை கண்டிப்பது தவறில்லை.
பெண்களை விட ஆண்கள் தான் அதிகமான ஆர்வத்தோடு காதலர் தினத்தை எதிர்பார்த்து காத்திருப்பார்கள் என்பதுதான் எதார்த்தம். மேலும் பெரும்பான்மையான காதலர்கள் தங்களுடைய காதலிலும், காதலியிடமும், உண்மையாகவே இருக்கின்றனர். ஆனால், பெரும்பான்மையான காதலிகள், தாங்கள் தேர்ந்தெடுக்கும் காதலனிலும், காதலிலும் சுயநலவாதிகளாகத்தான் இருக்கிறார்கள் என்பதே நிதர்சனம். மேலும், காதலின் போது காதலிகள் தங்களுடைய கவலைகளை - துக்கங்களை - சோகங்களை - ஏமாற்றங்களை - இயலாமைகளை - கோபங்களை யென பலதரப்பட்ட மனக்கழிவுகளை கொட்டும் குப்பைத் தொட்டியாகத்தான் காதலனின் இதயத்தை பாவிக்கிறார்கள். எது எப்படியோ, உலகளாவிய அளவில் இன்றைக்கு காதலர் தினத்தை கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகள்!
- இரா.ச.இமலாதித்தன்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக