09 மார்ச் 2015

குற்ற பின்னணிக்கு பின்னால்

குற்ற பின்னணி இருப்பதாக கூறி அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் அமைச்சர் / மாவட்ட செயலாளர் உள்ளிட்ட பதவிகளை விட்டு நீக்கிய அ.இ.அ.தி.மு.க தலைமையின் நேர்மையை பாராட்டும் அதே நேரத்தில், சொத்து குவிப்பு வழக்குகளில் குற்ற பின்னணியிலுள்ள ஜெயலலிதாவை கட்சியை விட்டு நீக்கி தனது நேர்மையை தக்க வைக்க அ.இ.அ.தி.மு.க விற்கு திராணி இருக்கிறதா? என்று யாராவது கேட்டால், இல்லைன்னு தான் சொல்ல வேண்டிருக்கு. இதுலருந்து நாம கத்துக்க வேண்டிய ஒரு விசயம் என்னன்னா, தலைவனாக இருக்கிறதுக்கான தலைமைத்துவ பண்பை வளர்த்துக்கணுங்கிறது தான். அப்போதான் நாம செய்ற தப்ப கூட சரின்னு மத்தவங்களும் நம்புவாங்க.

08 மார்ச் 2015

மகளிர் தினம்!

மகளிர் தினமென்று தனியாக வருடத்திற்கு ஒரு நாளை ஒதுக்க வேண்டிய அவசியமே இங்கு தேவையில்லை. ஏற்கனவே மண்ணிலிருந்து ஆறு தொடங்கி நாடு முதல் மொழி வரைக்கும் பெண்ணாகவே பார்த்து பழக்கப்பட்ட சமூகம் இது. அதனால் பெண்களை தனிமைப்படுத்தி தனித்துவமாய் அடையாளப்படுத்த வேண்டிய அவசியமே தேவையில்லை. மார்ச் 7 முதல் மார்ச் 9 வரை தற்காலிக பெண்ணியவாதிகளாக மாறப்போகும் அனைத்து ஆண்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். அதற்கு முன்பாக, வீட்டுக்குள் பெண்ணிடம் அடங்கி அடிமைப்பட்டு கிடப்பதிலிருந்து வெளியே வர முயற்சி செய்யவும் வாழ்த்துகள்!

07 மார்ச் 2015

மோக்கா மோக்கா!

223 ரன் கூட அடிக்க முடியாம 34 ஓவர்லேயே ஆல் அவுட் ஆகுறவய்ங்களுக்கு ’மோக்கா மோக்கா’ன்னு பெருசா பில்டப் கொடுத்தாய்ங்களே, வழக்கம் போல இந்த வேர்ல்ட் கப்லயும் கோட்டை விட்டுடுவாய்ங்களோ... காலிறுதி வாய்ப்பை தக்க வைத்துள்ள ஆசிய/அண்டை நாடான பாகிஸ்தானுக்கு வாழ்த்துகள்!

இமலாதித்தவியல்!

”உங்களை யாரும் அவமானப்படுத்திட கூடாது என விரும்பினால், யாருக்குமே முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்து விடுங்கள்!”

- இமலாதித்தவியல்

03 மார்ச் 2015

அஜீத்தின் இரண்டாவது குழந்தை!

நடிகனோட படுக்கையறை வரைக்கும் போற புத்தி தமிழனுக்கு மாறாவே மாறாது. அஜீத் கல்யாணம் பண்ணின உடனேயே குழந்தை பெத்துக்கலன்னு ஒருமாதிரியா பேசுனாய்ங்க. இப்போ ரெண்டாவது குழந்தையை பெத்தக்கிட்ட உடனே குட்டித்தல, சின்னத்தலன்னு வேறமாதிரி பேசுறாய்ங்க. ஒரு தனிமனிதனின் குடும்பத்திற்கு சம்பந்தபட்ட குழந்தை பெத்ததையெல்லாமா ட்விட்டர் ட்ரெண்ட்ல கொண்டுவரணும்ன்னு துடிப்பாய்ங்க? குழந்தை பெத்துக்கிறதெல்லாம் அவ்ளோ பெரிய சாதனையா என்ன? மன்னராட்சி காலத்திற்கெல்லாம் கூட இளவரசன் பொறந்ததா ஊர் முச்சந்திக்கு வந்து ஒருமுறை தண்டோரா தான் போடுவாய்ங்க. ஆனால் இவிய்ங்க, மூச்சு முன்னூறு தடவ அந்த தாம்பத்ய சாதனையையே பேசிக்கிட்டு கிடக்குறாய்ங்க. ஓர் ஆணும், பெண்ணும் இணைந்தால் குழந்தை பிறக்கத்தான் செய்யும். அதுதான் உடலியல் சார்ந்த மரபு. அந்த காலத்துல நம்ம தாத்தா பாட்டிகயெல்லாம் பத்து பதினைஞ்சு புள்ளக்குட்டிகள பெத்து போடலயா? 

இதை சாதனை மாதிரி பேசுற பொதுபுத்தியை திணிப்பது ஒரு காலத்தில் ஊடகங்களின் பங்கு இருந்தது. ஆனால், இன்னைக்கு நிலைமையே வேற. ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக தளங்களில் விவாதிக்கப்படும் விசயங்களை தான், தொலைக்காட்சி / எழுத்து ஊடகங்களே முன்னிலைப்படுத்துகின்றன. ஆனால், அதை புரிஞ்சிக்காத இவிய்ங்களுக்கெல்லாம் எதை பெருசா பேசணும்? எதை விவாதப்பொருளாக மாத்தணும் என்பதை பற்றியெல்லாம் தெளிவே கிடையாது. யோசிக்காமலேயே இன்னொரு மாநிலத்து காரனை, இன்னொரு மொழி பேசுறவனையெல்லாம் தலையில் வைத்து கொண்டாட மட்டும் தான் இவிய்ங்களுக்கு நேரம் இருக்கு. நடிப்பு என்பது ஒரு கலை சார்ந்த தொழில்; அந்த தொழிலை செய்றவனையெல்லாம் காலம் காலமா தலைவனாக்கித்தானே, இன்னைக்கு தமிழ்நாட்டோட நிலைமையே தலைகீழா கிடக்கு. இனியும் அப்படி நடத்தத்தான் துடிக்கிறாய்ங்க போல.

என்னமோ போய்ங்கய்யா!

02 மார்ச் 2015

மக்களாட்சி அரசியல்!

பிப்ரவரி 24ல் பிறந்தநாள் கொண்டாடிய ஜெயலலிதாவிற்காக வைக்கப்பட்ட ப்ளக்ஸானது, மார்ச்1ம் தேதி பிறந்தாள் கொண்டாடும் ஸ்டாலினுக்காக வைக்கப்பட்டுள்ள ப்ளக்ஸ்க்கு போட்டியாகவே ஒரு வாரமாகியும் இன்னும் கழற்றப்படாமலே இருக்கின்றது. இது ஆளுங்கட்சி அரசியல்.

இதனாலேயே டெல்டா பகுதிகளுக்குட்பட்ட கிராமம்/நகரம் என்ற பாகுபாடின்றி எல்லா ஊர்களிலும், எதிரும் புதிருமாக ஜெயலலிதா - ஸ்டாலின் ப்ளக்ஸ்கள் மட்டுமே தென்படுகின்றன. இது தமிழக அரசியல்
இன்னும் ஓரிரு நாட்கள் கழித்து பெரும்பாலான ப்ளக்ஸ்கள், தன் தலைவன்/தலைவிக்காக கடன் வாங்கி பெருமைக்கு ப்ளக்ஸ் அடித்தவனின் ஓட்டை விழுந்த குடிசைகளை போர்த்தி கொண்டிருக்கும். இது எதார்த்த அரசியல்.

இந்த எதார்த்தத்தையெல்லாம் புரிந்து கொள்ளாமல், இருநூறு ரூபாய்க்கும், ஐநூறு ரூபாய்க்கும் உடலை விற்கும் விபச்சாரி போல, ஓட்டை விற்கும் வாக்களன் இருக்கும் வரை மக்களாட்சி அரசியலிலும் குடிமக்களாகிய நாம் அடிமைகள் தான்.