10 செப்டம்பர் 2015
09 செப்டம்பர் 2015
குடமுழுக்கு’கள்!
டெல்டா பகுதியில், திருமுருகன் வீற்றிருக்கும் கும்பகோணம் - சுவாமிமலை
கோவில், பொங்குசனீஸ்வரர் வீற்றிருக்கும் திருத்துறைப்பூண்டி-
திருக்கொள்ளிக்காடு கோவில் உள்ளிட்ட மிக அற்புதமான அருள்நிறைந்த
பெரும்பாலான கோவில்களுக்கு இன்று குடமுழுக்கு. அதிலும் குறிப்பாக, 1780
முதல் 1801 வரை சிவகங்கை சமஸ்தானத்தை ஆண்ட மாமன்னர் மருதுபாண்டியர்களால்,
மதுரை மீனாட்சியம்மன் கோவில் கோபுரம் தெரியுமளவுக்கு காளையார்கோவிலில்
கோபுரம் அமைத்த சொர்ணகாளீஸ்வரர் ஆலயத்திலும் இன்று குடமுழுக்கு!
அகம்படி குல பாம்பன் சுவாமிகள்!
அகம்படியர் குலத்தில் தோன்றிய தீவிர திருமுருக பக்தரான சித்தர் பாம்பன் சுவாமிகளின் ஜீவசமாதி திருவான்மியூரில் அமைந்துள்ளது. சண்முக கவசம், பகை கடிதல், இரத பந்தம், பஞ்சாமிர்த வண்ணம், குமார ஸ்தவம், சண்முக நாமாவளி என பல ஆன்மீக எந்திர சூத்திரங்களை உருவாக்கியவர். ஒவ்வொரு திருமுருகன் ஆலயத்திலும், பாம்பன் சுவாமிகள் அருளிய குமாரஸ்தவம் எந்திரம் கோவில் உட்புற சுவரில் இருக்கும்.
08 செப்டம்பர் 2015
ஆண்ட பரம்பரையென்ற போலியான புகழ் தேவையில்லை!
டெல்டாவில் எந்தவொரு சாதி அரசியலும் தலை தூக்க வாய்ப்பே இல்லை என்பதற்கு வடசேரி நிகழ்வும் ஓர் உதாரணம். அது கள்ளரோ, அகமுடையரோ, பள்ளரோ, பறையரோ, வன்னியரோ, முத்தரையரோ, வெள்ளாளரோ யாருமிங்கே சாதியரசியலில் களம் கண்டு இங்கு வெல்லவே முடியாது. துயரம் என்னவெனில், வடசேரியை சேர்ந்த அகமுடையார் இளைஞர்கள் மீது, தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது என்பதுதான்.
விவேகமில்லாத வீரமும், வீரமில்லாத விவேகமும் எதற்கும் உதவாது. என்னைக்கோ ஒருத்தன் அவனது குடும்பம் மட்டும் மன்னராக இருந்ததால் அவன் என் சாதியென்ற வரலாற்று சான்றுகளை வைத்து கொண்டு, அரசாண்ட பரம்பரை என்ற பீற்றல்களால் இனியொரு மயிரும் ஆகப்போவதில்லை.
அன்றைய காலக்கட்டத்தில், அரசாட்சியை காப்பாற்றி கொள்ள சாதிவேறுபாடின்றி
அனைவரோடும் மண உறவு கொண்டனர். அதனால் இங்கே கல்ப்பில்லாத ஒரே சாதியை
சார்ந்த மன்னர் வழிவந்த சுத்த இரத்தமுள்ள ஆண்ட சாதி எதுவுமில்லை.
முடிந்தால் அறிவால் இந்த அரசை ஆளுங்கள், அரச பதவியோடு. இந்த வருட
இறுதிக்குள் தமிழகரசு தேர்வாணையத்தின் மூன்று டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகள்
நடைபெறவுள்ளது. தேர்வில் வெற்றி பெற்று, அனைவரும் அரச பதவியை வகிக்க
விவசாயி மகனாக எம் வாழ்த்துகள்!
- இரா.ச.இமலாதித்தன்
- இரா.ச.இமலாதித்தன்
05 செப்டம்பர் 2015
இனிய ஆசிரியர்தின வாழ்த்துகள்!
சம்பளம் மட்டும் குறிக்கோள் இன்றி, சேவை மனப்பான்மையோடு, மாணவர்களை
யெல்லாம் தன் குழந்தையெனவே பாவித்து, ஏட்டுக்கல்வியை மட்டுமில்லாமல்
உலகறிவையும், ஒழுக்கத்தையும் கற்றுக்கொடுக்கும் நேர்மையாளர்களுக்கு இனிய
ஆசிரியர்தின வாழ்த்துகள்!
- இரா.ச.இமலாதித்தன்.
- இரா.ச.இமலாதித்தன்.
வ.உ.சி. என்ற வெள்ளாளர்!
தமிழார்வமிக்க வழக்குரைஞராக இருந்தும் ஆங்கிலேயர்களிடம் அடிமைப்பட்டு
கிடந்த தன் தாய்நாட்டுக்காக பலரிடம் பணம் திரட்டி சுதேசி கப்பலை ஓட்டி,
ஆங்கில வணிகத்திற்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்ததால் சிறை தண்டனை பெற்றும்
கூட, வாழ்நாளில் கடைசிகாலத்தில் வறுமையால் அவதிப்படும் போது, தோள்கொடுக்க
யாருமில்லை.
இப்போது கூட அவரது பேரன் குடும்பம் பொருளாதார ரீ்தியாக கஷ்டப்படும் கூட யாரும் உதவிட முன்வரவில்லை. சமீபத்தில் தான் அரசாங்கம் கூட பொருளாதார உதவியை செய்தது. ஆனால் வ.உ.சி என்ற பெயரை பயன்படுத்தி பேரவை, இயக்கம் என புற்றீசல் போல இன்று பல வெள்ளாளர் பிள்ளைமார் சாதி சங்கங்கள் உருவாகி விட்டன.
இப்போது கூட அவரது பேரன் குடும்பம் பொருளாதார ரீ்தியாக கஷ்டப்படும் கூட யாரும் உதவிட முன்வரவில்லை. சமீபத்தில் தான் அரசாங்கம் கூட பொருளாதார உதவியை செய்தது. ஆனால் வ.உ.சி என்ற பெயரை பயன்படுத்தி பேரவை, இயக்கம் என புற்றீசல் போல இன்று பல வெள்ளாளர் பிள்ளைமார் சாதி சங்கங்கள் உருவாகி விட்டன.
எங்க நாகப்பட்டினத்தில் கூட இன்று காலை 9 மணிக்கு பேருந்து நிலையம் அருகே
பெரிய பதாகையுடன் கூடிய வ.உ.சி படத்திற்கு, அனைத்து வெள்ளாளார் பிள்ளைமார்
சங்கத்தினர் மாலை அணிவித்தனர். தங்கத்தாலும் ஆகாது, இது போன்ற இலக்கில்லா
சங்கத்தாலும் ஒன்னும் ஆகாது என்பது மட்டும் நன்றாகவே புரிகிறது. தேசிய
தலைவரையெல்லாம் சாதி தலைவராக்கி பதவி சுகம் அனுபவிக்கும் சுயநலவாதிகள்
நிறைந்த உலகில் வேற எதையும் எதிர்பார்க்க முடியாது!
- இரா.ச.இமலாதித்தன்
- இரா.ச.இமலாதித்தன்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)








