13 ஆகஸ்ட் 2014

தேசபக்தி என்பது யாதெனில்...


தேசபக்தி என்பது வருடந்தோறும் ஆகஸ்ட் மாதம் ரெண்டாவது வாரமும், ஜனவரி மாதம் மூனாவது வாரமும் ஃபேஸ்புக்ல ப்ரோபைல் போட்டோவை மாத்துறதுனால மட்டும் வரப்போறதில்லை. அது உணர்வு சம்பந்தமானது. அந்த உணர்வை வெறும் லைக்குகளால் மட்டும் அளவிட முடியாது.

இன்னைக்கு பல பேருக்கு காந்தி நேருவை மட்டும்தான் அதிகமாக தெரியலாம். ஏன்னா, காந்திங்கிற பேரு தான் கடந்த  60 வருசங்களாக ஆட்சிக்கட்டிலில் உட்கார்ந்திருக்கு. அந்த காந்திக்கும் இப்போதுள்ள காந்திக்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்பது எவ்வளவு உண்மையோ, அதே அளவுக்கு உண்மை காங்கிரசுக்கும் காந்திக்கும் கூட எந்தவித தொடர்பும் இல்லை என்பதும் தான்.

இன்னும் சொல்லப்போனால் இந்த காங்கிரஸ் என்ற பெயர் கூட இந்தியன்’ன்னு சொல்லிக்கிற யாருக்கும் சொந்தம் கிடையாது. அந்த பேரையும் வெள்ளைக்காரன் தான் உருவாக்கி கொடுத்துட்டு போனான். நாம தான், நேரா கட்டுன வீடு வசதியா இருக்குமேன்னு அதுலயே ஈசியா இவ்ளோ வருசங்களா உட்கார்ந்து காலத்தை ஓட்டிட்டோம்.

இப்போது விசயத்துக்கு வருவோம்.

இங்குள்ள புரட்சியாளர்களுக்கு, காந்தி நேருவை தவிர இந்தியரான பகத்சிங்கையும், இந்தியரல்லாத சே குவேராவையும் கொஞ்சம் பேருக்கு நல்லாவே தெரியும். காரணம் என்னவென்றால், இவங்க ரெண்டு பேரையும்
(DYFI, SFI போன்ற பொதுவுடைமை அமைப்புகள்) கம்யூனிஸ்ட் கைப்பத்தி வச்சுக்கிட்டு புரட்சிங்கிற பெயரில் புடலங்கை வியாபாரம் செய்வதால், இவர்களை அறியக்கூடிய அந்த பாக்கியம் சிலருக்கு கிடைத்துள்ளது.
ஆனால், இந்தியாவுக்கு வெளியே சென்று இந்தியாவை காப்பற்ற இந்திய தேசிய இராணுவத்தை உருவாக்கிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பற்றி பலர் தெரிந்து கொள்ளவே விரும்புவதில்லை. புரட்சி செய்ய வாயளவில் சொன்ன அம்பேத்காரை உள்வாங்கி கொண்ட அளவுக்கு, அந்த புரட்சியை செயலலிலும் காட்டிய நேதாஜியை இவர்கள் துளிகூட நெருங்குவதே இல்லை. இங்கிலாந்து நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை உள்வாங்கி அதை இந்தியாவுக்கு தகுந்தாற்போல ரிமேக் செய்த சட்டமேதை பி.ஆர்.அம்பேத்கார் போற்றப்படும் அளவுக்கு கூட இங்கே நேதாஜி போற்றப்படுவதில்லை என்பதே எதார்த்தம். போற்றுதல் கூட வேண்டாம் குறைந்தபட்சம் அவருக்குரிய அங்கீகாரத்தை கூட கொடுப்பதில்லை என்பது வேதனைக்குரிய விசயம்.
 

“இந்தியா விடுதலைப் பெற்றால்தான் ஆசியாவில் மற்ற நாடுகள் உடனே விடுதலை அடைய முடியும்”  என்ற உயரிய நோக்கோடு களம்கண்ட நேதாஜியின் மந்திரச்சொல்லாக, ”இரத்தத்தை தாருங்கள்; உங்களுக்கு விடுதலையைப் பெற்று தருகிறேன்!” என்ற ஒரு வரியே இருந்தது.  இந்த ஒற்றைச் சொல்லுக்கு கட்டுப்பட்டு நேதாஜி உருவாக்கிய இந்திய தேசிய இராணுவத்தில் பெரும்பான்மையான இடத்தை தமிழர்களே ஆக்கிரமித்து இருந்தனர். இத்தனை தமிழர்கள் ஐ என் ஏவில் சேர, பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் என்ற மாமனிதர் மட்டுமே காரணமாக இருந்தார். இப்படியான பசும்பொன் தேவரின் அன்பையும், ஆற்றலையும், ஆன்மீக உணர்வையும், வீரத்தையும், விவேகத்தையும் கண்டு தன்னுடைய நெருங்கிய தோழனாக்கி கொண்டார் நேதாஜி. ஆனால் இன்றைய நிலைமையோ வேறு; தேசியத்தலைவரான பசும்பொன் தேவரையும் சாதியத்தலைவராக்கி அழகு பார்க்கிறது திராவிட கட்சிகள்.
 
தமிழர்களின் தேசபக்தி மிக்க தாய்நாட்டிற்கான அர்பணிப்பு குணத்தை கண்டு வியந்த நேதாஜி, ”அடுத்த பிறவியில் நான் தமிழனாக பிறக்க வேண்டும்!” என சூளுரைத்தார் என்பது ஒட்டுமொத்த தமிழினத்துக்கே பெருமை சேர்க்கும் விசயமாகும்.

பசும்பொன் உ.முத்துராமலிக்கத்தேவர் - நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இடையிலான அந்த பாசப்பிணைப்பினால் தான், தென் தமிழகத்தின் கடைக்கோடி கிராமங்கள் வரை இன்று புத்தம் புதிதாய் பிறக்கும் குழந்தைகளுக்கும்,  போஸ், நேதாஜி, சுபாஷ் என்ற பெயர்கள் சூட்டப்பட்டு கொண்டிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், மேற்கு வங்காளத்தை விட தமிழ்நாட்டில் தான் அதிக ’நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்கள்’ பெயரளவில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள் என்பதுதான் தமிழர்களுடைய தேசப்பக்தியின் கைமாறு.

1941 ல் சுதந்திர இந்திய மையம் என்ற அமைப்பை தொடங்கி ஆசாத்ஹிந்த் என்ற ரேடியோவையும் உருவாக்கி சுதந்திர தாகத்தை அங்கிருந்த இந்திய மக்களிடம் விதைத்தார். நாட்டுக்கு எனத் தனிக் கொடியை உருவாக்கி, ஜனகனமன பாடலை தேசிய கீதமாக அறிவித்தார். 1943 அக்டோபர் 21ல் சிங்கப்பூரில் நடந்த மாநாட்டில் போஸ், சுதந்திர அரசு பிரகடனத்தை வெளியிட்டார். டிசம்பர் 29 ந் தேதி அரசின் தலைவராகத் தேசியக் கொடியை ஏற்றினார். அவற்றை ஜப்பான், இத்தாலி, ஜெர்மனி, சீனா உட்பட 9 நாடுகள் ஆதரித்தன.

மேலும்,

"நமது சரித்திரத்தில் நாம் சற்றும் எதிர்பாராத நெருக்கடியில் சிக்கியுள்ள இந்த நேரத்தில் உங்களுக்கு ஒரு வார்த்தை கூற விரும்புகிறேன். இந்த தற்காலிக தோல்வியால் மனச்சோர்வு அடைந்து விடாதீர்கள். நம்பிக்கையுடன் இருங்கள். உங்கள் உணர்வுகளை தளர விடாதீர்கள். எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியாவின் எதிர்காலத்தின் மீது நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை தவறாக மதிப்பிட்டு விடாதீர்கள். இந்தியாவை நிரந்தரமாக அடிமைத் தளையில் கட்டிவைக்கும் ஆற்றல் இந்த உலகில் எந்த சக்திக்கும் இல்லை. நீண்ட காலத்திற்குப் பிறகு அல்ல. விரைவில் இந்தியா விடுதலை அடையும். ஜெய் ஹிந்த்!" -
இது 15 ஆகஸ்ட் 1945ல் இந்திய தேசிய இராணவத்திற்காக அவர் வெளியிட்ட இறுதி அறிக்கையின் வரிகள். அந்த வரிகள் சரியாக இரண்டே வருடத்திற்குள் மெய்யாக்கப்பட்டது என்பது வரலாறு.

"ஒரு லட்சியத்துக்காக ஒருவன் மடியலாம்; ஆனால் அவன் மாண்டபிறகு ஆயிரம் பேரை அந்தலட்சியம் பற்றிக்கொள்ளும்; ஒரு மனிதன் வாழ்ந்தான் - லட்சியதிற்க்காக உயிரை விட்டான் என்பதை விட வேறென்ன பெருமை வேண்டும்?” - இது நேதாஜி சிறைச்சாலையில் சாகும்வரை உண்ணாவிரதம் மேற்கொள்ளும் முன் எழுதிய கடிதத்தின் சில வரிகள்.
 

இப்படிப்பட்ட தேசபக்திமிக்க மாபெரும் தலைவனுக்கு பல வருடங்கள் கழித்து 1992ல் ’பாரதரத்னா’ விருதை மத்திய சர்க்கார் கொடுத்தது. ஆனால், நேதாஜியின் குடும்ப உறுப்பினர்களின் எதிர்ப்பாலும், நேதாஜியின் இறப்பு பற்றிய சர்ச்சையினால் உச்சநீதிமன்ற தீர்ப்பாலும் அந்த விருது திரும்ப பெறப்பட்டது. மீண்டும் வேதாளம் முருங்கைமரம் ஏறிவிட்டது போல ஒரு நிகழ்வு ஒருவார காலமாய் நடந்து கொண்டிருக்கின்றது. பாரத பிரதமர் திரு. நரேந்திரமோடி இம்முறை நேதாஜிக்கு பாரத ரத்னா விருதை தந்துவிட ஆர்வமாய் இருக்கின்றார் போல.

ஆனால், தேர்தலுக்கு முன் மோடி தந்த வாக்குறுதிகளான, 'நேதாஜி பிறந்தநாள் தேசப்பக்தி தினமாக அனுசரிக்கப்படும். மேலும் நேதாஜி இறப்பு சம்பந்தமான ரகசிய ஆவணங்கள் வெளிக்கொண்டு வரப்படும்' என்றெல்லாம் சொன்ன வாக்குறுதிகள் கேள்விக்குறிகளாக மட்டும் எஞ்சி நிற்கின்றன. திரு நரேந்திர மோடி அவர்கள், நேதாஜி சம்பந்தப்பட்ட இந்த விசயத்திலும் அரசியல் விளம்பரம் செய்யாமல் சீக்கிரமே உலகே எதிர்பார்க்கும் மர்ம முடிச்சை அவிழ்க்கலாம் என்பது என்னைப்போன்ற சாமானியர்களின் எதிர்பார்ப்பு. எது எப்படியோ, நேதாஜியின் தொண்டர்களுக்கு ஆகஸ்ட் 15 என்பது சுதந்திர தினமல்ல; உண்மையான சுதந்திர தினம் என்பது அக்டோபர் 21 தான்!

- இரா.ச.இமலாதித்தன்

15 ஜூலை 2014

கிங்மேக்கர் காமராஜரின் அரசியல் வரலாறு!

பசும்பொன் தேவரை பிடிக்காதவர்களும், காமராஜரை பிடித்தவர்களும் தவறாமல் படிக்க வேண்டிய பதிவு:-

1936-ல் நகரசபை தேர்தல் நடைபெற்ற இருந்த சமயம், அன்று காமராஜர் விருதுநகரில் ஒரு சாதாரண காங்கிரஸ் தொண்டர். சிறந்த தேச பக்தராகத் திகழ்ந்தார். அன்று வாக்குரிமை உள்ள நாடார் சமூகத்தில் நூற்றுக்கு தொண்ணூறு பேர் ஜஸ்டிஸ் கட்சியில் இருத்தால் நகரசபை தேர்தலில் காமராஜரை நிற்க வைக்க வேண்டுமென பசும்பொன் தேவர் நினைக்கிறார்

ஆனால் காமராஜருக்கு ஓட்டுரிமை இல்லை. காரணம் அவர் பெயரில் எந்த ஒரு சொத்தும் இல்லை. காமராஜரின் தாயார் சிவகாமி அம்மையாரைப் பார்த்து “உங்கள் மகனை தேர்தலில் நிற்க வைக்கப் போகிறேன். உங்கள் பெயரில் உள்ள வீட்டை காமராஜ் பெயரில் எழுதி வையுங்கள்” என்று பசும்பொன் தேவர் கேட்கிறார். யாருக்கு சொத்து இருக்கிறதோ, யார் வரி செலுத்துகின்றாரோ அவர் தான் வாக்காளாராக முடியும். அதனால் தான் பசும்பொன் தேவர் சிவகாமி அம்மையாரிடம் வீட்டை மாற்றி எழுதி வைக்கக் கேட்டார். அதற்கு அந்த அம்மையார் அவர்கள் “எனக்கு இருப்பது இந்த ஒரு வீடு தான். என் மகனை ஓட்டராக்குவதற்காக இந்த வீட்டை அவன் பேருக்கு எழுதிவைக்க முடியாது. எனக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. நானோ விதவை. எங்கள் சாதியில் ஒரு வீடாவது இருந்தால் தான் அந்தப் பெண்ணுக்கு நல்ல இடத்தில் மாப்பிள்ளை கிடைப்பார். என் மகன் காமராஜ் வீட்டுக்கு உதவாத பிள்ளையாக போய்விட்டான். அவனுக்கு எழுதி வைத்துவிட்டு நானும் என் பெண்ணும் தெருவில் நிற்கமுடியாது” என்று காமராஜரின் தாயாரும் மறுத்து விட்டார்.

அதற்கு மேல் பசும்பொன் தேவர் எதுவும் யோசிக்காமல் நான்கு வெள்ளாட்டை விலைக்கு வாங்கி, அதற்கு விருதுநகர் நகரசபையில் காமராஜர் பெயரில் வரி செலுத்தி ரசீதைப் பெற்றுக்கொண்டு ஒரு தகர வில்லையை வரிக் கட்டியதன் அடையாளமாக வெள்ளாட்டின் கழுத்தில் கட்டி விட்டு காமராஜரை வாக்களராக்கி தேர்தலில் நிற்க வைத்து வெற்றி பெற வைத்தார் பசும்பொன் தேவர்.

பின்பொரு சட்டமன்ற தேர்தல் சமயம், இரவோடு இரவாக காமராஜரை காரில் தூக்கி போட்டு பட்டிவீரன்பட்டி சென்று அங்கேயுள்ள சௌந்திரபாண்டிய நாடார் வாழைத் தோப்பில் கொலை செய்து புதைத்துவிட வேண்டும் என்று காமராஜருக்கு எதிரான அரசியல் எதிரிகள் தீட்டிய திட்டம் பற்றிய தகவல் பசும்பொன் தேவருக்கு கிடைக்க, உடனே தேவர் விருதுநகருக்கு வருகிறார். காமராஜரை சந்தித்து "மேலே சொன்னவைகள் உண்மை தானா?" என்று கேட்கிறார். ‘ஆமாய்யா, அப்படித்தான் சொல்கிறார்கள்” என்றார் காமராஜர். அன்று இரவே விருதுநகரில் தேசபந்து மைதானத்தில் பொதுக் கூட்டம். காமராஜருக்கு ஓட்டுக் கேட்டு பசும்பொன் தேவர் பேசினார்.

"இப்போது காமராஜரை கொலை செய்து தீர்த்துக் கட்டி விடலாம் என்று பேசுவதாக கேள்விப்படுகிறேன். காமராஜர் ஏழைத்தொண்டன் என்று இங்கே உள்ள ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் நினைத்தால் அவர்களுக்காக அனுதாபப்படுகிறேன். காமராஜருக்குப் பின்னால் காங்கிரஸ் மகா சபை இருக்கிறது. அதே மகா சபையில் எங்களைப் போல் எந்தவித தியாகத்திற்கும் தயாராக உள்ள கோடான கோடிப் பேர் இருக்கிறார்கள் என்பதை மறந்துவிட வேண்டாம். இதை மீறி காமராஜர் மீது ஒரு ஒரு சிறு துரும்பு படுமேயானால் இங்கே ஜஸ்டிஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வி.வி.ராமசாமி நாடாருக்கு நான் எச்சரிக்கையாகச் சொல்கிறேன். நீங்கள் வீதியில் நிம்மதியாக நடமாட முடியாது. இரும்புக் கவசம் போட்டுக் கொண்டுதான் நடமாட முடியும்” என்று வேகமாகப் பேசினார்.

அந்தப் பேச்சுக்கு பின்னால் பசும்பொன் தேவருடைய ஆதரவாளர்களால் தனது உயிருக்கு ஆபத்து வரலாம், நான் கிராமங்களுக்குப் போய் ஒட்டுக் கேட்கும் பொழுது எனக்கு போலீஸ் பந்தோபஸ்து வேண்டும் எண்டு கலெக்டரிடம் கேட்டும் பலன் இல்லாததால், வி.வி.ராமசாமி நாடார் போட்டியிலிருந்து விலகிக் கொண்டார். காமராஜர் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பசும்பொன் பெருமகனாருடைய ஆதரவு மட்டும் அன்றைக்கு காமராஜருக்கு இல்லாமல் இருந்திருக்குமானால் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பது மாத்திரமல்ல, காமராஜரை ஜஸ்டிஸ் கட்சியினுடைய பெரும்புள்ளிகள் உயிரோடு விட்டு வைத்திருப்பார்களா? என்பது கூட சந்தேகம் தான். கிங்மேக்கர் என்று அழைக்கப்பட்ட காமராஜரையே அரசியலில் அடையாளப்படுத்திய பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் பற்றி பலர் புரிந்து கொள்ளாமல் இருப்பது வேதனையான விசயமே!

- இரா.ச.இமலாதித்தன்

04 ஜூலை 2014

விவேகானந்தரின் பார்வையில் தமிழன்!

"சென்னை மாகாணத்திலிருந்தே (தமிழ்நாட்டிலிருந்தே) தமிழர் இனத்தவர் இயூபிரட்டீசு நதி சென்று 'சுமேரியா நாகரிக'த்தை உருவாக்கி, அதன் பிறகு 'அசிரியா', 'பாபிலோனியா' போன்ற நாகரிகங்களை உருவாக்கினர். அவர்கள் கண்ட வானியல் போன்றவை தொன்மங்களாகி, அத்தொன்மங்களே 'பைபிள்' உருவாக மூலமானது. மலபார் பகுதியில் இருந்த ஒரு தமிழ்ப் பிரிவினர் 'எகிப்திய நாகரிக'த்தை உருவாக்கினர்."

- சுவாமி விவேகானந்தர்

பண்டைய உலக நாகரீக வளர்ச்சியில் தமிழரின் பங்கை தெளிவாக / எளிதாக குறிப்பிட்டு தமிழனை பற்றி நன்றாக புரிந்து கொண்டிருந்த விவேகானந்தரை, பாஸ்கர சேதுபதி என்ற தமிழரும் நன்றாக புரிந்து கொண்டதால் தான், 1893 ல் சிகோகோவில் உரையாற்ற தனக்கு வந்த அழைப்பை விவேகானந்தருக்காக விட்டுக்கொடுத்து வாய்ப்பளித்தார்.

இன்று சுவாமி பரமஹம்ச விவேகானந்தரின் நினைவுநாள்!

- இரா.ச.இமலாதித்தன்

03 ஜூலை 2014

காபா - லீஸ்வரன்!

"அல்லாஹ் விரும்பினால், மெக்காவில் கற்களை வணங்கும் யாத்ரீகர்களை கொல்லுவோம் மற்றும் ஃகாபாவை தரைமட்டமாக்குவோம்" - அபு துராப் அல் முகட்டாசி(ISIL)

மெக்காவிற்கு சென்று, கல்லையும், பெண்ணுறுப்பு போன்ற ஒன்றையும் வணங்கி, வெள்ளை சட்டை, வெள்ளை வேட்டி உடுத்தி, முடிகாணிக்கை செலுத்தி விட்டு வந்தவனின் மனசாட்சிக்கு தெரியும் தாய்மதம் எதுவென்று. எம்பெருமான் கபாலீஸ்வரன் (Kaabahlishwaran) தான் மெக்கா - (Kaabah)காபாவிலும் அருள் பாலிக்கின்றான் என்பதை எப்போது புரிந்து கொள்ள போகிறார்களோ?

- இரா.ச.இமலாதித்தன்

26 ஜூன் 2014

அரசு மருத்துவமனையில் ஒரு நாள்!

நேற்று முழுவதும் நாகப்பட்டினம் அரசு பொது மருத்துவமனையில் தான் என் பொழுது கழிந்தது. என் மச்சானுக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதால், மருத்துவமனையிலேயே அண்ணன் தம்பி மாமன் மச்சான்களோடு அஞ்சு ஆறு பேரா சுத்திக்கிட்டு இருந்தோம். ஒரு பெண் தீக்குளிப்பு, ஒரு இளைஞன் பைக் விபத்து, ஒரு நடுத்தரவயதுள்ளவரின் வெட்டுக்குத்து கேஸ் என மூன்று சம்பங்களை மருத்துவமனை வளாகத்துக்குள் பார்க்க முடிந்தது.

அந்த பெண்ணின் தீக்குளிப்புக்கான காரணம் தெரியவில்லை. சொந்த பந்தமெல்லாம் சேர்ந்து பொம்பளய்ங்களோட அழுகுரலை கேட்கமே மனசுக்கு கஷ்டமா இருந்துச்சு.

பைக் விபத்தில் இறந்தவரின் வயது 30க்குள் தான் இருக்கும். பொலிரோ ஜீப் மோதி ஸ்பாட் அவுட். அண்ணன் தம்பி நண்பர்கள் அப்பா அம்மான்னு எல்லாரும் இறந்த இளைஞனை பற்றி சொல்லி அழும் போது மனசே உடைஞ்சிருச்சு. நண்பர்கள் யார் யாருக்கோ போன் போட்டு "என் தம்பி என்னைய விட்டு போய்ட்டான். என் தம்பி செத்துட்டான்"னு சொல்லி சொல்லி அழும் அண்ணனின் குரலை கேட்டும் ஒவ்வொருத்தனுக்கும் கண்ணில் கண்ணீர் வந்தே தீரும்.

மூனாவது வந்த வெட்டுகுத்து கேஸ்ல, கடப்பாறையால முகத்துல குத்தி இருக்காய்ங்க. அந்த நடுத்தர வயதுள்ளவர் கொஞ்சம் குடிபோதையில் இருந்ததால் படுகாயம் அடைந்திருந்தார். கையில் அரிவாள் வெட்டு, நெத்தியில் கடப்பாறை குத்துயென மிக மோசமான நிலையில் அட்மிட் செய்யப்பட்டார்.

தீக்குளிப்பை தவிர மற்ற இரண்டு சம்பவமும் மது போதையில் வந்தது தான். சாலையோரமெல்லாம் டார்கெட் வைத்து டாஸ்மாக்கை திறக்கும் இந்த அரசாங்கம் பாவத்தை மட்டுமே சம்பாரித்து கொண்டிருக்கின்றது. தமிழன் தினம் தினம் குடிபோதையில் மரணித்து கொண்டிருக்கின்றான்.

ஒரு மணிநேரம் கழித்து என் மச்சான்கள் மூவரும் வா மார்சரி போய் அந்த ரெண்டு பாடியையும் பார்த்துட்டு வருவோம்ன்னு கட்டாயபடுத்தி என்னை பிணவறைக்கு அழைச்சிட்டு போனாய்ங்க. தீக்குளித்த பெண்ணை கண்ணாடி பாக்ஸ்ல வைத்திருந்தனர். ஆக்ஸிடண்ட் ஆனவரை அப்படியே தரையில் போட்டு வைத்திருந்தனர். பிணவறை பூட்டப்பட்டு இருந்தது. ஜன்னலோரம் உறவினர்கள் எல்லாம் அவனது உடலை பார்த்து தேம்பி தேம்பி அழுதவாறு நின்று கொண்டிருந்தனர். அந்த இளைஞனை பெத்த தகப்பன், ஒரு கையில் அந்த இளைஞனின் நண்பனனையும், இன்னொரு கையில் மூத்த மகனையும் இறுக பிடித்து மெதுவாக அந்த பிணவறையை விட்டு தூர அழைத்து வந்தார். அதுவரை அவர் அழவில்லை. மற்ற இருவரும் தான் விடாமல் அழுது கொண்டிருந்தனர். பிணவறையை விட்டு கொஞ்ச தூரம் போனதும் மூனு பேருமே ஒப்பாரி வைத்து அழுததை பார்க்கும் போது என் மனசு வலிக்கிற மாதிரி இருந்துச்சு. இறப்பின் வலியும், இழப்பின் வலியும் என்னால் கொஞ்சம் புரிந்து கொள்ள முடிந்தது.

அநாதை போல அவனது உடல் அந்த பிணவறையில் ஜன்னலோரம் கிடந்த காட்சியை பார்த்து விட்டு. "மனுசனோட வாழ்க்கை இவ்வளவு தான்!" என்று, முரட்டுத்தனமான என் மச்சான்களே என்கிட்ட சொன்னாய்ங்க. நாலு பேருமே கணத்த இதயத்துடன் வெளியேறினோம் பிணவறையை விட்டு!

- இரா.ச.இமலாதித்தன்

25 ஜூன் 2014

இது சாதீய பதிவு: விருப்பமில்லாதவர்கள் புறக்கணிக்கவும்.



இந்த ஃபேஸ்புக் மட்டும் இல்லைன்னா, தேவரின அமைப்புகளின் நிலை என்னவாகிருக்கும்? முக்குலத்தோர்களுக்கு எதிர்காலமே இல்லாமல் அல்லவா போயிருக்கும். நொன்னைங்களா, ஃபேஸ்புக்ல பில்டப் கொடுக்காம, களத்தில் எதாவது உருப்படியா ஒத்துமையா பண்ணலாமே? நாங்க தான் யோக்கியன், நான் தான் பெரியவன் என்பது போல ஈகோ மயிரு மட்டையையெல்லாம் மனசுல வச்சிக்கிட்டு தெருவுக்கொரு அமைப்பு, கட்சி, பேரவை, இயக்கம், கழகம், பாசறைன்னு தொடங்கி சொந்த சாதிகாரனையே நொட்டம் சொல்லாமலாவது இருக்கலாமே? அக்டோபர் மாசமும், தேர்தல் நேரத்துலயும் மட்டுமே வெளியே வர அமைப்புகள் நிரந்தரமாவே கடையை காலி பண்ணியாவது தொலைக்கலாமே? இன்னொரு அமைப்பை குறை சொல்லியே தங்களோட அமைப்பை வளர்க்கலாம்ன்னு நினைக்கிறதுனாலதான் ஒட்டுமொத்த இனமும் கண்டவன் கிட்டயெல்லாம் சந்தி சிரிக்குது. ஃபேஸ்புக்ல மட்டும் பில்டப் தர இவிய்ங்களோட சாதி கட்சியின் நிலையை ஊர்ல போய் பார்த்தால் நாத்தம் தெரியும். இதை சொல்றதுனால நீ என்ன கிழிச்சன்னு என்கிட்ட எவனும் வராத... ஃபேஸ்புக்ல போட்டோவும் அறிக்கையும் மட்டும் போட்டு எந்த அமைப்பையும் நான் நடத்தல. அதுக்காக, அட்லீஸ்ட் எந்த அமைப்புலயாவது உறுப்பினராவது இருக்கியா?ன்னு என்கிட்ட கேள்வி கேட்கவும் முடியாது. ஏன்னா எவனை நம்பியும் எந்த அமைப்பிலயும் சேரவும் முடியல. ஃபேஸ்புக்ல பில்டப் கொடுக்குற முக்கால்வாசி பயலுக காசுக்காக இனத்தை அடமானம் வைக்கிற அயோக்கியனாத்தான் இருக்காய்ங்க. ஏதாவது சாதி அமைப்பில இருந்த மட்டும் தான் தேவன்னு எந்த மண்ணாங்கட்டி கொள்கையும் இல்ல. நான் பிறக்கும் போதே தேவன் தான்!

அட த்த்தூ...

- இரா.ச.இமலாதித்தன்

24 ஜூன் 2014

கவிக்கு வயது 88!

'கவிப்பேரரசு' வைரமுத்து அவர்களை எழுத்து, சமுதாய உணர்வு, தெளிவான பேச்சு, சுயத்தை இழக்காத வெளிப்படையான தன்மை உள்பட பல விசயத்துல முன்மாதிரியாக நான் எடுத்துக்கொண்டாலும், மாமன்னர் மருதுபாண்டியர்களின் ஆளுமைமிக்க வீரத்தை வெளிக்காட்ட "சிவகங்கை சீமை" என்ற திரைக்காவியத்தை தயாரித்து, தமிழால் என்னை ஆட்கொண்ட 'செட்டிநாடு தந்த செல்வர்' 'கவியரசு' கண்ணதாசனின் 88வது பிறந்தநாள் இன்று!