16 செப்டம்பர் 2012

சுந்தர பாண்டியன் - பட விமர்சனம்


தேவர் சமுதாயத்தை சார்ந்த பதிவு:

படம் ஆரம்பித்த உடனேயே, டைட்டில் போடும் முன்பாகவே, தேவர் சிலையை கொஞ்ச நேரம் க்ளோசப்ல காட்டுறாங்க. பிறகு நேதாஜி போஸ்டர், அதற்கான விளக்கம் யென்ற பிண்ணனி தகவல்கல்ளை குரல் வழியாகவே சொல்லிடுறாங்க. அப்போவே தெரிஞ்சிடுது இது, முக்குலத்தோர் சமுதாய மக்களின் படம் என்பது. தேனி - மதுரை மாவட்ட பகுதியை உள்ளடக்கிய ஊர்களை மையபடுத்தி எடுக்கப்பட்ட படம் இது.

டைட்டில் முடிந்த அடுத்த காட்சியே, சுந்தரபாண்டிய தேவர் யென்ற சீயான் (பாட்டனார்) போட்டோவை காண்பிக்கிறார்கள். அதை வணங்கிய படியே சசிகுமாரின் அப்பா. தத்தாவின் பெயரான சுந்தரபாண்டியன் தான் சசிகுமாருக்கும்.

அடுத்து ரஜினி பாணியை பின்பற்றும் விஜய் - சிம்பு மாதிரி ஒப்பனிங் சாங். சசிகுமார் படம் முழுவதும்  ரஜினி மாதிரியே இமிடேட் செய்து நடித்துள்ளார். ரஜினியின் ரசிகராகவே இவரது கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது.

இடைவேளை வரை, பேருந்தை சுற்றியே படம் நகர்கிறது. கதாநாயகியை, சசிகுமார்  நண்பனும், வேறு ஒருவனும் காதலிக்க பல மாதங்கள் முயற்சி செய்து, சசிகுமாரையே நாயகி காதலிக்கிறாள்.  இடைவேளை வரை, பழைய பள்ளி, கல்லூரி நண்பர்கள் -  சைட் - காதல் யென பேருந்தில் செம கலாட்டா தான்.

சூரியின் டைமிங் காமெடி செம! முதல் பாதியில் சிரிக்காமல் யாருமே இருக்க முடியாதபடி, சசிகுமாரும் - சூரியும் கலக்கலான கலாட்டா பண்ணி இருக்காங்க.

படத்தின் பெரும்பாலான காட்சிகளில், காலண்டர் - சுவர் போட்டோ - சிலை - சாமியறை யென பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் படம் தென்படுவதை காணமுடிகிறது.

நண்பர்கள் வடிவில் கூடவே இருந்து துரோகம் செய்யும் நபர்களின் முகத்திரையை கிழித்து இருக்கிறார் இயக்குனர். க்ளைமேக்ஸ் காட்சியை பத்து நிமிடம் முன்னாடியே முடித்திருந்தால், படம் வேற மாதிரி இருந்திருக்கும். ஆனாலும், துரோகம் செய்த நண்பர்களையும் நல்லவர்களாக்க கூட ஒரு பத்து நிமிடம் எடுத்திருக்கிறார் போல.

வம்சம் படத்துல வர கதாநாயகியின் பாத்திரம் போலவே, சுந்தர பாண்டியன் நாயகியின் பாத்திரமும் வடிவமைக்க பட்டுள்ளது வீரமாக.

"நீ நினச்சத முடிச்சி 'கள்ளச்சி' ன்னு நிருபிச்சிட்ட" ன்னு, நாயகியின் அப்பா சொல்வது போல வசனம், க்ளைமேக்ஸ் காட்சிக்கும் முன்பாக வரும். நான் அனுமானித்த வரை, இந்த சுந்தர பாண்டியன் - முழுக்க முழுக்க தேவர் (நாயகன் - மறவர், நாயகி - கள்ளர்) சமுதாயம் சார்ந்த படம்.

மண்ணின் மைந்தர்களான கள்ளர் - மறவர் - அகமுடையார் யென்ற பெரும்பான்மையான தேவர் சமுதாய மக்களை பற்றி சொல்லாமல், தமிழில் திரைப்படமே எடுக்க முடியாது, என்பதற்கு சுந்தர பாண்டியன் மற்றும் ஓர் உதாரணம்.

# சாதிவெறி யென்ற கமெண்ட், என்னை நோக்கி வரும்ன்னு தெரிந்தே  இந்த ஸ்டேட்ஸ் போடுறேன். :)

- இரா.ச.இமலாதித்தன்

27 ஜூலை 2012

விமர்சனம் என்பது யாதெனில்...

இணையத்தில் சமூக வலைதளங்களில் எல்லா வயதினரும் அங்கம் வகிக்கின்றனர். ஆனாலும், பெரும்பாலனவர்கள் இளைஞர்களே. ஒருவரை விமர்சிக்க இவர்கள் எடுக்கும் ஆயுதம், கார்ட்டூன் போன்ற இவர்களே கணினியின் மென்பொருள் உதவியோடு உருவாக்கும் ஒளிப்படங்களே.

இங்கே விமர்சிக்கபடுவபர்களில் பெரும்பாலும் அரசியல்வாதிகளும், நடிகர்களும் தான். சமீப காலமாக சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்துக் கொண்டவர்கள் பெரும்பாலும், காங்கிரஸ்காரர்களே. தமிழ்நாட்டை பொறுத்தவரை இங்குள்ள அனைத்து அரசியல் தலைவர்களில் யாரும் விதிவிலக்கு அல்ல. பாரபட்சமில்லாமல் அனைவருமே பந்தாடப்பட்டு கொண்டுதான் இருக்கிறார்கள். 

அனைவருமே விமர்சிக்க படுகிறார்கள் என்பது ஒரே ஆறுதலென்றாலும், உடலியலியல் மற்றும் நிறத்தின் அடிப்படையிலான விமர்சனங்கள் அதிகமாகி கொண்டிருக்கின்றன என்பது வருத்தமளிக்கின்றனகுறிப்பாக, நாராயணசுவாமியை உடலியல் தோற்றத்தை வைத்து மிக கேவலமாக விமர்சிக்கும் யாருமே, மன்மதன் அல்ல. கண்ணாடியில் முகத்தை பார்த்து தங்களுக்கு தாங்களாகவே 'இதுக்கு மேலேயுமா அழகு வேணும்?' யென்று முணுமுணுத்துக்கொண்டு, கணினி தொழிநுட்ப உதவியுடன் தங்களை மிக அழகாக செதுக்கி கொள்கிறார்கள். அவர்களைப்போல போலியான அழகை வெளிக்காட்டிக்கொள்ள தெரியாத நாராயணசுவாமி போன்றவர்கள், அவர்களுக்கு விலங்கின் தோற்றமாகத்தான் தெரியும். விஞ்ஞான அறிவியலின் கூற்றுபடி, விமர்சிக்கும் அனைவரும் அதே விலங்கினத்தில் இருந்துதான் பரிணாம வளர்ச்சி அடைந்து இருக்கிறார்கள்  என்பதை மறந்துவிட்டுதான் இதையெல்லாம் செய்கிறார்கள் போல.  

ஈழத்தமிழர்களை கொன்றொழிக்க காராணமாக இருந்த காங்கிரஸ் இயக்கத்தை தமிழகத்தில் இல்லாதொழிக்க வேண்டியது நம் கடமைதான்; ஆனால், தன்னுடைய தலைமைக்கு உண்மையான விசுவாசியாய் இருக்கிற ஒரு சக தமிழனை, மற்றொரு தமிழனே இழிவாக விமர்சிப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த மாதிரியான வண்ணத்தையும், உருவத்தையும் யாரும் பிறப்பதற்கு முன்பாக தீர்மானித்து உயிராய் உருவெடுக்க வில்லை. அது ஒருவகையில் இயற்கையான ஒரு நிகழ்வு. 

உடலியல் ரீதியாக ஒருவரை விமர்சனம் செய்யும் நீங்களும், ஒருநாள் இழமையான/ அழகான உங்களது உடலை இழக்கத்தான் போகிறீர்கள். முதுமையான காலத்தில், நீங்கள் விமர்சித்த அதே விலங்கினத்தின் தோற்றம் உங்கள் மீதும் ஏற்படக்கூடும். 

உங்களுக்கு ஒருவரை பிடிக்காத போது, அதை விமர்சனம் என்ற போர்வைக்குள் மிகவும் கீழ்த்தரமான முறையில் தாக்குவது, உங்களது கீழ்த்தரமான புத்தியையே அது காட்டும். 

சமீப காலமாக, இந்த கணினியின் துணையோடு, குறிப்பிட்ட ஒருசில நடிகர்களை அவர்களின் முகத்தோற்றத்தையும், உடலியல் கூறுகளையும் மிகவும் அருவருக்க தகுந்த வகையில் சித்தரித்து அதை ஒளிப்படமாக இணையத்தின் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு தனது குரூர புத்தியை வெளிக்காட்டி வருகிறார்கள் ரசிகர் என்ற முகமூடியில். பதிலுக்கு, இன்னொரு நடிகரின் ரசிகர் பட்டாளங்களும் அதற்கு சளைத்தவர்கள் இல்லை என்பதை வெளிப்படுத்த, வேறொரு ஒழிப்படத்தை உருவாக்கி தங்களை மேதாவிகளாக காட்டிக்கொள்கிறார்கள். அதற்கு அந்தந்த நடிகர்களின் ரசிகர்களின் குழுமம் அதை ஆதரிப்போது போன்றே தெரிகிறது. குறிப்பாக விஜய், அஜித், சூர்யா தான் இப்போதைக்கு இவர்களின் கையில் சிக்கி சின்னாபின்னமாகி கொண்டிருக்கிறார்கள். 

இது போன்ற கீழ்த்தரமான, முகம் சுழிக்கும் வகையில் செயல்படும் நபர்களை யார் தட்டிக்கேட்பது யென்ற போட்டியில், யாருமே கண்டுகொள்வதில்லை. மாறாக அதை ஆதரிப்பது போல அமைதி காப்பதும் ஒருவகையில் ஆபத்தில்தான் முடிய போகிறது என்பது மட்டுமே நிதர்சனம். ஆனால், அதை யாருமே புரிந்து கொண்டது போல தெரியவில்லை. 'இந்த பூனைக்கு யார் மணி கட்டுவார்கள்?' யென்று நானும் மற்றவர்களை  போலவே அமைதியாக வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டிருகிறேன்.

- இரா.ச.இமலாதித்தன்


12 அக்டோபர் 2011

இமலாதித்தயியல் - 3

¤ ஒரு தவறான புரிதலால் அவசரவசரமாக நீங்கள் எடுக்கும் முடிவானது, நிச்சயமாக மிக மோசமான பின்விளைவுகளையே தருமென்பதால், உண்மை நிலையை அறிந்துகொள்ள சிலகால காத்திருப்பு அவசியமாகிறது!

¤ ஒரு சிலருக்கு ஏக்கத்தை நிறைவேற்றவும், மற்ற பலருக்கு கர்வத்தை அதிகப்படுத்தவும் வைக்கிறது இந்த பாழப்போன அன்பு!

¤ நம்மை விமர்சிப்பவர்களிடம் நம்முடைய சுய விளக்கங்களை தந்து நமது நிலைப்பாட்டை புரியவைக்க வேண்டியதில்லை. மாறாக நமது செயல்பாடுகள் மூலமாக நம்மின் நிலையை புரியவைப்பதோடு, நேரத்தை வீணாக்காமல் அடுத்த இலக்கை நோக்கி நகர்வதே சரியான வழிமுறையாக இருக்கும்! 

¤ கடவுளிடம் வரம் கேட்க, அர்ச்சகரிடம் அவமானப்பட வேண்டிய நிலைதான் மதத்திற்கான சாபக்கேடு!

¤ தன்னைப்பற்றி மேலாக நினைப்பதில் தவறில்லை. பலநேரங்களில் தங்களின் அனுமானமும்/கணக்கீடும் தவறாக போய்விடும் என்பதை மறந்துவிட்டு, ஒருசிலர் மிக உயர்ந்த நிலையில் தங்களை கணக்கிட்டு கொள்கின்றனர்! 


¤ நான் இப்படித்தானென்று நீங்கள் நினைக்கும் வரையிலும், நான் யாரோவாகத்தான் இருக்க வேண்டிருக்கிறது!


 ¤ ஓர் இலக்கை நோக்கிய பயணத்தில், வழியெங்கும் பரவிக்கிடக்கும் இடையூறுகள் எந்த அளவிற்கு கடினமாய் இருக்கிறதோ, அப்போதுதான் இலக்கின் மதிப்பும் உயர்கிறது!

¤ பட்டறிந்தபின்பு வரும் ஞானமெல்லாம், அந்த பட்டறிவு தருவதில்லை!


¤ 'நான்' யாரென்று என்னிடம் கேட்டதும், உருவம்/குணாதிசயம்/பெயர்..., இதுபோல எதுஎதுவோதான் நினைக்கு வருகிறது. "நான்" என்பது யாரென்றே தெரியாமல் போய்விடுகிறது!


 ¤ நீங்கள் எல்லோரையும் எப்படி நினைகிறீர்களோ, அதைப்போலவேதான் உங்களையும் நினைப்பார்கள் என்று கருதுவதுகூட அறியாமையே!


- இரா.ச.இமலாதித்தன்

இமலாதித்தயியல் - 2



► பெண்களிடம் ரகசியம் என்பது என்ன யென்ற கேள்வியை கேட்டால், அதற்கான பதிலையே ரகசியமாக்கி விடுவார்கள்.


► பெண்கள், தான் செய்யும் ஒவ்வொரு தவறையும் மறைக்கவும், ஆண்கள் மறு பேச்சே பேசாமல் இருக்கவும், அப்பாவி போலவே நடிக்க பழகிக் கொள்கின்றனர்.


► தேவை என்பது ஆணுக்கு மட்டும் தான் என்பது மாயையே. உண்மை என்னவெனில், ஆணை விட, பெண்ணுக்கு தான் தேவை அதிகமாக இருக்கிறது.


► ஆண்களுக்கு எதுவுமே தெரியவில்லை என்று நினைப்பது கூட பெண்களின் அறிவுக்கு(?) ஒரு சான்று.
 
► எல்லாம் தெரிந்த ஆணாக இருந்தாலும், தன்னிடம் தெரியாதவன் போலவே இருக்க வேண்டுமென்று, பெண் ஆசைப்படுகிறாள்.


► பட்டினி என்பது உடல்,உயிர்,உறவு மற்றும் உணர்வை சார்ந்தது என்பதை தெளிவாக தெரிந்தவள் பெண்.


► எனக்கு சரியென்று படுகின்ற ஒரு விடயம், உங்களுக்கோ, மற்ற யாருக்கோ தவறாகக்கூட படலாம். அதுபோலவே உங்களுக்கு சரியென்று படுகின்ற ஒரு விடயம் எனக்கோ, மற்ற யாருக்கோ தவறாக படக்கூடும் என்பதே இயல்பு.

► களம் என்பது பொதுவான போது,போட்டி நிச்சயம் இருந்தே ஆக வேண்டும்; காலம் மாறலாம்; அப்போது ஒருவேளை, களமும் மாறலாம்.

► பார்க்க முடியாத எல்லாமும் கடவுளாகத்தான் இருக்க வேண்டும் என்பது மாயையே.

► மனதிற்பட்ட சிலவற்றை சொல்லாமல், சும்மா இருப்பதுதான் சுகமென அறிந்தேன் சிவனே.

► முகங்கள் மழிக்கபட்டால் அழகு சேருமே; இங்கே மரங்கள் அழிக்கபட்டால் அழிவு நேருமே.

  
- இரா.ச.இமலாதித்தன்

இமலாதித்தயியல் - 1

☼ என்னுள் உருவான சில கருத்துகள் உங்களது கருத்துகளோடு ஒத்துபோகாமல் இருக்கலாம். என்ன செய்ய, உங்களுக்கு ஒத்துபோகாது என்பதால் என்னுள்ளான கருத்துகளை சொல்லாமல் இருக்க முடியாதென்கிறது மூளையின் வழியாக மனது...!

☼ நான் நானாகவே இருக்க முயலும்  நேரமெல்லாம் நீ ஏன் நீயாய் இல்லாமல்
என்னை நீயாக்க முற்படுகிறாய்...?

☼ காலம் கைகூடும் வரை காத்திருப்போம்...நமது வலியை அவர்களுக்குள் திணித்துவிட...!
☼ உன்னை புகழும் இதழ்களுக்கு தெரிந்திருக்க "வாய்"ப்பில்லை; 
நீ என்றாவது ஒருநாள் அவைகளுக்கு அடிமை ஆகிவிடு"வாய்" என்பது...!

☼ எழுத்தின் வழியே, தான் சொல்வது எல்லாமே சரியாகத்தான் இருக்கிறதென்று நினைப்பதுவும், மற்றவர்களை விட தனக்கு மட்டுமே எல்லாமே தெரிந்திருக்கிறதென்று நினைத்துக்கொண்டிருப்பதும் கூட மூடத்தனமே...!  

☼ பெண்களின் கவனத்தை தனது பக்கம் திருப்புவதற்காக பெரும்பாலான ஆண்கள், என்னன்னமோ (!@#$%^&*) செய்கிறார்கள். # முடியல
இந்த விசயத்தில் மட்டும் நான் சிறுபான்மையானவனாகவே இருக்க முயல்கிறேன்...!
☼ பல கோடிகளை ஊழல் செய்து கொள்ளை அடித்ததை செய்தியை வெளியிட்டதற்காக, இன்னும் பல கோடிகளை நஷ்ட ஈடாக கேட்பவன் கேடி* தானே...?

☼ ஒரு வெற்றியாளன் பின்னால் பெண்கள் இருப்பார்களா ? இல்லையா ? என்பது தெரியாது; ஆனால், நிச்சயமாக, அவன் பின்னால் தான் நிச்சயம் ஒரு கூட்டம் இருக்க முடியும்,அது ஆண் - பெண் என்ற பாகுபாடின்றி. இன்னும் சொல்லபோனால், தனக்கென்று ஒரு கூட்டத்தை வைத்திருப்பது கூட வெற்றி தான்...!
☼ எல்லோரது பேச்சையும் கேட்பதும், யார் பேச்சையுமே கேட்காமல் இருப்பதும் கூட தோல்விக்கு காரணமாக இருக்கலாம்...!

☼ நீயும் இன்று, மீண்ட என்னை, மீண்டுமிங்கே, விளையாட்டு பொருளாக்கி, விளையாடி பார்க்கிறாயோ இறைவா...?     

☼ மனதின் வலி ஒரு சிலருக்கு, யாருக்காகவோ போடப்படும் தூண்டிலாக தெரியலாம்...! ஆனால் இங்கே அந்த மனதுதான் மீன் என்பது யாருக்கு தெரியும்...?

☼ நான் உன்னை மறந்து விட நீ உதவி செய்யலாம்.ஆனால் உன் நினைவுகளை மறந்து விட யாராலுமே எனக்கு  உதவி செய்ய முடியாதே...! என்ன செய்ய...?

☼ நம்பிக்கை மட்டும் வாழ்க்கை யல்ல...எதை/யாரை/எப்போது நம்புவது என்பதுதான் வாழ்க்கை...!

☼ ஏற்கனவே தீர்மானிக்கப் பட்ட  ஒன்றை திருத்தியமைக்க எல்லோராலும் முடிவதில்லை... அப்படி திருத்தினாலும், தீர்மானிக்க பட்ட அந்தவொரு இறுதி முடிவை யாராலுமே மாற்ற முடிய வில்லை...!  இதுதான் விதியோ...?

☼ ஒவ்வொரு முடிவுக்குள்ளும் ஏதோவொரு ஆரம்பம் இருக்கத்தான் செய்கிறது என்பதை தெரிந்த பின்னும்... என் முடிவு எங்கேயென்று என்னால் முடிவு செய்ய முடியவில்லையே ...! நான் வந்த ஆரம்பத்தை ஆராய்ந்து பார்த்தாலும் அறிந்திட முடியவில்லையே...! வரப்போகிற ஆரம்பத்தையும் கூட கணிக்க முடியவில்லையே என் இறைவா...! ஏன் இறைவா...? ஆரம்பம் எது...? முடிவு எது...? ஆரம்பம் எங்கேயென்று   ஆராயும் நான் அதன் முடிவை அறியும் முன்னரே எனக்கொரு முடிவை கொடுத்துவிடுவாயோ...? இல்லை உன் முடிவை என்னிடம் விரைவிலேயே சொல்லிவிடுவாயோ...? 

☼ சேவை செய்ய கொஞ்சம் பணமும்,நல்ல மனமும் மட்டுமே போதுமானது...! சேவை செய்ய தலைவன்,தொண்டன் யென்ற பாகுபாடு தேவையில்லை.மேலும், உதவி செய்ய பதவி என்பதே தேவை இல்லாத ஒன்று...! அப்பறம் பதவி வந்த பிறகு, உதவி செய்வதை மறந்து தன் பதவியை தக்க வைக்கவே பல பேரு உதவியை நாட வேண்டி வரும்...!

☼ வியப்பான உண்மை என்னவென்றால் எல்லா நட்பும் ஏதோ ஒரு தேவைக்காக உருவாக வில்லை.அப்படி தேவைக்காகவே உருவாவதற்கு நட்பு என்று அர்த்தம் கொள்வதும் சரியில்லை.மாறாக தேவை முடிந்தும் எவ்வித தேவையே இல்லாமல் தொடருவதுதான் நட்பாய் இருக்க முடியும்...!

☼ எட்டப்பன் பலபேரு இருக்கும் வரை...ஈழம் எட்டாக் கனியாகத்தான் இருக்கும்...!

☼ நீ என்றிலிருந்து உனக்கான சுய விளம்பரங்களை உன்னாலும்,உன் நட்பு வட்டங்கள் மூலமாகவும்  தேட ஆரம்பிக்கிறியோ அன்றிலிருந்து உன்(புகழ்,பெருமை, நட்பு) அழிவுக்கான நாளும் தீர்மானிக்கப் படுகிறது என்பதை மட்டும் கொஞ்சம் நினைவில் வைத்துக்கொள்...!

☼ விதியை மதியால் வெல்ல முடியாது. சாமர்த்தியம் இருந்தால் போராடி மட்டுமே பார்க்க முடியும்.வெல்வதற்கு விதி என்பது ஒரு போட்டி அல்ல.அது ஏற்கனவே எனக்காகவே பிரத்யோகமாக அமைக்கப்பட்ட ஒருவித பயணம்.ஒருசில பகுதியில் கரடு முரடாகவும்,வேறு சில பகுதியில் ரம்மியமாகவும் இருந்தி ருக்கிறது.பயணத்தின் போது இடைஞ்சலான சமயங்களில் மாற்று பாதையை தேர்ந்தெடுக்க மட்டுமே இந்த மதி உதவுகிறது. ஆனால், பயணத்தையோ அந்த பயணத்தின் முடிவையோ இந்த மதியினால் முற்று முழுதாக மாற்ற முடியவில்லை என்பதை நான் பல முறை உணர்ந் திருக்கிறேன். எல்லாம் விதி வசம்...!

☼ விதி என்றவொன்று என்னோடு எப்படி யெல்லாம் விளையாடி விட்டு போகிறது ...! இறைவா...!  நீயும் இதை வேடிக்கை பார்த்து கொண்டுதான் இருக்கிறாயா...? உன்னையே விதி ஆட்டிவிக்கும் போது மிக சாமானியனான என்னால் மட்டும் எப்படி விதியோடு விளையாடி வென்று விட முடியும் என்று எண்ணி விட்டாயோ...?

☼ இறைவா...! எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் வாழ்வதே இன்பம் என்பதை நான் அறிந்திருந்தாலும் ... எதையுமே எதிர்பார்க்காமல் வாழ முடியாது என்பதையும் நீயெனக்கு அறிய வைத்திருக்கிறாயே ...!  :(  அப்படியெனில் எப்போதும் துன்பத்தோடு தான் வாழவேண்டுமா...?ஏன் இறைவா...?

☼ அன்றைய காலத்து வரலாற்று பெருமை தேவையா இல்லையா என்பதை விவாதம் செய்வதை விட, நீ என்ன செய்து நாளைய சந்ததியினருக்கு இன்றைய காலக்கட்டத்தை வரலாற்று பெருமையாக மாற்றப் போகிறாய் யென்று தினமும் என்னையே நான் கேள்விக்கு உள்ளாக்குகிறேன்...!

☼ இங்கே பலருக்கு வீரம் என்பது அடி உதை மட்டும் தான். அதுமட்டுமே அவர்களது எண்ணத்தில் ஊறி போய் இருக்கிறது.ஒன்றின் அழிவு மட்டுமே இன்னொன்றின் வீரம் என்பது தான் அவர்களின் வரையறை.மேலும், ஒன்று அழியும் நிலையில் மற்றொன்று உருவெடுக்கும் என்பதை அறிய மறந்து விடுகிறார்கள்...!

☼ வீரத்தையோ, வீரம் சார்ந்த அடையாளத்தையோ மேலும் வீரத்தை மையப்படுத்திய வேறு நிகழ்வையோ தனிப்பட்ட எந்தவொரு இனக்குழுவும் குத்தகைக்கு எடுத்துக்கொள்ள முடியாது.வீரம் எல்லோருக்கும் பொதுவான ஒரு குணாதிசயம்.வீரம் என்பது ஒரு பொதுசொத்து;அதை யாரும் ஆக்கிரமிப்பு செய்ய முடியாது...!


- இரா.ச.இமலாதித்தன்

16 ஆகஸ்ட் 2011

மனம் குரங்கு! மதம் சேவல்! நான் இனி...?



என்னன்னமோ சிந்தனைகள் மனதுக்கும்,மூளைக்கும் இடையே பயணித்துக்கொண்டிருக்கும் இந்த மாலைநேர வேளையில் எதையாவது ஒன்றை எழுதி பதிவேற்றி விடவேண்டுமென்ற எண்ணத்தோடு எழுத ஆரம்பிக்கின்றேன்.ஆனாலும் இன்னும் என்னவென்பது முடிவு செய்யப்படவில்லை.

காலம் என்ற இயந்திர குதிரை எவ்வளவு வேகமாக நம்மை கடந்து சென்றுக்கொண்டிருக்கிறது என்பதை யோசிக்கும் வினாடிகளில் கூட அது பல மைல்களுக்கு அப்பால் கடந்து மறைகிறது.இதையேன் இப்போது சொல்கிறேனென்றால், என்னைப்பற்றிய ஒரு பின்னோக்கிய பயணத்தைதான் இங்கே தொடரப்போகிறேன் என்பதாலேயே.

நாகப்பட்டினம் சோழர்களுக்கு மட்டுமில்லாமல் சாமானியனான எனக்கும்கூட பட்டினமாகவே திகழ்ந்து வருகிறது.வேளாங்கண்ணியில் கிருத்துவமும், நாகூரில் இசுலாமும் இங்கே அரவணைக்க படுவதோடு, ஒரு மாதம் மேலாக திருவிழாக் காணும் நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் போல, பல கோயில்களோடு இந்துக்களுக்கும் உறைவிடமாய் இருந்து வருகிறது. இது நான் பிறந்த ஊரு என்பதால் மட்டுமே தூக்கி பிடிக்கவேண்டிய அவசியமில்லை.ஆனாலும் மும்மதத்தையும் முழுதாய் ஏற்கும் நாகப்பட்டினத்திலே பிறந்தேனென்று சொல்லிக் கொள்வதுகூட, என்னை சார்ந்த ஓர் உள்ளார்ந்த செய்திக்கான ஒரு முடிச்சே என்பதையும் அடுத்தடுத்த வரிகளில் நீங்களே புரிந்துகொள்ள நேரிடும்.

நாகை அரசு மருத்துவமனையில் நான் பிறப்பெடுத்த அந்நாளின், என் தாயின் கட்டிலுக்கு இருபுறமும் குழந்தை பெற்றெடுத்தது இசுலாம்,கிருத்துவம் மதத்தை சார்ந்த நாகைப்புறவாசிகளே.

நான் பிறந்த தேதியில் அதே மருத்துவமனையில் பத்து பதினைந்து பேரு பிறந்திருக்கலாம்.ஆனாலும் இன்றைக்கும் எனக்கு நினைவுக்கு வருவது, இந்த இரண்டு குடும்பங்களை தான். இங்கே குடும்பம் என்பதை குறிப்பிடுவதை விட, இரண்டு மதத்தினர் யென்று சொல்வதுதான் எனக்கு சரியாக இருக்கும்.

என்னுடைய எண்ணவோட்டங்களால் நான் ஒரு மதவாதியாய் இருப்பது போல உங்களது பார்வைக்கு தெரியக்கூடும். ஆனால் அது அப்படியானதல்ல. பிறர் மதங்களை மதிக்கவும், தன் மதத்தை நேசிக்கவும் பழகிக்கொண்டிருக்கிறேன்.இது சமீபத்தில் வந்த சிந்தனையாகக்கூட இருக்கலாம்; ஆனாலும் முன்கூட்டியே வந்திருந்தால், ஒருசில நிகழ்வுகளில் வெகுசிலரை எழுத்துகளால் காயப்படுதிருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது.பட்டறிந்த பின்பு வரும் ஞானமெல்லாம், இந்த பட்டறிவு தருவதில்லை.

அரட்டை,வம்பு,விடாப்பிடியான பேச்சு என்றெல்லாம் இன்றைய பொழுதுகளில், நான் தீவிரமாய் இயங்கினாலும்  நான் பிறந்த அரைமணி நேரம் வரையிலும் நான் எந்த வித அழுகையோ,முனகல்கலையோ, கத்தலுமின்றி அப்படியே கிடந்தேனாம். அப்போது அழுது துடித்த என் பாட்டியும், அம்மாவும் இருக்கின்ற கடவுளுக்கெல்லாம் விண்ணப்பம் வைத்துக்கொண்டிருந்த வேளையில், அருகிலுள்ள இரு மதத்தினரும் ஏசுவையும், அல்லாஹ் வையும்  வேண்டி சேவல் வேண்டிவிட சொன்னார்களாம்.அதுபோலவே, நாகை நெல்லுக்கடை மாரியம்மன் கோயில், நாகூர் தர்கா, வேளாங்கண்ணி சர்ச்சென்று மூன்று ஆன்மீகத்தலங்களுக்கும் வேண்டுதலை வைக்க, அரைமணி நேரத்திற்கு பின்பாக நான் அழத்தொடங்கினேனாம்.நல்லோரை வாழ வைக்கவும், தீயோரை வீழ வைக்கவும் மட்டுமே தேவைப்பட்ட இறைவன் என்னை அழ வைக்கவும் கூட தேவைப்பட்டிருகிறான்.அந்த இறைவன் அருளால் நான் சந்தோசமாகவே இருக்கிறேன் இப்போதும் கூட.

மதம் என்ற வழியில் பயணிக்கும்போது, பாதை மாறுமே  தவிர  இறைவனென்ற ஊர் ஒன்றாகவே இருக்கும்.

05 ஜூலை 2011

இமலாதித்தவியல்





















► பெண்களிடம் ரகசியம் என்பது என்ன யென்ற கேள்வியை கேட்டால், அதற்கான பதிலையே ரகசியமாக்கி விடுவார்கள்.

► பெண்கள், தான் செய்யும் ஒவ்வொரு தவறையும் மறைக்கவும், ஆண்கள் மறு பேச்சே பேசாமல் இருக்கவும், அப்பாவி போலவே நடிக்க பழகிக் கொள்கின்றனர்.

► தேவை என்பது ஆணுக்கு மட்டும் தான் என்பது மாயையே. உண்மை என்னவெனில், ஆணை விட, பெண்ணுக்கு தான் தேவை அதிகமாக இருக்கிறது.

► ஆண்களுக்கு எதுவுமே தெரியவில்லை என்று நினைப்பது கூட பெண்களின் அறிவுக்கு(?) ஒரு சான்று.
 
► எல்லாம் தெரிந்த ஆணாக இருந்தாலும், தன்னிடம் தெரியாதவன் போலவே இருக்க வேண்டுமென்று, பெண் ஆசைப்படுகிறாள்.

► பட்டினி என்பது உடல்,உயிர்,உறவு மற்றும் உணர்வை சார்ந்தது என்பதை தெளிவாக தெரிந்தவள் பெண்.

► எனக்கு சரியென்று படுகின்ற ஒரு விடயம், உங்களுக்கோ, மற்ற யாருக்கோ தவறாகக்கூட படலாம். அதுபோலவே உங்களுக்கு சரியென்று படுகின்ற ஒரு விடயம் எனக்கோ, மற்ற யாருக்கோ தவறாக படக்கூடும் என்பதே இயல்பு.

► களம் என்பது பொதுவான போது,போட்டி நிச்சயம் இருந்தே ஆக வேண்டும்; காலம் மாறலாம்; அப்போது ஒருவேளை, களமும் மாறலாம்.

► பார்க்க முடியாத எல்லாமும் கடவுளாகத்தான் இருக்க வேண்டும் என்பது மாயையே.

► மனதிற்பட்ட சிலவற்றை சொல்லாமல், சும்மா இருப்பதுதான் சுகமென அறிந்தேன் சிவனே.

► முகங்கள் மழிக்கபட்டால் அழகு சேருமே; இங்கே மரங்கள் அழிக்கபட்டால் அழிவு நேருமே.


 - இரா.ச.இமலாதித்தன்