20 மே 2015

மே 20 - சமுதாய சீர்திருத்த நாள்



இன்றைய தலித் இயக்கஙகளுக்கெல்லாம் முன்னோடியாகவும், நூற்றாண்டுகளாக வழக்கில் இல்லாமல் போயிருந்த திருக்குறளை இன்றைய அச்சு வடிவ பிரதியாக வர காரணமாகவும் இருந்து, தன் வாழ்நாளில் நாற்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதிய திரு.அயோத்தி தாச பண்டிதர் பிறந்தாளான மே 20ம் தேதியில் தான், காஞ்சி பெரியவா என அழைக்கப்படும் ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதியும் பிறந்திருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.

1845ம் ஆண்டில் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் காத்தவராயனாக பிறந்து, 19ம் நூற்றாண்டில் தலித் மக்களின் முன்னேற்றத்திற்கான அரசியல், ஹிந்து சமயத்தில் புரையோடிக்கிடந்த வர்ண சாயங்களை கடந்த சமய சீர்திருத்தம், சித்த மருத்துவம், சமூக சேவையுடன் கூடிய தமிழறிஞரென, தமிழ் மற்றும் தமிழர் சார்ந்த பலதுறைகளில் தொண்டாற்றினார் அயோத்தி தாசர்.

அதை போலவே,1894ம் ஆண்டில் விழுப்புரத்தில் சுவாமிநாதனாக பிறந்து ஹிந்து மதத்திலுள்ள ஏற்ற தாழ்வுகளை அகற்றி, சமயத்திற்கு புதிய வடிவம் தந்து காஞ்சி பெரியவா எனவும் அழைக்கப்பட்டார்.

இந்த இருவரின் பிறப்பும் போற்றதலுக்குரியது என்பதை அவர்களின் செயல்பாடுகளே நமக்கு பல கதைகள் சொல்லி புரிய வைக்கின்றன. ஒருவர் தாழ்த்தப்பட்ட சமூகமாகவும், இன்னொருவர் உயர்வகுப்பு சமூகமாகவும் இருந்த போதிலும் முற்போக்கான சமூக சீர்திருத்தவாதிகளாகவே தங்களை வெளிப்படுத்தியுள்ளனர் என்பது அவர்களின் வரலாறு நமக்கு சொல்லும் பாடம். அப்படிப்பட்ட மாபெரும் மனிதர்களான இருவரின் பிறந்தநாளும் போற்றுப்பட வேண்டிய நாளே!

மே 20 - சமுதாய சீர்திருத்த நாள்

- இரா.ச.இமலாதித்தன்

18 மே 2015

உலகம் சுற்றும் வாலிபன்




 ஹலோ! நரேந்திரமோடியா? எப்போ சார் இந்தியா வருவீங்க?
#ModiInSouthKorea




 ஜஸ்ட் மிஸ் ஆகிடுது....





தில்லானா மோகனாம்பாள் - ரீமேக்!

11 மே 2015

தீர்ப்புக்கு பின்னால்...

இந்த தீர்ப்புக்கு பின்னால் தமிழக சட்டமன்ற கூட்டணியும், அதன் தொடர்ச்சியாக குறைந்த பட்சம் 20 எம்.எல்.ஏ.க்களும் பா.ஜ.க.வுக்கு கிடைக்கலாம். மக்களின் முதல்வர் என்ற கேவலமானதொரு அடைமொழியை இனியாவது விட்டொழிவார்கள் என நம்பலாம். மக்களின் வரி பணத்தால் கொண்டு வரப்பட்டு முடக்கப்பட்ட பல திட்டங்கள் இனி செயல் பட தொடங்கலாம். நட்டத்தில் இயங்கும் அம்மா உணவகங்களின் புதிய கிளைகள் இனி திறக்கப்படலாம். முக்கியமாக, அ.தி.மு.க.வின் அடிமட்ட தொண்டன் சந்தோசப்படலாம். ஆனால், உண்மையில் அரசு பதவியில் லஞ்சம் வாங்கி கொள்ளையடித்த அமைச்சர்கள் சார்ந்த கூட்டமெல்லாம், இந்த தீர்ப்புக்கு பின்னால் இனி பதவி மாற்றம் வருமேயென கதி கலங்கி நிற்கலாம். சாமானியனுக்கு ஒரு நீதி, சாக்கடை அரசியல்வாதிகளுக்கு ஒரு நீதியென பாகுபாடு பார்க்கும் இந்த இழிநிலை இனியாவது மாற்றம் பெற இளைஞர்கள் தான் முடிவெடுக்க வேண்டும். அரசியலை அவர்களே கைப்பற்ற வேண்டும். இந்த தீர்ப்பு நிச்சயமாக நேர்மையான தீர்ப்பு இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்திருந்தும் இன்னும் மெளனியாய் வேடிக்கை பார்ப்பது தான் கேவலம். அது தான் எல்லாருக்கும் பழகி போய்விட்டது. வசதியாகவும் போய் விட்டது.

- இரா.ச.இமலாதித்தன்

07 மே 2015

பாஸ் ஆய்டலாம் பாஸ்!

முதல் மார்க் வாங்கினவங்க மட்டும் தான் வாழ்க்கையில ஜெயிச்சிருக்காங்க என்பது போன்ற விளம்பரங்கள் இன்னும் ஓரிரு மாதங்கள் தொடர்ச்சியாக கல்வி நிறுவனங்களால் வந்து கொண்டிருக்கும். அதையெல்லாம் கவலைப்படாம, புடிச்சதையோ, கிடைச்சதையோ படிச்சாலே வாழ்க்கையில ஜெயிக்கலாம். ஆனால், இங்கே வெற்றிங்கிறது ஊருல உள்ள எல்லாரையும் தோற்கடிப்பது தான் என்பது போன்ற மாயை சூழ்ந்திருக்கு. 2002ல என் கூட ப்ளஸ்டூ படிச்சு ஸ்கூல்ல முதல் மார்க் வாங்கின பொண்ணுக்கு இன்னைக்கு ரெண்டு பொண்ணுங்க இருக்கு. அவ்ளோ தான். மாநில அளவில் முதல் மார்க் வருசா வருசம் பல பேரு வாங்குறாங்க. இதுவரைக்கும் அவங்க யாரும் பெருசா வாழ்க்கையை புரட்டி போடல. ஆர்வ கோளறுல மீடியாவுக்கு பேட்டிக்கொடுக்கிறப்போ, கலெக்டராகி-டாக்டராகி சேவை செய்வேன்’னு சொல்றதெல்லாம் சுத்த பொய். கடைசியில எல்லாம் காசு பணம் சம்பாரிக்க தான் பார்ப்பாய்ங்க.

ஃபெயில் ஆயிடுவோம்ன்னு நினைச்சு, எதிர்பார்க்காம பார்டர்ல பாஸ் ஆன அனைவருக்கும் என் வாழ்த்துகள்!


-o-o-o-o-o-o-o-o-


ஆன்மீகத்துக்கும் ஆண்டவனுக்கும் சம்பந்தமே இல்லை. ஆன்மீகத்தில் இருப்பவனெல்லாம் ஆண்டவனோடு ஐக்கியமாகிவிடுவதில்லை. ஆண்டவனை அடைந்தவரோல்லாம் அப்படியே ஆன்மீகமாதி அல்ல. அதில் பெரும்பான்மையானோர் சுயநலவாதியே. இன்னொரு பக்கம் ஆண்டவனை பற்றிய விழிப்பே இல்லாதோரெல்லாம் அயோக்கியனும் இல்லை. பகுத்தறிவாதியும் இல்லை. ஆன்மீக நாட்டமே இல்லாமல் ஆண்டவனை அடைந்தோர் இங்கே அனேகம் உண்டு. ஆண்டவன் எப்போதும் விளம்பரபடுத்தி, அழைப்பிதழ் கொடுத்து யாரிடமும் அடையாளப்படுத்தி கொள்வதில்லை. சக உயிர்களை தன் உயிரென நினைக்கும் அனைவருமே ஆண்டவனுக்கு அருகே தான் பயணிக்கிறார்கள். இங்கே மந்திர தந்திர உடல் வருத்தி ஏதுமில்லை.

- ஸ்ரீலஸ்ரீ பரமஹம்ச இமலாதித்தனந்தா

29 ஏப்ரல் 2015

அரசு வேலை அவ்வளவு எளிதா?

கடந்த ஒரு சில நாட்களாக தமிழக கல்வித்துறைக்கு சம்பந்தப்பட்ட அரசு பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பதவிக்காக மாவட்டம் தோறும் 10வது படிச்சிருக்க பெரும்பாலானோர் முயற்சி செய்து கொண்டிருக்கின்றார்கள். குறிப்பிடப்பட்ட கல்லூரிகளுக்கு சென்று விண்ணப்பம் வாங்கி, சான்றிதழையெல்லாம் காட்டிவிட்டு ஆன்லைனில் விண்ணப்பித்து வருகின்றனர். முதலில் ஸ்கிரின் டெஸ்ட் அடுத்து நேர்காணல். எழுத்து தேர்வில் 5:1 என்ற விகிதச்சாரத்தில் ஆட்களை எடுக்க போவதாக அறிவிப்பு வந்துள்ளது. ஆனால், நிலைமை என்னவென்றால் இதெல்லாம் வெறும் கண் துடைப்பு தான் என்பதும் இங்குள்ள பெரும்பாலானோருக்கும் தெரிந்திருக்கிறது. இது தேர்தல் நெருங்கும் வேளையில் ஆளுங்கட்சிக்கான வசூல் வேட்டைக்கான ஒரு யுக்தி என்பது பலருக்கும் தெரிந்து பின்பும், ஓர் அற்ப மகிழ்ச்சிக்காகவும், குருட்டு அதிர்ஷ்டத்தை நம்பியும் சென்னையில் பணிபுரிவர்களெல்லாம் விடுப்பு எடுத்துக்கொண்டு அப்ளை செய்து வருகின்றனர்.

ஒரு பதவிக்கு இத்தனை ரூபாய் பணம் என்பதை முன் கூட்டியே நிர்ணயித்து, அதை ஒன்றியம், நகரம், ஊராட்சி, மாவட்டமென பல நிலைகளில் ஆட்களை நியமித்து வசூலித்து பதவியை கொடுப்பது தான் அரசாங்கமென்றால், அது மக்களுக்கு எதற்கு? ஏழை ஏழையாக இருப்பதை பற்றி அவன் கவலை கொள்வதில்லை. பணக்காரன் இன்னும் பணக்காரனாக இருப்பதற்காக கவலை படாமல் பல வழிகளில் தன் ஆளுமையை பயன்படுத்தி கொள்கிறான். ஆனால் நடுத்துர வர்க்கமோ நாளுக்கு நாள், அந்த பக்கமும் போக முடியாமல், இந்த பக்கமும் போக முடியாமல் நசுக்கப்பட்டு வருகின்றது.

மாவட்ட அளவில் பெரிய அரசாங்க பதவியில் இருக்கும் நபரே, தன் மகனுக்காக 6 லட்சத்தை, (மாவட்டம் வாரியாக நியமிக்கப்பட்டுள்ள அந்த நபரான) யாரிடம் கொடுக்க வேண்டுமோ அவரிடம் கொடுத்து வைத்து காத்திருக்கிறார். எனக்கே இவ்வளவு சிரமம் இருக்கு. நீங்கயெல்லாம் எதுக்கு தேவையில்லாமல் ரிஸ்க் எடுக்குறீங்க?ன்னு கேட்கிறார். இது அனைவருக்கும் தெரிந்தும் கூட தட்டிகேட்க வக்கில்லாமல், வேடிக்கை பார்ப்பது தான் பல சாமானியர்களுக்கு சாலச்சிறந்தது. இப்படி லட்சக்கணக்கில் பணத்தை கொடுத்து அரசு வேலையில் சேரும் ஒருவன், எப்படி சேவை மனப்பான்மையில் அரசுக்கு உண்மையாக பணியாற்றுவான்? கொடுத்த பணத்தை எவ்வகையில் சம்பாரிக்கலாமென்று தானே சிந்திப்பான். இது தான் இன்றைய அரசியலின் வளர்ச்சி. இந்த வளர்ச்சி தான் ஆண்ட - ஆளும் - ஆளப்போகின்ற அரசுக்கு பக்க துணை.

- இரா.ச.இமலாதித்தன்