30 அக்டோபர் 2014

செபஸ்டியன் சைமனின் தேவர் சாதி ஒழிப்பு!

தான் பிறந்த நாளிலிருந்து தனது இறுதி நாள் வரை உ.முத்துராமலிங்கத்தேவர் என்றே சமகால மக்களால் அறியப்பட்டவரின் கையெழுத்து கூட, 'மு.உ.தேவர்' தான். இந்திய அரசியலை தாண்டி, உலகத்தமிழர்களுக்காக ஹிந்து அல்லாத பெளத்தம் உள்ளிட்ட  பல ஆன்மீக சொற்பொழிவாற்ற பல நாடுகளில் கலந்து கொள்ளும் போதும் அவர் உ.முத்துராமலிங்கத்தேவர் தான். உள்ளூர் பள்ளி முதல் உலக நாடுகளுக்கு பயணிக்க தேவைப்படும் கடவு சீட்டு வரை பயன்படுத்திய அவரது பெயரும் உ.முத்துராமலிங்கத்தேவர் தான். அந்த திருப்பெயரை 107 ஆண்டுகள் கழித்தும் இன்றும் உலகெங்கும் பல அரசியல்வாதிகளால் அழைக்கப்படுவதும் உ.முத்துராமலிங்கத்தேவர் என்று தான்!

ஆனால் நேற்றைய மழையில் முளைத்த காளான் போல தமிழக அரசியலில் உருவெடுத்திருக்கும் ’நாம் தமிழர் கட்சி’ மட்டும், தெய்வத்திருமனாரை முத்துராமலிங்கனார் என சுருக்கி தமிழகமெங்கும் போஸ்டர் அடித்திருப்பது கண்டனத்துக்குரியது. பெருந்தமிழனரான பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவரின் பெயரை சுருக்க யாருக்கும் இங்கே உரிமை இல்லை. பெற்றோர் வைத்த ’செபஸ்டியன் சைமன்’ என்ற பெயரை சுருக்கி, தனக்கு தானே ’சீமான்’ என வைத்து கொண்டவரின் தலைமையில் கீழ் இயங்கும் கட்சி எப்படி இருக்கும் என்பதற்கு இதுவும் ஓர் உதாரணம்.

திரு செபஸ்டியன் சைமன் அவர்களே, நீங்க வழக்கம் போல, உங்க சாதிக்கார முதலாளி திரு வைகுண்டராஜனோடும், உங்க சாதிக்கார தொலைக்காட்சி தந்திடிவியோடும், உங்க சாதிக்காரர் திரு. ஆதித்தனார் அன்று உருவாக்கிய நாம் தமிழர் கட்சி என்ற பெயரை காப்பாற்றி கொள்ளுங்கள். எங்களுக்கு ஏற்கனவே தெருவுக்கொரு கட்சி - அமைப்பு -  சங்கம் - பாசறை - கழகம்- இயக்கம்ன்னு எக்கசக்கமா இருக்கு. ஆனாலும் எங்க சாதி கட்சி தேர்தலில் வெற்றி பெறாது. ஏனென்றால் அதிமுகவுக்கு போட்ட முக்குலத்தோரின் ஓட்டு அக்ரிமெண்டே இன்னும் முடியிற மாதிரி தெரியல. அதுனால எங்க ஓட்டு உங்க மாற்று அரசியலுக்கு கிடைக்க வாய்ப்பில்லை.


எனவே, உங்கள் வீட்டு சமையலறையில் மட்டும் இனி களமாடுங்கள். தயவு செய்து, எங்கள் தெய்வத்தின் பெயரோடு விளையாட வேண்டாம். மேலும், நரகாசூரனுக்கும். -, சூரபத்மனுக்கும் வீர வணக்கம் வைப்பதோடு உங்களது தமிழ்தேசியப்பற்றை நிறுத்தி கொள்ளுங்கள். எங்களுக்கு உங்களோட உங்க பொங்கச்சோறும் வேண்டாம்; உங்க சங்காதமும் வேண்டாம்!

- இரா.ச.இமலாதித்தன்

அக்டோபர் 30, 2014 - ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள்!

இந்த அக்டோபர் 30, 2014க்கு தான் எத்தனை வரலாற்று குறிப்புகள்?

01. முதல் முறையாக தமிழரொருவர் முதலமைச்சராக இருந்து, அரசு விழாவான தேவர்ஜெயந்திக்கு அரசு சார்பில் பசும்பொன்னில் மரியாதை.

02. காங்கிரஸில் இருந்து தமிழக தலைவர் ஞானதேசிகன் விலகல்.

03. இலங்கை - மலையக மண் சரிவு விபத்தில் 350 பேர் பலி.

04. இலங்கை நீதிமன்றத்தால் ஐந்து தமிழ்நாட்டு மீனவர்களுக்கு தூக்கு தண்டனை அறிவிப்பு.

05. மதிமுக, பாமக உடன் கூட்டணி அமைந்தால் மகிழ்ச்சியோடு வரவேற்கும் கருணாநிதி.

06. நீதிமன்ற உத்தரவால் வீட்டிலிருந்த படியே பசும்பொன் தேவர் நிழற்படத்துக்கு செல்வி ஜெயலலிதா மலர் தூவி மரியாதை.

07. திரு. சுப்ரமணிய சுவாமி மீதான செல்வி ஜெயலலிதாவின் அவதூறு வழக்கு உச்சநீதிமன்றத்தால் தடை.

08. வைகுண்டராஜனின் நியூஸ் 7 தமிழ் என்ற செய்தி சேனல் அதிகாரபூர்வமாக தொடக்கம்.

இந்த எல்லா செய்திகளும் தனித்தனி செய்தி போல காணப்பட்டாலும், பின்புலத்தில் ஒன்றுக்கொன்று தொடர்புடையது.

- இரா.ச.இமலாதித்தன்.

29 அக்டோபர் 2014

தேவர் ஜெயந்தி வாழ்த்துகள்!

சுதந்திர போராட்ட வீரரும் - ஆன்மிக வாதியும் - பொதுவுடைமை சித்தாந்தத்துடன் கூடிய தேசியத்தலைவருமான, தெய்வத்திருமகனார் பெருந்தமிழர் ஸ்ரீ பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவருடைய குருபூஜை என்ற ஆன்மீக விழாவிற்கு, தமிழ்நாட்டிற்கு முதலமைச்சராக இருக்கும் அதே தமிழ் சாதியை சேர்ந்த சக தமிழரான மாண்புமிகு திரு. ஓ. பன்னீர் செல்வத்தின் பசும்பொன் வருகை என்பது, தமிழ் வரலாற்றில் முதல் முறையாகவும் - மறக்க முடியாத நிகழ்வாகவும் அமைய போகின்றது. இந்த (அக்டோபர் 30, 2014 என்ற) வரலாற்று சிறப்புமிக்க நன்னாளில், அனைத்து தமிழர்களுக்கும் அடியேனின் 'தேவர் ஜெயந்தி' வாழ்த்துகள்!

நாக்கு தமிழ் மணக்கும் நன்னாகையிலிருந்து,
தமிழனாய்...
இரா.ச.இமலாதித்தன்.

சூரசம்ஹாரத்திற்கும் நாகப்பட்டினத்திற்குமான தொடர்பு!

இன்னைக்கு எம்பெருமான் முருகனின் சூர சம்ஹாரம்! அதைப்பற்றி எனக்கு தோன்றிய சிறு ஆய்வு. நாகப்பட்டினமும் கடல் நகரம். திருச்செந்தூரும் கடல் நகரம். மேலும், முருகனின் அறுபடை வீடுகளில் கடலோரத்தில் அமைந்துள்ள ஒரே பிரசித்தி பெற்ற தலமாகவும் திருச்செந்தூர் விளங்குகிறது. இந்த விசயத்தை மையமாக வைத்தே இந்த பதிவு அமைய உள்ளது. மாற்று கருத்துகள் இருந்தால் கூறவும்.

நாகப்பட்டினம் அருகேயுள்ள சிக்கலில் வேல் வாங்கி திருச்செந்தூரில் வதம் செய்யும் நிகழ்வு தான் சூரசம்ஹாரம். சிக்கல் கோவிலுக்கு அருகேயே அரை மைல் தொலைவில் பொரவச்சேரி என்ற பொருள்வைத்தச்சேரி இருக்கு. அங்கு தான் எம்பெருமான் முருகனின் கல்லினால் ஆன மூலவர் சிலையும் இருக்கு. ஆனால், சிக்கல் கோவிலுனுள் ஐம்பொன்னினால் ஆன உற்சவர் மட்டுமே உள்ளது. ஆனால், அந்த உற்சவருக்கும் சூரசம்ஹார நாளில் வேர்வை வியர்க்கும் என்பது காலம் காலமாக நடந்து வரும் அதிசய நிகழ்வு. சிக்கல் - பொரவச்சேரி இது இரண்டு ஊர்களுமே கடலுக்கு அருகே இல்லை. மேலும், நாகப்பட்டினதில் கூட ஆறுமுகனுக்காக தனி ஆலயமாக குமரன் கோவில் நகரத்தின் மைய பகுதியில் இருக்கின்றது. ஆனால், ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான ஒரு முருகன் கோவில் சாமாந்தான் பேட்டை என்ற கடலோர கிராமத்தில் இருக்கின்றது. இந்த கோவிலுக்கு அருகில்தான் நாகப்பட்டினம் ஆட்சியர் அலுவலகமும் இருக்கின்றது.

பிரதான சாலையில் இருந்து சற்று உள்ளடங்கிய அந்த கோவிலுக்கும், சிக்கலுக்கும் ஏறத்தாழ 10 மைல் தொலைவு இருக்கும். அந்த கோவிலில் வள்ளி-தெய்வானை இல்லாமல் எம்பெருமான் திருமுருகன் தனியே போர்கோலத்தில் தான் காட்சியளிக்கின்றார். என் கணிப்பின் படி, சிக்கலில் வேலும் ஆசீர்வாதமும் வாங்கியவுடன் பொருள்வைத்தச்சேரியில் ஆயுத தடவாளங்களை கட்டமைத்து, அப்படியே தரை மார்க்கமாக சாமந்தான்பேட்டைக்கு வந்து அங்கு தங்கிருந்து, பிறகு கடல்வழியாக திருச்செந்தூருக்கு போர்கலங்களோடு எம்பெருமான் முருகனின் கடற்படையினர் பயணித்திருக்க வேண்டும்.

மேலும், எம்பெருமான் முருகன், யாரிடம் வேல் வாங்கினார் என்பது எல்லாருக்கும் பொத்தாம் பொதுவாக பார்வதி என தெரிந்திருக்கும். ஆனால், சிக்கல் கோவிலிலுள்ள பார்வதியின் திருப்பெயர் வேல்நெடுங்கன்னி அம்மன். அந்த வேல்நெடுங்கன்னி அம்மன் தான் காலப்போக்கில் முடவனுக்கு கடலோரத்தில் காட்சியளித்த வேளாங்கன்னி மாதாவாக விளங்கி வருகிறார். இங்கே மதமாற்றம் மனிதனுக்கு மட்டுமல்ல, கடவுளுக்கும் தான் என்பது மாரியம்மன் - மரியே என மருவி விட்ட இந்த விசயத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இந்த வேல்நெடுங்கன்னி என்ற வேளாங்கன்னி மாதாவுக்கும் கடலோரத்தில் தான் சர்ச் என்ற மாதா கோவில் இருக்கின்றது. இந்த முறையில் யோசித்தால், ஒருவேளை சாமந்தான்பேட்டையிலிருந்து வேல் உள்ளிட்ட ஆயுத தடவாளங்களுடன் கிளம்பி, வேளாங்கன்னி என்ற இந்த கடல் வழி மார்க்கமாகவே எம்பெருமான் முருகனின் கடற்படை திருச்செந்தூருக்கு பயணித்திருக்க வேண்டும், அப்போதும் அங்கு பார்வதி காட்சியளித்து எம்பெருமான் முருகனுக்கு ஆலோசனைகளையும், ஆசிகளையும் வழங்கிருக்க கூடும்.

இதுபோலவே, சிக்கலிலுள்ள எம்பெருமான் முருகனின் திருப்பெயர் சிங்கார வேலன் ஆகும். இந்த சிங்கார வேலனுக்கும் ஒரிசாவுக்கும் ஒரு தொடர்புண்டு. அந்த தொடர்பும் போர் சம்பந்தப்பட்டது தான். அதுபோல திருச்செந்தூர் முருகனுக்கும், குன்று இருக்குமிடமெல்ல்லாம் குமரன் இருப்பான் என்பதற்கிணங்க, திருப்பதியிலுள்ள வேல்கொண்ட ஈசனுக்கும் கூட ஒரு தொடர்புண்டு. அதுவும் போர் ஆயுதமான வேல் சம்பந்தப்பட்டது தான். இவையெல்லாம் என்னுடைய தனிப்பட்ட அனுமானங்களே. இவை பொய்யாக கூட போகலாம். எல்லாம் உண்மைகளும் எம்பெருமான் முருகனுக்கே தான் வெளிச்சம்!

வீர வேல்! வெற்றி வேல்!

- இரா.ச.இமலாதித்தன்

28 அக்டோபர் 2014

சாதி அரசியலிலும் கேடி பில்லா கில்லாடி ரங்கா!

அக்டோபர் மாசம் வந்தாலே, ”கேடி பில்லா கில்லாடி ரெங்கா” படத்துல வர இந்த சீன் தான் எனக்கு ஞாபகத்துக்கு வருது. பதவிக்காகவும் புகழுக்காகவும் பணத்துக்காகவும் தான், சாதிக்கட்சிகளின் தலைவர்கள் தொண்டர்களுக்கு பயன்படுகிறார்கள். அந்த இழவுக்காக என்னா பில்டப் கொடுக்குறாய்ங்க? இதுனால தொண்டர்களுக்கும் விளம்பரம், தலைவருக்கும் விளம்பரம்! மற்றபடி ஒட்டுமொத்த சமுதயாத்துக்கு ஒரு புண்ணாக்கும் கிடைக்க போறதில்லை.

மருதுபாண்டியர்களை புறக்கணிக்கும் சீமான்!



இந்த நாம் தமிழர் கட்சி காரய்ங்க, நரகாசுரனுக்கெல்லாம் வீரவணக்கம் ஃப்ளக்ஸ் அடிச்சு சொன்னாய்ங்க. ஆனால், தமிழ் தேசியத்தின் முன்னோடியான மாமன்னர் மருதுபாண்டியருக்கு வீரவணக்க நினைவேந்தல் கூட நடத்துன மாதிரியே தெரியல. இதுதான் தமிழ் தேசிய மாற்று அரசியலா? தீபாவளியே கிடையாதுன்னு சொல்லிக்கிட்டே நிரூபணம் செய்ய முடியாத நரகாசுரனுக்கு வீரவணக்கம் சொல்வீங்க. ஆனால், 500க்கும் மேற்பட்ட அனைத்து சாதி/மத மக்களும் மன்னர்களுக்காக தங்களுயிரையே தந்த அக்டோபர் 24ம் தேதியை வசதியாக மறந்து விடுவீர்கள். ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து தமிழ் தேசியத்தை கட்டமைக்க, 200 வருடங்களுக்கு முன்பான காலத்திலேயே ’வீரசங்கம்’ என்ற அமைப்பை உருவாக்கி, தமிழ் சிற்றரசர்களையும், பாளையக்காரர்களையும் ஒன்றிணைத்த மாமன்னர் மருதுபாண்டியரை மறந்து விட்டதா நாம் தமிழர் கட்சி? தமிழீழ விடுதலைப்புலிகளின் கொரில்லா போர்முறையை, 200 ஆண்டுகளுக்கு முன்பாகவே செயல்படுத்தி காட்டிய மாமன்னர் மருதுபாண்டியர்களை புறக்கணித்ததன் உள்நோக்கம் தான் என்ன?

27 அக்டோபர் 2014

அக்டோபர் 24க்கு பின்னாலுள்ள குழப்பங்கள்!

தமிழ் தேசியம் காத்த மாமன்னர் மருதுபாண்டியரின் 213வது நினைவேந்தல் நாளை அனுசரித்து கொண்டிருக்கும் அனைவரும் காளையார்கோவில் நினைவிடத்திற்கும், திருப்பத்தூர் நினைவிடத்திற்கும் உள்ள தொடர்பை விளக்க வேண்டும்.

01. காளையார்கோவிலில் யாருடைய உடல் உள்ளது?

02. மாமன்னர் மருதுபாண்டியர்களை தூக்கிலிட்ட பிறகு தலைகள் துண்டிக்கப்பட்டனவா?

03. காளையார்கோவிலில் உடலே இல்லையா?

04. காளையார்கோவிலில் வெறும் தலை மட்டும் தான் உள்ளதா?

05. காளையார்கோவிலில் ஆசாரியின் உடல் என சிலர் சொல்வதின் உண்மை என்ன?

06. திருப்பத்தூரில் புதைக்கப்பட்ட உடல்கள் யாருடையது?

07. திருப்பத்தூரில் புதைக்கப்பட்ட உடல்களில் தலைகள் இருந்ததா?

08. அக்டோபர் 24க்கும் அக்டோபர் 27க்கும் உள்ள தொடர்பு என்ன?

09. மாமன்னர் மருதுபாண்டியர்களை தூக்கிலிடப்பட்ட நாளான அக்டோபர் 24ம் தேதியை தானே நாம் அனுசரிக்க வேண்டும்?

10. அக்டோபர் 27ம் தேதியை அனுசரிப்பதன் உள் அரசியல் என்ன?

இந்த பத்து கேள்விகளுக்கும் சரியான விடை தெரியாமல் மாமன்னர் மருதுபாண்டியர் நினைவேந்தலுக்கு ஆண்டுதோறும் விழா எடுத்து மட்டும் என்ன பயன்?

- இரா.ச.இமலாதித்தன்